முத்­துவைத் தனது கலைத்­துறை வாரி­சாக – திரைத்­து­றை­யில் அறி­மு­கம் செய்­தார்!!

0 22

பகுதி-30

கரு­ணா­நி­தி­யின் மனைவி, – துணைவி சர்ச்­சை­கள் மெல்­லத் தணிந்­தன. புின்­நா­ளில் அவர் கலந்து கொள்­ளும் பொது நிகழ்­வு ­க­ளில் மனைவி, -துணைவி என்ற விதத்தில் இரு­வ­ரும் கலந்து கொண்­டார்­கள்.

இருப்­பி­னும் ஜெய­ல­லிதா தமது தேர் தல் பரப்புரைகளி­ல், தான் தமி­ழக மக்­க­ளுக்­காக தனது வாழ்க்­கையை அர்ப்­ப­ணித்­துள்­ள­தா­க­வும், கரு­ணா­நிதி தமது குடும்­பத்­துக்காகத்தான் எல்­லா­வற்­றை­யும் செய்­வ­தா­கவும் குறிப்­பி­டு­வார். அதற்கே அவ­ ருக்கு நேரம் போதாது என்றும் குறிப்­பி­டு ­வார். கடந்த ஏப்­ரல் மாதம் கரு­ணா­நி­தி­யின் துணை­வி­யா­ரின் மகள் கனி­மொழி குறித்து சர்ச்சை கிளம்­பி­யது. தற்­போது மத்­தி­யில் ஆட்­சி­செய்­கின்ற பார­திய ஜன­தாக்­கட்­சி­யின் தேசி­யத் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான தமி­ழ­கத்­தைச் சேர்ந்த ஹெச்.ராஜா தெரி­வித்த கருத்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.

ஒரு கல்­லூ­ரி­யின் பேரா­சி­ரி­யர் ஒரு­வர், அந்தக் கல்லூரியில் கற்கும் மாண­வி­
க­ளுக்குப் பாலி­யல் வலை விரித்த விட­யம் அம்­ப­லத்­திற்கு வந்­தது. அது குறித்து ஒரு சந்­தர்ப்பத்­தில் தமிழ்­நாடு ஆளு­நர் பன்­வா­ரி­லால் புரோ­ஹித்­தி­டம் செய்­தி­யா­ளர்­கள் கார­சா­ர­மாக கேள்­வி­களை எழுப்­பி­னர். அந்தச் சந்­திப்­பின் முடி­வில்,‘‘தி வீக்’’ ஆங்­கில இத­ழின் செய்­தி­யா­ளர் லட்­சுமி சுப்­பி­ர­ம­ணி ­யத்­தின் கன்­னத்­தில் ஆளு­நர் தட்­டி­விட்­டுச் சென்­றார். அது பின்­னர் சர்ச்சை ஆனது. அப்­போது,இந்­திய மாநி­லங்­கள் அவை உறுப்­பி­னர் கனி­மொழி இந்த விவ­கா­ரத்­தில் ஆளு­ந­ருக்கு எதி­ராக பத்­தி­ரி­கை­யா­ள­ருக்கு ஆத­ரவு தெரி­வித்­தார். இதை­யொட்டி பார­திய ஜன­தாக்­கட்­சித் தேசி­யத் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான ஹெச்.ராஜா தனது கீச்­ச­கப் பக்­கத்­தில் இவ்­வாறு தெரி­வித்­தார்,

தமது கள்ள உற­வில் பெற்­றெ­டுத்த கள்­ளக் குழந்­தையை (illegitimate childd)
மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ராக்­கிய தலை­வ­ரி­டம், ஆளு­ந­ரி­டம் கேட்­டது போல் நிரு­பர்­கள் கேள்வி கேட்­பார்­களா. மாட்­டார்­கள்தானே, என்று பதி­விட்டிருந்தார். இது குறித்து பல்­வேறு தரப்­பி­ன­ரும் கண்­ட­னங்­க­ளைத் தெரி­வித்­த­னர். காங்­கி­ரஸ் மூத்த தலை­வ­ரான ப.சிதம்­ப­ரம் தனது கீச்­ச­கப் பதி­வில்,கள்­ளக் குழந்தை என எவரும் இல்லை. எல்­லாக் குழந்­தை­க­ளுமே நல்­ல குழந்­தை­கள்தான். பா.ஜ.க இதில் தனது
நிலையைத் தௌிவு­ப­டுத்­துமா? எனக் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். இதன் வழி,

தனது 94 வய­தி­லும் கரு­ணாநி தனது திரு­ம­ ணத்­திற்­குப் பிறம்­பான உறவு பற்­றிய சர்ச்­சை­களை எதிர் கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.

இந்­தி­யா­வி­லேயே மத்­தி­யி­லும், மாநி­லத்­தி­லும் பொறுப்­பான பத­வி­களை அதி­கம் பேர் வகித்த ஒரே குடும்­பம் என்­றால், அது கரு­ணா­நிதி குடும்­பம் மட்­டுமே.
கரு­ணா­நி­தி­யின் சகோ­த­ரி­யின் மகன் முர­சொலி மாறன், தன்­னு­டைய வாரி­சுக்­கள் மு.க. முத்து, மு.க.ஸ்டாலின், அழ­கிரி, கனி­மொழி, தமி­ழ­ரசி, செல்வி தொடங்கி மூன்­றாம் தலை­மு­றை­யான தயா­நிதி மாறன் என நீண்ட வாரிசு அர­சி­யல் தொடர்­கி­றது. இப்­போது மு.க.ஸ்டாலின் மகன் உத­ய­நிதி ஸ்டாலின் வரை இந்த வாரிசு அர­சி­யல் கொடி­போலப் படர்ந்து வரு­கி­றது.

கரு­ணா­நி­தி­யின் மூத்த மனைவி பத்­மா­வதி. இவர்­க­ளது மகன் மு.க.முத்து. தந்­தை­யின் கலை­யு­லக வாரி­சாக திரைத்­து­றை­யில் கால் பதித்­தார். 1972-ஆம் ஆண்டில் தனது மகன் மு.க.முத்­துவை “பிள்­ளையோ பிள்ளை’’ திரைப்­ப­டத் தின் மூலம் கலை­யு­ல­குக்கு அறி­மு­கம் செய்து வைத்­தார் கலை­ஞர். “அஞ்­சு­கம் பிக்­சர்ஸ் தயா­ரிப்­பில் ‘‘கிருஷ்ணன்-­­ பஞ்சு’’ இயக்­கத்­தில் உரு­வான இந்தப் படத்­தின் சிறப்­புக் காட்­சி­யில் பங்கு பெற எம்.ஜி.ஆர் வந்­தி­ருந்­தார்.

அப்­போது,”புரட்சி நடி­கர் எம்.ஜி.ஆர்­தான் என் ஆசான்” என்று மு.க.முத்து பேசி­னார். அந்த விழா­வில் பேசிய கரு­ணா­நிதி,”துரோ­ணாச்­சா­ரி­யாரை ஆசா­னா­கக் கொண்டு ஏக­லை­வன் வில் வித்­தை­யிலே தேர்ச்­சிப் பெற்­ற­தைப் போல, இங்கே எம்.ஜி.ஆரை ஆசான் என்று கூறிய முத்து அப்­ப­டிப்­பட்ட புக­ழை­யும் சிறப்­பை­யும் பெற வாழ்த்­து­கி­றேன்” என்­றார்.

இறு­தி­யாக மு.க.முத்­துவை வாழ்த்­திப் பேசி­னார் எம்.ஜி.ஆர்,”என்னை ஆசா­னாக ஏற்­றுக் கொண்­டி­ருப்­ப­தாக தம்பி மு.க. முத்து பேசி­னார். அதைக் கேட்­டுப் பெரு­மைப்­ப­டு­கி­றேன்.ஆனால் முத்து ஒரு நாள் கூட என்­னி­டம் நடிப்­புக்­காக வந்­த­தில்லை. ஏக­லை­வன் மான­சீ­க­மா­கக் குருவை எண்ணி வித்­தை­யில் தேர்ந்­தான் என்­பது போல, என் படங்­க­ளைப் பார்த்து அதன்­படி நடிக்க விரும்­பு­கி­றார் முத்து என்று எண்­ணுகி­றேன்.

ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் ஒவ்வொரு தனித்­தன்மை- நடிப்பு இருக்­கி­றது. அதில்­தான் செல்ல வேண்­டும். முத்து தனக்­கென்று தனி வழியை நடிப்­ப­தற்கு வகுத்­துக் கொண்டு நடி­க­ராக , வளர வேண்­டும் என்று வாழ்த்­து­கி­றேன் என்­றார் எம்.ஜி.ஆர். பின்­னர் கரு­ணா­நி­தி­யின் மூத்த மகன் முத்து, பூக்­காரி, பிள்­ளையோ பிள்ளை, சமை­யல்­கா­ரன், அணையா விளக்கு என பல படங்­க­ளில் நடித்­தார். அப்­போது அவர் தி.மு.க-வில் இருந்­தார். எம்.ஜி.ஆரின் நடை உடை பாவ­னை­களை நடிப்­பில் பிர­தி­ப­லித்­தார்.

அதைத் திட்­ட­ மிட்­டுக்­கொ­டுத்­த­தும் கரு­ணா­நி­தி­தான் எனக் கூறப்­ப­டு­கி­றது. தனது மகன் மூலம் தனது புக­ழுக்கு பங்­கம் விளை­விக்க கரு­ணா­நிதி எடுக்­கும் அஸ்­தி­ரம் தான் அது என எம்.ஜி.ஆர்­உ­ணர்ந்­தி­ருக்­கி­றார். பின்­னர் எம.ஜி.ஆர் தனிக்­கட்சி தொடங்க இது­வும் ஒரு கார­ணம் என்­கி­றார்­கள். ஆனால் பின்­னா­ளில் கரு­ணா­நி­திக்­கும் அவர் மகன் முத்­து­வுக்கும் இடையே கருத்­து­வே­று­பா­டு­கள் ஏற்­பட்­டன. ஒரு தடவை முத்து, ஜெய­ல­லி­தா­வைச் சந்­தித்து. வறு­மை­யில் தான் வாடு­வ­தா­கச் சொல்லி ஐந்­து­இ­லட்­சம் பணத்­தைப் பெற்­றுக்­கொண்­டார்!. இது கரு­ணா­நி­திக்கு பெருத்த அவ­மா­ன­மாக இருந்­தது. நான் அடைந்­த­தி­லேயே மிகக் கேவலமான அவ­மா­னம் அது என்­றார் கரு­ணா­நிதி.

(தொட­ரும்)

You might also like