மாணவர்களுக்கு சி்ன்னம் சூட்டல்!!

முல்லைத்தீவு மாங்குளம் மத்திய மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

வித்தியாலய முதல்வர் த.யோகானந்தராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக துணுக்காய் கல்வி வலய தமிழ் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் கவிதா சந்திரகுமார் கலந்து கொண்டார்.

நிகழ்வின் கதாநாயகர்கள் பாடசாலையின் பிரதான நுழைவாயிலில் இருந்து மேலைத்தேய மங்கள வாத்திய இசையுடன் பிரதான மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

21 மாணவ தலைவர்கள் சின்னம் சூட்டிக் கெளரவிக்கப்பட்டார்கள்

You might also like