மாற்றுத் திறனாளிகள் தினக் கொண்டாட்டம்!!
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வுகள் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றன.
சங்கத் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக மாந்தை கிழக்கு பிரதேச செயலர் ரஞ்சனா நவரத்தினமும், சிறப்பு விருந்தினராக வேள்ட் விஷன் நிறுவனத் திட்ட முகாமையாளரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
வேள்ட் விஷன் நிறுவனத்தினரால் மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.