side Add

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் – அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்!!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வுப் பணிகள் மீண்டும் எதிர் வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

-இதே வேளை அகழ்வு பணிகளின் போது, இது வரை 235 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 229 மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

You might also like