side Add

மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு!!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் சர்வதேச மாற்றுத்திறனாளிகளிற்கான ஆசன ஒதுக்கீட்டுக்கான நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் மாவட்டச் செயலர்  எம்.கனீபா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் மற்றும் பொதுமக்கள், சிறப்புத் தேவைக்குட்பட்டவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like