மருதமலை முருகன் ஆலயத்துக்கு காணி அன்பளிப்பு!!

யாழ்ப்பாணம் காரைநகர் மருதபுரம் மருதமலை முருகன் ஆலயத்துக்கு 10 பரப்புக் காணி வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.கே. நாதன் நற்பணி மன்றத்தின் பணிப்பாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதனால், தர்மசாதனமாக அந்தக் காணி ஆலயத்துக்கு வழங்கப்பட்டது.

அதற்கான காணி உறுதி காரைநகர் பிரதேச சபை உபதவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனால் கையளிக்கப்பட்டது. அதற்கான நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்யப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர் விஜயராசா, காரை அபிவிருத்திச் சபைச் செயலாளர் நாகராசா, கிருஸ்ணன் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like