மாகா­ணத் தேர்­தல் தொடர்­பான கருத்­துக்­கேள் பத்­தி­ரம் தாக்­கல்!!

அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­னர் தற்­போ­துள்ள தேர்­தல் முறை­யில் (பழைய முறை) மாகாண சபைத் தேர்­தலை நடத்த முடி­யுமா என்ற கருத்­துக்­கேள் பத்­தி­ரம் ஒன்று நேற்று சட்­டமா அதி­ப­ரால் உயர்­நீ­தி­மன்­றில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அரச தலை­வர் தேர்­தலை நடத்­து­வதற்கான ஏற்­பா­டு­கள் தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. தேர்­த­லுக்­கான திக­தி­யும் வரை­ய­றுக்­கப்­பட்டு தேர்­தல்­கள் திணைக்­க­ளம் துரித­மா­கச் செயற்­பட்டு வரு­கின்­றது.

ஆனால் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­னர் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தில் நாட்­டம் கொண்­டுள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

அத­னா­லேயே சட்­டமா அதி­ப­ரால் மேற்­கு­றிப்­பிட்ட கருத்­துக்­கேள் பத்­தி­ரம் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தக் கருத்­துக்­கேள் பத்­தி­ரம் தொடர்­பாக எதிர்­வ­ரும் 23ஆம் திகதி உயர்­நீ­தி­மன்­றில் விசா­ரிக்­கப்­பட்டு, எதிர்­வ­ரும் 6 ஆம் திகதி அரச தலை­வ­ருக்கு அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

நவம்­பர் மாதம் அரச தலை­வர் தேர்­தலை நடத்­தத் தேர்­தல்­கள் ஆணைக்­குழு தயா­ராகி வரு­கின்­றது. எனி­னும் இந்­தக் கருத்­துக்­கேள் பத்­தி­ரம் தொடர்­பான தீர்­மா­னம் கிடைக்­கும்­வ­ரை­யில் அரச தலை­வ­ருக்­கான திக­தி­யைத் தீர்­மா­னிக்­காது ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

You might also like