side Add

மாட்டிறைச்சி விற்பனைத் தடை!!

யாழ்ப்­பா­ணம்,  நல்­லூர் பிர­தேச சபை எல்­லைக்­குள் மாட்­டி­றைச்சி விற்­ப­னைக்­கான தடை ஆகக்  கு­றைந்­தது 3 மாதங்­கள் வரை­யா­வது நீடிக்­கும் என்று தவி­சா­ளர் தியா­க­மூர்த்தி தெரி­வித்­தார்.

நல்­லூர் பிர­தேச சபை­யின் அமர்வு சபா மண்­ட­பத்­தில் தவி­சா­ளர் தியா­க­மூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

நல்­லூர் பிர­தேச சபை எல்­லைக்­குள் மாட்­டி­றைச்­சியை விற்­பனை செய்ய விதிக்­கப்­பட்ட தடையை நீக்­கு­வதா அல்­லது தொடர்ந்­தும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதா என்­ப­தில் சிக்­கல் நிலை உரு­வா­கி­யுள்­ளது.

எமது பிர­தேச சபை­யின் எல்­லைக்­குள் மாட்­டி­றைச்­சியை விற்­பனை செய்­வதை தடை செய்­யு­மாறு உறுப்­பி­னர் மது­சு­த­னால் கொண்டு வரப்­பட்டு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

இந் நிலை­யில் எமது சபை­யின் எல்­லைக்­குள் வாழும் பல மக்­கள் எமக்கு மாட்­டி­றைச்சி தடையை நீக்கி மறு பரி­சீ­லனை செய்­யு­மாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்­தி­ருந்­த­னர்.அந்த அடிப்­ப­டை­யில் நாம் எவ்­வா­றான நட­வ­டிக்­கையை எடுக்­க­லாம் என

உள்­ளு­ராட்சி திணைக்­க­ளத்­தி­டம் ஆலோ­ச­னையைக் கேட்­டி­ருந்­தோம்.
அதற்கு அவர்­கள் மாட்­டி­றைச்சி வறிய மக்­க­ளின் போசக்­கு­ண வாக காணப்­ப­டு­கின்­றது.இது இலங்­கை­யில் தடை செய்­யப்­ப­டாத உண­வா­க­வும் காணப்­ப­டு­கின்­றது.மேலும் வடக்கு மாகாண சபை­யி­னால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு 1952/16 ஆம் இலக்க 2016 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 2 ஆம் திகதி அர­சி­த­ழில் பிர­சு­ரிக்­கப்­பட்ட நியம விதி­களை எமது திணைக்­க­ளம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

சட்­ட­ரீ­தி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­யத்­தினை தங்­கள் சபை­யின் தீர்­மா­னத்­தி­னால் மறுப்­பது பொருத்­த­மா­னது அல்ல.மேலும் மாட்­டி­றைச்­சிக் கடை­களை நடத்­தாது விடு­வ­த­னால் ஏற்­ப­டும் வரு­மான இழப்­பீட்டுக்கு சபையே முழுப் பொறுப்­பை­யும் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று பதில் அனுப்­பி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் இந்து அமைப்­பு­கள் சில மாட்­டி­றைச்­சிக்கு தொடர்ந்­தும் தடை இருக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்திக் கடி­தம் அனுப்பி உள்­ள­ன.இரண்டு தரப்­பு­க­ளும் தங்­கள் கருத்­துக்­களை கூறி­யுள்­ள­தால் நாம் இதில் கவ­னமாக தீர்க்க மான முடிவினை எடுக்க வேண்டும்.அதற்கு சில காலம் தேவைப்படுவதால் நாம் இது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து மூன்று மாதத்துக்குள் ஓர் முடிவினை அறிவிப்போம்.– என்றார்.

You might also like