side Add

மனி­தத்­துக்கு மதிப்­ப­ளி­யுங்­கள்

நாட்­டின் இன்­றைய கால­கட்­டத்­தில், அங்­க­வீ­னங்­கள், பார்­வை­யி­ழந்­த­வர்­கள், வலு­வி­ழந்­த­வர்­க­ளென பல்­வேறு வகைப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் எம்­மத்­தி­யில் வாழ்ந்து வரு­வது யாவ­ரும் அறிந்­ததே!

மேற்­கு­றிப்­பிட்­ட­வர்­கள் தமது நாளாந்த வாழ்க்­கை­யில் பல்­வேறு இடை­யூ­று­களை அனு­ப­வித்து வரு­வ­து­டன், அரச அதி­கா­ரி­க­ளி­ட­மாக இருக்­க­லாம் அல்லது தனி­யார் நிறு­வ­னங்­க­ளி­ட­மாக இருக்­க­லாம், தமது குறை­களை, முறைப்­பா­டு­களை, தேவை­களை நேரில் சென்று சந்­தித்து மேற்­கொள்­ளும் வாய்ப்பு அவர்களுக்கு மிக­மி­கக்­கு­றைவே.

இவர்­கள் தமது கோரிக்­கை­களை சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எழுத்­து­மூ­லம் பதி­வுத்­த­பா­லில் எழுதி அனுப்­பி­னால் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள், ஓரிரு வார கால அவ­கா­சத்­தில் குறிப்­பிட்ட கோரிக்­கை ­கள் சரி­யா­ன­வையா? பிழை­யா­ன­வையா? நிறை­வேற்­றப்­பட இய­லுமா? போன்ற தமது கருத்­துக்­களை உரி­ய­வர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­னால் கடி­தம் மூலம் கோரிக்கை அனுப்­பி­ய­வர்­க­ளுக்கு ஆறு­த­லாக அமை­யும். ஒரு­சி­லர் பதில் அனுப்­பினா­லும், பெரும்­பா­லா­னோர் அத்­த­கைய கடி­தங்­களை பரி­சீ­லிப்­ப­தாகக் கொள்ள முடி­ய­ வில்லை. பதி­லும் இல்லை.

இத­னால் கடி­தம் அனுப்­பு­ப­வர்­கள் மிக­வும் மன­வே­தனை அடை­வார்­கள் என்­பதை மறுப்­ப­திற்­கில்லை. தனது கருத்­துக்­க­ளைக் கூற, எழுத எவ­ரொ­ரு­வ­ருக்­கும் உரிமை உள்­ளது. அதற்கு சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னர் சாத­கமா­கவோ, பாத­க­மா­கவோ உரி­ய­வர்­க­ளுக்கு எவ்­வி­தத்­தி­லா­வது பதில் அனுப்­பு­வது மிக­மிக முக்­கி­யம்.

அதுவே ஒரு முறை­யான நிர்­வா­ கத்­துக்கு அழகு. அதை­வி­டுத்து தமக்­குக் கிடைக்­கும் கடி­தங்களைக் குப்­பைக் கூடைக்­குள் போட்­டு­விட்டு, தான்­தோன்­றித் தன­மாக செயற்­ப­டு­வது என்­றுமே ஏற்­றுக் கொள்ள முடி­யாதது. எனவே குறிப்­பாக, மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் அனுப்­பும் கடி­தங்­க­ளுக்கு உரி­ய­வர்­கள் பதில் அனுப்பி, நிர்­வாக நடை­மு­றைக்கு மதிப்­ப­ளித்­துச் செயற்­ப­டு­வது அவ­சி­யம் என்­பதை நிர்­வா­கத் தரப்­புக்­குப் பொறுப்­பா­ன­வர்­கள் மனதிருத்திச் செயற்­ப­டு­தல் அவ­சி­ய­மா­கும்.

You might also like
X