மன்­னிப்பு கோரினார் -சிறைப் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்!!

அவ­ம­திப்­புச் செய்­த­மைக்­கா­கச் சிறைப் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர் வவு­னியா பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி முன்­னி­லை­யில் நேற்று மன்­னிப்­புக் கோரி­னார் என வவு­னியா நகர சபை முதல்­வர் இ.கௌத­மன் தெரி­வித்­தார்.

வவு­னியா சிறைச்­சா­ லைக்கு அரு­கில், வவு­னியா நகர சபைக்­குச் சொந்­த­மான இடத்­தைப் பார்­வை­யி­டு­வ­தற்கு சபை முதல்­வ­ரும், செய­லா­ள­ரும் கடந்த 29ஆம் திகதி சென்­றி­ருந்­த­னர்.

அப்­போது சிறைக் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வர் சபை முதல்­வரை அவ­ம­தித்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அதைக் கண்­டித்து வவு­னி­யா­வில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.

தற்­போது சிறைப் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­கள் மன்­னிப்­புக் கோரி­னர் என்று நகர சபை முதல்­வர் தெரி­வித்­தி­ருந்­தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close