மின்சாரம் பயன்படுத்தாமல் வாழ்ந்து வரும் பேராசிரியர்!!

தன் வாழ்நாள் முழுவதும் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் வாழ்ந்து வரும் 79 வயதுடைய பேராசிரியர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

பேராசிரியர் ஹேமா சேன் என்பவர் இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புத்வர் பேத் பகுதியில் வசிப்பவர். இவர் தனது வீட்டில் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறார்.

“நாய், இரண்டு பூனைகள், மங்கூஸ் எனப்படும் கீரிப்பிள்ளை, நிறைய பறவைகள் ஆகியவற்றுக்கு இந்த வீடு சொந்தம். மக்கள் என்னை முட்டாள் என்று அழைப்பார்கள், ஆனால் அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, நான் விரும்பும்படி என் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்” என்கிறார் அவர்.

சாவித்ரி புலே புனே பல்கலைக்கழகத்தில்,. ஹேமா சேன், தாவரவியல் பிரிவில் பட்டம் பெற்றவர். மேலும் புனேவில் உள்ள கார்வேர் கல்லூரியில் பல ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றிவர்.

பல்வேறு வகையான மரங்கள் மற்றும் பறவைகள் உள்ள இடத்தில் அவரின் சிறிய குடிசை அமைந்துள்ளது. தாவரவியல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பல்வேறு புத்தங்களையும் அவர் எழுதியுள்ளார்.

You might also like