மாரப்பனவின் கருத்துக்கள்சொல்லிநிற்கும் அர்த்தம்!

ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் கூறு­கின்ற சகல விட­யங்­க­ளை­யும் அப்­ப­டியே ஏற்­றுக்­கொள்­ளப் போவ­தில்லை என்று கருத்­துத் தெரி­வித்­துள்­ளார் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் திலக் மாரப்­பன. அதா­வது ஐ.நாவின் கருத்­துக்­கள், நிலைப்­பா­டு­கள் அனைத்­தை­யும் கைகட்டி, வாய்­மூடி செவி­சாய்ப்­ப­தில்லை, ஏற்­றுக்­கொள்­வ­தில்லை என்­பதே இத­னது சாராம்­சம். இலங்கை சார்பான விளக்­கத்தை ஐ.நா. சபைக்கு வழங்­கு­வ­தற்­கா­கச் செல்­ல­வுள்ள குழு­வுக்கு தலைமை தாங்­கு­கின்­ற­வர் என்ற அடிப்படையில் மாரப்­ப­ன­வின் கருத்து சீர்­தூக்­கிப் பார்க்­கப்­பட வேண்­டி­யது ;அவ­சி­ய­மா­னது ;தவிர்க்­கப்­பட முடி­யா­த­தும்­கூட.

நாடா­ளு­மன்­றின் நேற்­றைய அமர்­வில் எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச மற்­றும் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் திலக் மாரப்­பன இடை­யில் இடம்­பெற்ற விவா­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் மாரப்­பன. ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யின் தீர்­மா­னத்­தி­லி­ருந்து இலங்கை வில­கிச் செல்ல வேண்­டு­மென எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குறிப்­பிட, அதற்கு பதி­ல­ளித்து உரை­யாற்­றிய மாரப்­பன, ஐ.நா. ஆணை­யா­ளர் கூறும் சகல விட­யங்­க­ளை­யும் நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. இரா­ணு­வத்­தின் வச­மி­ருந்த காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வில்­லை­ யென ஐ.நா. ஆணை­யா­ளர் கூறி­யுள்­ளார்.

அதனை ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம். பொறுப்­புக்­கூ­றல் தொடர்­பான செயற்­பா­டு­க­ளுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு வருட கால அவ­கா­சம் கோரி­னோம். அந்­தக் காலப்­ப­கு­தி­யில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விட­யங்­களை நாம் காட்­டி­யுள்­ளோம். அவ்­வாறே இம்­மு­றை­யும் கால அவ­கா­சத்­தைக் கோரி­யுள்­ளோம் என்று தெரி­வித்­துள்­ளார்.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமி­ழர்­க­ளின் நூற்­றுக் கணக்­கான ஏக்­கர்­கள் இன்­ன­மும் படை­யி­ன­ரின் வசம்­தான் உள்­ளன. அது மலை­யில் ஏற்­றி­வைத்த தீபம் போன்று அப்­பட்­ட­மா­னது. அவற்றை விடு­விக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி பல­நூறு நாள்­க­ளாக தொடர் போராட்­டங்­கள் தமி­ழர் தாய­கத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றமை யாவ­ரும் அறிந்­ததே. குறிப்­பாக கேப்­பா­பி­லவு விவ­கா­ரம் இம்­முறை ஐ.நா. சபை­யி­லும் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. இத்­த­கை­ய­தொரு நிலை­யில் விடு­விக்­கப்­பட்ட சிறு நிலப்­ப­ரப்பை எடு­கோள்­காட்டி காணி­வி­டு­விப்பு என்ற விவா­தத்­தையே முடக்­கு­வது அல்­லது முடக்க முயல்­வது பெரும் அபத்­தம்.

காணி விடு­விப்பு மட்­டு­மல்ல இன்­னும் ஏகப்­பட்ட விட­யங்­கள் இவ்­வா­று­தான் இம்­முறை அரங்­கே­ற­வுள்­ளன. மறு­வாழ்வு வழங்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட சில அர­சி­யல் கைதி­க­ளின் விவ­ரங்­கள் முன்­வைக்­கப் பட்டு அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை என்ற பேசு­பொ­ருள் பூசி மெழு­கப்­ப­டும். அதே­போன்று காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக நிறு­வப்­பட்ட அலு­வ­ல­கங்­க­ளை­யும் மிகச் சமீ­பத்­தில் அவசர அவசரமாகத் திறக்­கப்­பட்ட அத­னது கிளை­க­ளை­யும் கார­ணம் காட்டி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திலும் தான் கன­வான் தன்­மை­யு­டன் நடந்­து­கொள்­கின்­றேன் என்று கொழும்பு நியா­யம் செய்­யும். வழக்­கம்­போல் இம்­மு­றை­யும் இதுவே ஐ.நா.வில் இடம்­பெ­ற­வுள்­ளது.

அதையே திலக் மாரப்­பன நாடா­ளு­மன்­றத்­தில் வைத்து சொல்­லா­மல் சொல்­லி­யுள்­ளார். கொழும்­பின் நிலைப்­பாட்­டை­யும், அதன் மெத்­த­னப் போக்­கை­யும், கப­டத் தனத்­தை­யும் ஐ.நா. தெட்­டத்­தெ­ளி­வாக புரிந்­து­கொள்ள வேண்­டும். தனது பிடியை இறுக்க வேண்­டும். அதுவே தமி­ழர்­க­ளின் விருப்­ப­மும்­கூட.

You might also like