மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டநீர் சுத்திகரிப்பு நிலையம் பாவனையற்று!!

திருகோணமலை , சீனக்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள முத்துநகர் கிராமத்தின் பிரதேச மக்களுக்கு சுத்தமான குடி தண்ணீரை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், ஒருவருடம் கடந்த நிலையில் இன்று வரையும் பாவனைக்குட்படுத்தாது மூடப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கடந்த வருடம் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு, அதற்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டன. இது மக்களின் பயன்பாட்டுக்கு விடப்படவில்லை.

சுமார் 3 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டும் மக்களுக்கு பயன்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

You might also like