முதல் உலகக்கிண்ணத்தை கைப்பற்றுமா போர்த்துக்கல்?

உல­கக் கிண்­ணத் தொட­ருக்­கான தகுதிச் சுற்­றில் ‘பி’ பிரி­வில் இடம்­பி­டித்த போர்த்­துக்­கல் அணி தனது முதல் ஆட்­டத்­தில் 0:2 என்ற கோல் கணக்­கில் சுவிற்­சர்­லாந்­தி­டம் தோல்வி கண்­டது. ஆனால் அதன் பின்­னர் விளை­யா­டிய 9 ஆட்­டங்­க­ளி­லும் வெற்­றி­களைக் குவித்து 27 புள்­ளி­க­ளு­டன் எந்­த­வித சிர­ம­மும் இல்­லா­மல் ரஷ்ய உல­கக் கிண்­ணத் தொட­ருக்­குள் நுழைந்­தது.

தகு­திச் சுற்று ஆட்­டங்­க­ளில் 32 கோல்­கள் அடித்த போர்த்­துக்­கல் அணி வெறும் 4 கோல்­களை மட்­டுமே வாங்­கி­யது. அணித் தலை­வ­ரும் நட்­சத்­திர வீர­ரு­மான கிறிஸ்­ரி­யானோ ரொனால்டோ, ஆந்த்ரே சில்வா கூட்­டணி 24 கோல்­களை அடித்து மிர­ளச் செய்­தி­ருந்­தது.

ஐரோப்­பி­யச் சம்­பி­யன்

கடந்த 2014ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் சான்­டோஸ் பயிற்­சி­யா­ள­ராக பொறுப்­பே ற்ற பிறகு போர்த்­துக்­கல் அணி இது­வரை 24 ஆட்­டங்­க­ளில் விளை­யாடி 20 வெற்­றி­க­ளைப் பெற்­றுள்­ளது. அதி­லும் முக்­கி­ய­மாக 2016ஆம் ஆண்டு நடை­பெற்ற யூரோ கால்­பந்­துத் தொட­ரில் சம்­பி­யன் கிண்ணம் வென்­றது போர்த்துக்­க­லின் அணி­யின் நம்­பிக்­கையை மேலும் அதி­க­மாக்கி உள்­ளது.

ரொனால்டோ எனும் இம­யம் 2014ஆம் ஆண்டு உல­கக் கிண்­ணத் தொட­ருக்­குப் பின்­னர் போர்த்­துக்­கல் அணி 2 ஆட்­டங்­க­ளில் மட்­டுமே உப­கா­ல­மாக போர்த்­துக்­கல் அணி தற்­காப்பு ஆட்­டத்­தில் அதிக கவ­னம் செலுத்­து­வ­தால் புதிய படைப்­பாற்­றல் இல்­லா­மல் உள்­ளது.

சென்­டர் பேக் பொசி­ச­னில் விளை­யா­டக்­கூ­டிய 35 வய­தான பெபெ, உல­கக் கிண்­ணத் தொட­ரில் முக்­கிய பங்கு வகிக்­கக்­கூ­டும். அவ­ரு­டன் புரூனோ ஆல்வ்ஸ் (வயது-36), ஜோஸ் போன்டி (வயது-34) ஆகி­யோர் இணைந்து செயற்­பட வாய்ப்பு உள்­ளது. விங்­க­ரான ரிக்­கார்டோ குரே­சி­மா­வும் (வயது-34) சிறந்த பங்­க­ளிப்­புச் செய்­யக்­கூ­டும். கடந்த 4 வரு­டங்­க­ளில் அணி­யில் உள்ள மற்ற வீரர்­க­ளை­விட இவர்­தான் கோல் அடிக்க அதி­க­ள­வில் உதவி புரிந்­துள்­ளார்.

நட்­சத்­திர வீர­ரான ரொனால்டோ தேசிய அணிக்­காக இது­வரை 148 ஆட்­டங்­க­ளில் விளை­யாடி 81 கோல்­கள் அடித்­துள்­ளார். இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பு யூரோ கிண்­ணத்தை போர்த்­துக்­கல் அணி வென்­ற­தில் ரொனால்டோ முக்­கிய பங்­க­ளிப்பு செய்­தி­ருந்­தார். தொழில் ரீதி­யான ஆட்­டங்­க­ளில் ரியல் மட்­ரிக் அணிக்­காக அற்­பு­த­மாக விளை­யா­டும் ரொ னால்டோ, முதன்­மு­றை­யாக தேசிய அணிக்­காக பெரிய அள­வி­லான தொட­ரில் சம்­பி­யன் பட்­டம் வென்று கொடுத்­தது அனை­வ­ரை­யும் சற்று வியக்க வைத்­தி­ருந்­தது.

5 முறை பிபா­வின் சிறந்த வீரர் விருதை வென்­றுள்ள 33 வய­தான ரொ னால்டோ இம்­முறை தேசத்­தின் கனவை நிறை­வேற்ற சிறந்த பங்­க­ளிப்பை வழங்க வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ளார்.

ஆனால் உல­கக் கிண்­ணத் தொடர்­க­ளில் ரொனால்டோ இது­வ­ரை­யி­லும் பெரிய அள­வில் சோபித்­தது இல்லை. 2006, 2010 மற்­றும் 2014 என மூன்று உல­கக் கிண்­ணத் தொடர்­க­ளில் விளை­யா­டி­யுள்ள அவர், மொத்­தம் 13 ஆட்­டங்­க­ளில் வெறும் 3 கோல்­கள் மட்­டுமே அடித்­துள்­ளார். தொழில் ரீதி­ரி­யான ஆட்­டங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது அவ­ரது தர­நி­லைக்கு குந்­த­கம் விளை­விக்­கக்­கூ­டி­ய­து­தான்.

தொழில் ரீதி­யி­லான ஆட்­டங்­க­ளில் ரொனால்டோ இந்த சீச­னில் பிரி கிக்­கில் சோபிக்­க­வில்லை. அதா­வது பொக்­ஸூக்கு வெளியே வைத்து பந்தை அவர் உதைத்­த­தில் ஒரு­முறை கூட கோல் விழ­வில்லை என்­பது ஏமாற்­றம் அளிக்­கக்­கூ­டிய விட­யம்­தான். ஆனால் அதே­வே­ளை­யில் ஜூவெண்­டஸ் அணிக்கு எதி­ரான காலி­று­தி­யில் ‘பைசைக்­கிள் கிக்’ முறை­யில் கோல் அடித்து அனை­வ­ரை­யும் திகைக்க வைத்­தார்.

உல­கின் சிறந்த வீரர் என்ற புகழை பெற்ற ரொனால்­டோ­வுக்கு உல­கக்­கிண்­ணம் என்­பது இது­வரை எட்­டாக் கனி­யா­கவே இருந்து வரு­கி­றது. இந்­தச் சோகத்­துக்கு அவர், இம்­முறை முடி­வு­கட்ட முயற்­சிக்­கக் கூடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close