side Add

மாநாட்­டில் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளுக்கு அஞ்­சலி!!

உலகத் தமி­ழா­ராய்ச்சி மாநாட்­டில் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் நினை­வாக அமைக்­கப்­பட்டுள்ளநினைவு தூபி­யில் நேற்­றுக் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது.

1974ஆம் ஆண்டு ஜன­வரி 10ஆம் திகதி வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நான்­கா­வது உல­கத் தமி­ழா­ராய்ச்சி மாநாட்­டின் போது ஏற்­பட்ட அசம்­பா­வி­தத்­தால் 11 அப்­பா­விப் பொது­மக்­கள் கொல்­லப்­பட்­ட­னர்.

அவர்­க­ளின் நினை­வாக வீர­சிங்­கம் மண்­ட­பத்­தின் முன்­பாக நினை­வுத்­தூபி அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நினை­வுத் தூபி­யி­லேயே நேற்று அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

தமிழ் அர­சுக் கட்­சி­யின் நிர்­வா­கச் செய­லா­ளர் ஜே.எக்ஸ்.குல­நா­ய­கம் தலை­மை­யில் இடம்­பெற்ற நிகழ்­வில் யாழ்ப்­பா­ணம் மாந­கர முதல்­வர் இ.ஆனல்ட், பிரதி முதல்­வர் து.ஈசன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் க.சுரேஸ்­பி­றே­மச்­சிந்­தி­ரன், வடக்;கு மாகாண முன்­னாள் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, வடக்கு மாகாண முன்­னாள் உறுப்­பி­னர்­க­ளான எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், அனந்தி சசி­த­ரன், க.சிவ­னே­சன் உள்­ளிட்ட பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

தவ­ரா­சா­வின் உரை
நிகழ்­வில் உரை­யாற்­றிய வட­மா­காண முன்­னாள் எதிர்­கட்­சித் தலை­வர் தவ­ராசா, ஆயு­தப் போராட்­டம் மௌனிக்­கப்­பட்ட பின்­னர் அரசு ஜன­நா­யக விழு­மி­யம் எனும் போர்­வை­யில் தொடர்ந்து தமி­ழர்­க­ளின் உரி­மை­களை அடக்கி ஆளு­கின்­றது.

அர­சின் அடா­வடி தனத்­தால், அதன் ஏவ­லில் நடை­பெற்ற படு­கொ­லையே இந்­தப் படு­கொ­லை­யா­கும். ஆயு­தப் போராட்­டத்­தின் வர­லாறு எழுச்சி கொண்ட சந்­தர்ப்­பத்­தில் இந்­தப் படு­கொலை அமைந்­தது.

உரும்­பி­ராய் பொன்.சிவ­கு­மா­ரன் உள்­ளிட்­டோர் இந்த நிகழ்வு ஒழுங்­க­மைப்­பில் தொண்­டர்­க­ளாக செயற்­பட்­ட­வர்­கள். இந்­தப் படு­கொ­லையை நேரில் கண்டு பொறுக்­க­மு­டி­யாது, இந்த இடத்­தில் சப­தம் எடுத்­தார்­கள் இதற்கு கார­ண­மான அதி­கா­ரி­களை பழி­வாங்­கு­வேன் என சிவ­கு­மா­ரன் எடுத்­துக்­கொண்ட சப­தத்­தால்­தான் அவ­ரும் சாவைப் பின்­னா­ளில் தழு­விக்­கொண்­டார். இந்த நிலை­யில் இருந்து மீட்­சி­பெற வேண்­டு­மா­யின் இன்­றைய சூழ­லுக்கு ஏற்­ற­வாறு எம்மை மாற்றி எமது உரி­மை­க­ளைப் பெற முயற்­சிக்க வேண்­டும் – என்று தெரி­வித்­தார்.

சுரேஸ் பிறே­மச்­சந்­தி­ர­னின் உரை
நிகழ்­வில் உரை­யாற்­றிய சுரேஸ் பிறே­மச்­சந்­தி­ரன், சிறி­லங்கா சுதந்­திர கட்­சி­யின் மிக மோச­மான அடக்­கு­மு­றை­யால் மாநாட்­டுக்கு வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்டு இருந்த போது யாழ்ப்­பா­ணத்­தில் உல­கத் தமி­ழா­ராய்ச்சி மாநாடு கோலா­க­ல­மாக நடை­பெற்­றது. அதனை இலங்கை அர­சால் சகித்­துக்­கொள்ள முடி­ய­வில்லை. அத­னா­லேயே விழா­வின் கடைசி நாளில் பொலி­சார் தேவை­யற்ற விதத்­தில் மேற்­கொண்ட துப்­பாக்­கிச் சூட்­டால் பல உயிர்­கள் படு­கொலை செய்­யப்­பட்­டன.

தமி­ழர்­கள் மீதான அடக்கு முறை­க­ளில் ஒன்­றான இந்­தப் படு­கொலை நடை­பெற்று 45 ஆண்­டு­கள் கடந்த பின்­னர் இன்­றும் தமிழ் மக்­கள் அடக்­கப்­பட்­டுக் கொண்டே இருக்­கின்­றார்­கள். ஆயு­தப் போராட்­டத்­தில் பலர் உயிர் தியா­கம் செய்­தும் பலர் படு­கொ­லை­கள் செய்­யப்­பட்­டும் உள்ள நிலை­யில் கூட தற்­போது உள்ள அர­சு­கூட எமது உரி­மை­களை மறுத்தே வரு­கின்­றது – என்­றார்.

அனந்தி சசி­த­ர­னின் உரை
இலங்­கை­யில் ஜன­நா­ய­கம் என்­பது தெற்­கில் உள்­ள­வர்­க­ளுக்கே உரித்­த­தாக உள்­ளது. தமி­ழர்­க­ளின் உரிமை அனைத்து வகை­க­ளி­லும் மீறப்­பட்டே உள்­ளன. எங்­கள் இனத்­தின் மீதான படு­கொ­லை­க­ளின் நினை­வேந்­தல்­களை கடைப்­பி­டிக்­கத் தடை­கள் இருந்து கொண்டே இருக்­கின்­றன. ஆனா­லும் என்றோ ஒரு­நாள் எங்­க­ளுக்கு நீதி கிடைக்­கும் என நம்பி அதற்­கான செயற்­பா­டு­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்­றோம்.

இவ்­வா­றான நினை­வேந்­தல்­கள் ஊடா­கவே எமக்கு அடுத்து வரும் சந்­த­தி­கள் நாம் எவ்­வா­றான அடக்கு முறைக்­குள் வாழ்ந்­தோம் எத­னால் ஆயுத போராட்­டம் ஆரம்­ப­மா­னது எனும் வர­லாற்றை அறிந்து கொள்ள முடி­யும் – என்­றார்.

You might also like