மாகாண எல்லை வரம்பு அறிக்கை தோற்கடிப்பு

* ஆத­ர­வாக ஒரு வாக்­கும் இல்லை
-* எதி­ராக 139 வாக்­கு­கள்
* அறிக்­கை­யைச் சமர்­பித்த அமைச்­சரே எதிர்த்து வாக்­க­ளிப்பு

மாகா­ண­ச­பைத் தேர்­தல் எல்லை வரம்பு அறிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று ஏக­ம­ன­தா­கத் தோற்­க­டிக்­கப்­பட்­டது. அறிக்­கை­யைச் சமர்­பித்த அமைச்­சர் பைசர் முஸ்­தபா கூட, ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வில்லை. அறிக்­கைக்கு எதி­ராக 139 வாக்­கு­கள் பதி­வா­கி­ன. ஆத­ர­வாக ஒரு வாக்­கும் பதி­வா­க­வில்லை. மக்­கள் விடு­தலை முன்­னணி மாத்­தி­ரம் வாக்­கெ­டுப்­பில் கலந்து கொள்­ளாது புறக்­க­ணித்­தது.

நாடா­ளு­மன்­றம் நேற்று முற்­ப­கல் 10 மணிக்கு பிரதி சபா­நா­ய­கர் தலை­மை­யில் கூடி­யது.
சபா­நா­ய­கர் அறி­விப்பு, பொது­ம­னு­தாக்­கல், வாய்­மூ­ல­வி­டைக்­கான கேள்­விச்­சுற்று, 27-2இன்­கீ­ழான சிறப்­புக் கூற்று விடுப்பு ஆகி­யன முடி­வ­டைந்த பின்­னர் 11.45 மணி­ய­ள­வில் எல்லை வரம்பு அறிக்கை மீதான விவா­தத்தை உள்­ளூ­ராட்சி மற்­றும் மாகாண சபை­கள் அமைச்­சர் பைசர் முஸ்­தபா ஆரம்­பித்து வைத்­தார்.

ஆளும் கட்சி மற்­றும் எதி­ரணி உறுப்­பி­னர்­கள் உரை­யாற்­றிய பின்­னர், மாலை 6.10 மணி­ய­ள­வில் வாக்­கெ­டுப்பு நடத்­து­வ­தற்­கான அறி­விப்பை சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய விடுத்­தார்.
மாகா­ண­ச­பை­கள் எல்லை வரம்பு அறிக்­கையை நாடா­ளு­மன்­றத்­துக்­குச் சமர்­பித்த துறை­சார் அமைச்­சர் பைசர் கூட அறிக்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்­தார். மகிந்த அணி­யி­னர் இதன்­போது ‘வெட்­கம், வெட்­கம்’ என்று கூச்­ச­லிட்­ட­னர்.

புதிய முறை­மை­யில் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்த மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் வாக்­கெ­டுப்­பின்­போது சபைக்­குள் இருக்­க­வில்லை.

ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, மகிந்த அணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், ஈ.பி.டி.பி., இலங்­கைத் தொழி­லா­ளர் காங்­கி­ரஸ் கட்­சி­க­ளின் உறுப்­பி­னர்­கள் எதி­ராக வாக்­க­ளித்­த­னர்.

நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வைக்­கோரி முன்­வைக்­கப்­பட்ட அறிக்கை தோற்­க­டிக்­கப்­பட்­டது. ஆளும் கட்­சி­யால் சமர்ப்­பிக்­கப்­பட்ட யோச­னைக்கு அந்­தக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­களே எதி­ராக வாக்­க­ளிப்­ப­தும், சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­கூட எதிர்த்து வாக்­க­ளிப்­ப­தும் நல்­லாட்­சி­யின் சாத­னை­யா­கும் என்று மகிந்த அணி உறுப்­பி­னர்­கள் கிண்­ட­ல­டித்­த­னர்.

அதே­வேளை, மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பில் பரிந்­து­ரை­க­ளைப் பெற்­றுக் கொள்­வ­தற்­காக தலைமை அமைச்­சர் தலை­மை­யில் ஐவர் அடங்­கிய குழு­வொன்றை சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய விரை­வில் நிய­மிப்­பார் என்று சபா­நா­ய­கர் அலு­வ­ல­கம் தெரி­வித்­துள்­ளது.

அந்­தக் குழு­வின் உறுப்­பி­னர்­கள் எதிர்­வ­ரும் நாள்­க­ளில் பெய­ரி­டப்­ப­ட­வுள்­ள­னர் என்­றும் அவர்­கள் சிவில் அமைப்­பு­களை சார்ந்­த­வர்­க­ளாக இருப்­பார்­கள் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close