side Add

முடி­வின்றி நீளும் ஏக்­கி­யராஜ்­ஜிய குழப்­பம்

புதிய அர­ச­மைப்­புக்­கான வரைவு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­டா­விட்­டா­லும்­கூட, கூட்­டாட்சி அர­ச­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­ப­டு­வதை ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி ஒரு­போ­தும் ஆத­ரிக்­காது என்று அறி­வித்­தி­ருக்­கி­றார் முன்­ன­ணி­யின் பொதுச் செய­லர் மகிந்த அம­ர­வீர. எதிர்­வ­ரும் பெப்­ர­வரி மாதம் 4ஆம் திக­திக்கு முன்­ன­தாக புதிய அர­ச­மைப்பு வரைபை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைப்­பது என்று ஐக்­கிய தேசிய முன்­னணி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு உறு­தி­ய­ளித்த நிலை­யில், அதற்கு முழு எதி­ரான நிலைப்­பாட்டை எடுப்­ப­தில் சுதந்­தி­ரக் கட்­சியை முதன்மை அணி­யா­கக் கொண்ட சுதந்­திர முன்­னணி தீவி­ர­மாக உள்­ளது. அத­னோடு இணைந்து கொண்­டுள்ள மகிந்த அணி­யி­னர் ஏற்­க­னவே அந்த நிலைப்­பாட்டை எடுத்­து­விட்­ட­னர்.

தமது முன்­னணி ஆத­ர­வ­ளித்த மகிந்த தரப்­பி­னர் மீண்­டும் ஆட்­சியை, அதி­கா­ரத்­தைப் பிடிப்­ப­தைத் தடுத்து, எதிர்த்து, கடு­மை­யாக நீதிப் போராட்­டம் நடத்தி ரணிலை மீண்­டும் அரி­யா­ச­னம் ஏற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரின் தீர்வை எதிர்ப்­ப­தில், அது­வும் மிகத் தீவி­ர­மாக எதிர்ப்­ப­தில் தவ­றே­தும் இல்லை என்­கிற தொணி, இன்­னும் சொல்­லப்­போ­னால் கூட்­ட­மைப்­பின் இந்­தச் செய­லுக்­கான எதிர்ப்பை வெளி­ப­டுத்­தும் தொனி மகிந்த, மைத்­திரி தரப்­பி­டம் இருந்து வெளிப்­ப­டு­கின்­றது.

அதற்­காக முத­லில் அவர்­கள் புதிய அர­ச­மைப்பு முயற்­சியை முழு­மை­யாக ஆத­ரித்­தார்­கள் என்று எடுத்­துக்­கொண்­டு­வி­டக்­கூ­டாது. இதே எதிர்ப்பை நாசூக்­காக வெளிப்­ப­டுத்தி வந்­தார்­கள். முட்­டுக்­கட்­டை­க­ளைப் போட்டு காலத்­தைக் கடத்தி வந்­தார்­கள். இந்த முயற்­சியை முறி­ய­டிப்­ப­தற்­கா­க­வும்­தான், ஐப்­பசி 26 அர­சி­யல் குழப்­பம் உரு­வாக்­கப்­பட்­டது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரனே ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தார் என்­ப­தை­யும் கவ­னத்­தில்­கொள்ள வேண்­டும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தமக்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை என்­ப­த­னால், இப்­போது வெளிப்­ப­டை­யா­கவே தமது எதிர்ப்பை, காழ்ப்­பு­ணர்வை வெளிக்­காட்­டு­கின்­றார்­கள். அவ்­வ­ளவே!

மைத்­திரி – மகிந்த தரப்­பி­னர் அதி­கா­ரத்தை மீண்­டும் முழு­மை­யா­கக் கைப்­பற்­று­வ­தற்­குக் கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை என்­கிற கோபத்­தில் அவர்­கள் எதிர்க்­கி­றார்­கள் என்­றால், கூட்­ட­மைப்பு தானா­கவே முன்­வந்து போராடி, எதிர்க்­கட்­சி­யில் இருந்­தா­லும் ஆளும் கட்­சிக்கு ஆத­ர­வ­ளித்து ஆட்­சி­யைப் பறித்து ஒப்­ப­டைத்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் அவ­ரது கட்­சி­யி­ன­ரும்­கூட கூட்­ட­மைப்­புக்­குச் சாத­க­மான நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­த­வில்லை என்­ப­து­தான் மிகப் பெரும் சோகம்.

“ஏக்­கிய ராஜ்­ஜிய” என்­கிற சிங்­க­ளப் பதத்­தின் கருத்து தமி­ழில் ஒரு­மித்த நாடு­தான் என்று தமி­ழர்­களை நம்­ப­வைப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தலை­யால் நடக்­கும்­போதே, அது அப்­ப­டி­யல்ல, ஏக்­கிய ராஜ்­ஜிய என்­பது ஒற்­றை­யாட்சி என்­ப­தைத்­தான் குறிக்­கும், இந்த அர்த்­தம் மாறு­பட்­டு­வி­டா­மல் சிங்­க­ளம், தமிழ் என இரு மொழி­க­ளி­லுமே எழு­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் சபை முதல்­வ­ரு­மான லக்ஸ்­மன் கிரி­யெல்ல தெரி­வித்­தி­ருந்­தார்.

கண்­டி­யில் மாக­நா­ய­கர்­க­ளைச் சந்­தித்த தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இப்­ப­டித் தெரி­வித்­த­தைத் தொடர்ந்து, கிரி­யெல்­ல­வின் கருத்­தும் வந்­தி­ருப்­பது இந்த விட­யத்­தில் தமி­ழர்­கள் எதிர்­பார்க்­கும் திசையை நோக்­கி­யல்­லா­மல் பெரும்­பான்­மைச் சிங்­கள, பௌத்த வாக்­கா­ளர்­க­ளின் திசை­நோக்­கியே நகர்­வு­கள் இருக்­கும் என்­ப­தைத் தெளி­வாக்­கு­கின்­றது.

ஏக்­கிய ராஜ்­ஜிய என்­பது மும்­மொ­ழி­க­ளி­லும் அப்­ப­டியே குறிப்­பி­டப்­ப­டும் என்­பதை மகா­நா­ய­கர்­க­ளி­டம் கூறி­ய­தான் ஒரு­மித்த நாடு என்­ப­தும் மும்­மொ­ழி­க­ளி­லும் அப்­ப­டியே குறிப்­பி­டப்­ப­டும் என்­ப­தைக் கூற மறந்­து­விட்­டேன் என்று ஒரு விளக்­கத்தை தலைமை அமைச்­சர் தெரி­வித்­தார் என்­றொரு விளக்­கம் வழங்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது. தொடக்­கத்­தில் இருந்தே இது­போன்று மீனுக்­குத் தலை­யும் பாம்­புக்கு வாலும் காட்­டும் விளை­யாட்­டுக்­கா­கத்­தான் ஏக்­கிய ராஜ்­ஜிய என்­கிற சொல்லை மாற்ற மறுக்­கி­றார்­கள் என்று சுட்­டிக்­காட்­டப்­பட்டு வந்­தது. அதை மறு­த­லித்­த­வர்­கள் இப்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க சொல்­லும் விளக்­கத்தை ஏற்­றுக்­கொள்­வது என்­பது அபத்­தத்­தி­லும் அபத்­தம்.

இது­போன்று இரு தரப்­புக்­கும் ஏதோ ஒன்­றைச் சொல்லி எப்­ப­டி­யா­வது ஓர் அர­ச­மைப்­பைப் புதி­தா­கக் கொண்டு வந்­து­வி­ட­லாம் என்று இந்த அர­சி­யல்­வா­தி­கள் நினைத்­தால் அது ஒரு­போ­தும் அடிப்­ப­டைப் பிரச்­சி­னைக்­கான தீர்­வாக இருக்­காது. பதி­லுக்கு பிரச்­சி­னையை மேலும் சிக்­க­லா­ன­தா­கவே ஆக்­கி­வி­டும்.

You might also like