மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின்- குடும்பத்துக்கு இழப்பீடு!!

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதி இழப்பீடாக வழங்கப்படும் என்று இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ்ப்­பா­ணம், குப்­பி­ளா­னில் மின்­னல் தாக்கி இரு பெண்­கள் உட்­பட 3 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்­றுப் பிற்­ப­கல் 1.30 மணி­ய­ள­வில் நடந்­துள்­ளது.

உயி­ரி­ழந்­த­வர்­க­ளில் இரு­வர் சகோ­த­ரர்­க­ளா­வர். ஏழாலை தெற்கு, மயி­லங்­காடு ஞான­வை­ர­வர் வீதி­யில் வசிக்­கு­ம் திரு­நா­வுக்­க­ரசு கண்­ணன் (வயது-–48), அவ­ரது சகோ­த­ரி­யான திரு­மதி கந்­த­சாமி மைனா­வதி (வயது-–53), அவர்­க­ளது உற­வி­ன­ரான திரு­மதி ரவிக்­கு­மார் சுதா (வயது-–42) ஆகி­யோரே உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

வடக்­கில் கடும் வெப்­பத்­து­ட­னான கால­நிலை கடந்த சில மாதங்­க­ளாக நில­வி­வ­ரும் நிலை­யில் நேற்று யாழ்ப்­பா­ணத்­தின் சில பகு­தி­க­ளில் மழை பெய்­தது. யாழ்ப்­பா­ணம், குப்­பி­ளான் மயி­லக்­காட்­டி­லும் நேற்று மழை பெய்­தி­ருந்­தது.

அங்­குள்ள தோட்­டம் ஒன்­றில் அந்­தச் சம­யம் 4 பேர் விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­துள்­ள­னர். மழை பெய்ய ஆரம்­பித்­த­தும் அவர்­க­ளில் ஒரு­வர் உணவு எடுத்­துச் செல்­லச் சென்­று­ விட ஏனைய மூவ­ரும் அங்­குள்ள தென்னை மரத்­துக்­குக் கீழே இருந்த கொட்­டகை ஒன்­றுக்­குள் ஒதுங்கி இருந்­துள்­ள­னர்.

அப்­போது அந்­தத் தென்னை மரத்­தில் மின்­னல் தாக்­கம் ஏற்­பட்­டுள்­ளது. மரத்­தின் கீழ் கொட்­ட­கை­யில் இருந்­த­வர்­கள் மின்­னல் தாக்­கத்­தால் பாதிக்­கப்­பட்­டுத் தூக்கி வீசப்­பட்­டுள்­ள­னர்.

மதிய உணவை எடுத்­துத் திரும்­பிய பெண், கொட்­ட­கை­யில் இருந்­த­வர்­கள் தூக்கி வீசப்­பட்­டி­ருப்­ப­தைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்து நிலை­கு­லைந்­துள்­ளார். அவர் சுதா­ரித்து அய­ல­வர்­க­ளுக்­குத் தெரி­வித்த பின்­னரே இந்­தச் சம்­ப­வம் ஏனை­யோ­ருக்­குத் தெரி­ய­வந்­துள்­ளது.

உட­ன­டி­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களை அய­ல­வர்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர். எனி­னும் மூவ­ரும் முன்­னரே உயி­ர­ழந்து விட்­ட­னர் என்று மருத்­து­வர்­கள் உறு­திப்­ப­டுத்­தி­னர்.

அதேவேளை, நேற்று மின்னல் தாக்கத்துக்கு உள்ளான தென்னை மரத்துக்கு அருகில் இருந்த தென்னை மரத்தில் கடந்த ஆண்டு மின்னல் தாக்கம் ஏற்பட்டது என்றும், அதையடுத்து அந்தத் தென்னை தறிக்கப்பட்டது என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

You might also like