முன்னாள் போராளிகளுடன் -கனேடியத் தூதுவர் சந்திப்பு!!

ஆட்சி மாற்­றத்­தின் பின்­ன­ரான நிலமை குறித்து முன்­னாள் போரா­ளி­க­ளி­டம் இலங்­கைக்­கான கனே­டி­யத் தூது­வர் கேட்­ட­றிந்து கொண்­டார் என்று, ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி விடுத் ­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதுக்­கு­டி­யி­ருப்பு கைவே­லி­யில் அமைந்­துள்ள ஜன­நா­ய­க­ப் போ­ரா­ளி­கள்­கட்­சி­யின் தலை­மைச்­செ­ய­ல­கத்­தில் நேற்று கனடா உயர் ஆணையர் டேவிட் மெகி­ன­னுக்­கும் போரா­ளி­க­ளுக்­கும் இடை­யே­யான சிறப்புச் சந்­திப்­பொன்று நடை­பெற்­றது.

ஐப்­பசி மாதம் 26 ஆம் திக­திக்­குப் பின்­னர் நாட்­டில் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் அசா­தா­ரண நிலை­யில் போரா­ளி­க­ளது தற்­போ­தைய பாது­காப்பு மற்­றும் இயல்பு நிலை தொடர்­பில் கரி­ச­னை­யு­டன் உயர் ஆணையரால் விட­யங்­கள் கேட்­ட­றி­யப்­பட்­டன.

தமி­ழர்­க­ளது பொரு­ளா­தார மேம்­பாடு, கனே­டியத் தமி­ழர்­க­ளது தாய­க­மக்­கள் நலச்­செ­யற்­பா­டு­கள் தொடர்­பி­லும் ஆரா­யப்­பட்­டன.

தாய­கத்­தில் உள்ள 89 ஆயி­ரம் பெண் தலைமைத்துவக் குடும்­பங்­க­ளுக்காகக் கனடா அரசு சிறப்பு நலன்­சார் வேலைத்­திட்­டம் ஒன்றை ஆரம்­பிக்­கு­மாறு கோரப்­பட்­டது.

அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான காத்­தி­ர­மான பொறுப்­புக்­கூ­றல், தமி­ழர்­க­ளது கௌர­வ­மான தீர்வு முயற்­சி­க­ளில் கனடா அரசு இலங்கை அர­சுக்கு அழுத்­தம் கொடுக்க வேண்­டு­மெ­ன­வும் போரா­ளி­கள் சார்­பில் கோரப்­பட்­டது.

தமி­ழர்­கள் அல்­ல­லுற்று ஆக்­கி­ர­மிப்­புக்­களை தாண்டி புலம்­பெ­யர்ந்து கன­டா­வில் தஞ்­ச­ம­டைந்­த­ போது எமது மக்­களை அர­வ­ணைத்து அவர்­க­ளது மொழி கலாச்­சார வாழ்­வி­ய­லில் முழு சுதந்­தி­ரத்­து­டன் வாழ­வைத்­த­மைக்கு எமது தாயக மக்­க­ளின் சார்­பில் கனடா அர­சுக்கு போரா­ளி­க­ளால் நன்றி தெரி­விக்­கப்­பட்­டது.

இலங்­கை­யில் இன­நல்­லி­னக்­க­மும் சக­வாழ்­வும் ஏற்­ப­டுத்­தப்­ப­டும் வரை புலம்­பெ­யர்ந்­தோர் திருப்பி அனுப்­பப்­ப­டு­வது தவிர்க்­கப்­பட வேண்­டு­மெ­ன­வும் ஜன­நா­ய­கப் ­போ­ரா­ளி­கள் கட்­சி­யால் வலி­யுறுத்­தப்­பட்­டுள்­ள­தாக கட்­சி­யின் ஊட­க­ பி­ரிவு விடுத்­துள்ள செய்­திக் குறிப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like