முன்னோக்கிய பயணம்- எமக்கு சாத்தியமாகுமா?

நாடு சகல துறை­க­ளி­லும் பின்­னோக்கி நகர்ந்து செல்­வ­தாக ஐக்­கிய நாடு­கள் சபை தெரி­வித்­துள்­ளமை முற்­று­மு­ழு­தாக ஏற்­கத்­தக்­கது. ஏப்­ரல் 21ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொ­லைக்­குண்­டுத் தாக்­கு­தல்­க­ளால் ஏரா­ள­மா­ன­வர்­கள் உயி­ரி­ழந்­தமை இந்த நாட்­டின் வர­லாற்­றில் அழிக்க முடி­யாத கரும்­புள்­ளியை ஏற்­ப­டுத்­தி­விட்­டது.

முடங்­கி­யுள்­ளது சுற்­று­லாத்­துறை
சுற்­று­லாப் பய­ணி­க­ளாக இங்கு வருகை தந்து விடு­தி­க­ளில் தங்­கி­யி­ருந்த வெளி­நாட்­டி­ன­ரும் கொல்­லப்­பட்­டமை நாட்­டுக்­குப் பெரும் அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தி விட்­டது. இத­னால் வெளி­நாட்­டி­ன­ரின் வருகை முற்­றா­கவே முடங்­கி­விட்­டது. இத­னால் உல்­லாச விடு­தி­கள் வெறிச்­சோ­டிப் போய்க்­கா­ணப்­ப­டு­கின்­றன. வானூர்தி சேவை­க­ளும் வரு­மா­னத்தை இழந்து நட்­டத்தை எதிர்­நோக்­கு­கின்­றன. சுற்­று­லா­வு­டன் தொடர்­பு­டைய சக­ல­து­றை­க­ளும் பெரும் பாதிப்பை எதிர்­கொண்டு வரு­கின்­றன. இத­னால் அந்­தத் துறை­க­ளு­டன் தொடர்­பு­டைய ஏரா­ள­மா­ன­வர்­கள் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். அரசு தின­மும் பல மில்­லி­யன் ரூபாவை இழந்து வரு­கின்­றது.

இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் சுற்று ­லாத்­து­றை­யும் வெளி­நா­டு­க­ளில் பணி­யாற்­று­ப­வர்­க­ளால் அனுப்பி வைக்­கப்­ப­டும் பண­மும் அந்­தி­யச் செலா­வ­ணி­யைப் பெரு­ம­ள­வில் ஈட்­டித் தந்­தன. தற்­போது சுற்­று­லாத்­துறை முற்­றா­கவே முடங்கி­ விட்­ட­தால் பெரும்­பா­திப்பு ஏற்­பட்­டுள்­ளது.

நாட்­டின் அசா­தா­ரண சூழ்­நிலை கார­ண­மாக உள்­ளூர் மக்­க­ளின் நட­மாட்­ட­மும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது. இத­னால் உள்­ளூ­ரி­லும் வியா­பார நட­வ­டிக்­கை­கள் பாதிப்பை எதிர்­கொண்டு வரு­கின்­றன. இதன் கார­ண­மாக உற்­பத்­தி­ யாளர்க­ளும் விற்­ப­னை­யா­ளர்­க­ளும் வரு­மான இழப்பை எதிர்­கொண்­டு­வ­ரு­கின்­ற­னர். உள்­நாட்­டுப் போர் கார­ண­மாக இனங்­க­ளுக்­கி­டை­­யில் பெரும்­வி­ரி­சல்­கள் தோன்­றின. நம்­பிக்­கை­யீ­ன­மும் கூடவே வளர்ந்­தது. இவை நாட்­டின் வளர்ச்­சி­யைப் பெரி­தும் பாதித்­தன. அபி­வி­ருத்­தி­யி­லும் பெரும் பின்­ன­டைவு ஏற்­பட்­டது. சக­ல­துக்­கும் கடன்­வாங்க வேண்­டிய நிலைக்கு அரசு தள்­ளப்­பட்­டது. இத­னால் நாட்டு மக்­கள் கட­னா­ளி­க­ளா­கவே மாற்­றப்­பட்­ட­னர்.

மீண்­டும் போர்ச் சூழல்
இன்று முஸ்­லிம் அடிப்­ப­டை­வா­தி­கள் போர் ஓய்ந்து 10ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் தமது கைவ­ரி­சை­யைக் காட்­டி­ய­தால் நாடு மீண்­டும் ஒரு மோச­மான நிலைக்­குத் தள்­ளப்­பட்டு விட்­டது. தின­மும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­கள் இடம்­பெ­று­கின்­றன. சிங்­கள இன­வாத அமைப்­புக்­கள் சந்­தர்ப்­பத்தை நன்கு பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­றன. சாதா­ரண முஸ்­லிம் மக்­க­ளின் சொத்­துக்­கள் அழிக்­கப்­ப­டு­வ­து­டன் அந்த மக்­க­ளின் மீதும் வன்­மு­றைச் செயல்­கள் கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­கின்­றன. இன­வா­த­மும் மத­வா­த­மும் ஒன்­றி­ணை­யும் போது அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய தீய­வி­ளை­வு­கள் பார­தூ­ர­மா­ன­தாக அமைந்து விடு­கின்­றன. அது­தான் இந்த நாட்­டில் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றது. இங்கே இடம்­பெ­று­கின்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சம்­ப­வங்­கள் உலக அள­வில் இந்த நாட்­டின் நற்­பெ­ய­ருக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன. குறிப்­பாக முஸ்­லிம் நாடு­கள் இவற்­றைச் சகிக்க முடி­யு­மென நாம் எதிர்­பார்க்க முடி­யாது. அவை இலங்­கைக்கு எதி­ரான தடை­களை ஏற்­ப­டுத்­து­மா­யின் அதை இலங்­கை­யால் பொறுத்­துக்­கொள்­ளவே முடி­யாது.

நாடு குழப்­பிப் போய்க்­கி­டக்­கும்­போது அரச தலை­வர் அவ­ச­ர­மா­கச் சீனா­வுக்­குப் புறப்­பட்­டுச் சென்­று­விட்­டார். சீன அதி­ப­ரு­டான அவ­ரது சந்­திப்­பின் போது இக்­கட்­டான இந்தத் தரு­ணத்­தில் சீனா இலங்­கைக்கு சலக உத­வி­க­ளை­யும் வழங்­கு­மென சீன நாட்­டுத் தலை­வர் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

சீனா ஏதோ­வொரு உள் நோக்­கத்­து­டன்­தான் பிற­நா­டு­க­ளுக்கு உத­வு­வதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளது. இலங்கை விட­யத்­தி­லும் இதுவே பின்­பற்­றப்­பட்டு வரு­கின்­றது. இத­னால் இந்­தி­யா­வும் அமெ­ரிக்­கா­வும் இலங்­கை­யின் அரச தலை­வர் சீனா­வுக்கு அவ­ச­ர­மா­கப் புறப்­பட்­டுச் சென்­றதை விரும்­ப­வில்லை. இலங்­கை­யைத் தனது வசம் வளைத்­துப் போடு­வ­தற்கு சீனா முயற்­சிப்­ப­தா­கவே அந்த நாடு­கள் கரு­து­கின்­றன. ஆனால் மகிந்த தொடக்­கம் தற்­போ­தைய அரச தலை­வர் வரை சீனா­வின் விசு­வா­சி ­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­ற­னர்.

அரசு வினைத்­தி­ற­னு­டன்
செய­லாற்­றல் வேண்­டும்
பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­கள் மேலும் இடம்­பெ­றா­மல் தடுப்­ப­தற்­கான முயற்­சி­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தி­ யுள்ள அரசு அப்­பாவி முஸ்­லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை உட­ன­டி­யா­கத் தடுத்து நிறுத்த வேண்­டும். நாட்­டில் சுமு­க­மான நிலை­யொன்­றைத் தோற்­று­விப்­ப­தும் அர­சின் முதுன்­மைக் கட­மை­யா­கும். வன்­செ­யல்­கள் இடம்­பெ­று­கின்­ற­தொரு நாட்டை எவ­ருமே திரு­ம்பிக் கூடப் பார்க்க மாட்­டார்­கள்.

இந்து சமுத்­தி­ரத்­தின் முத்து எனக் கரு­தப்­ப­டும் இலங்­கைத் தீவு இயற்­கை­யான எழி­லைக்­கொண்­டது. ஐவகை நிலங்­க­ளில் பாலை தவிர்ந்த ஏனைய நான்­கை­யும் தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது. பயிர்ச் செய்­கைக்­குத் தேவை­யான மண்­வ­ள­மும் குறை­வின்­றிக் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வ­ளவு இருந்­தும் உணவு உற்­பத்­தி­யில் தன்­னி­றைவு காண­வில்லை. இறக்­கு­ம­திப் பொரு­ளா­தா­ரமே முதன்மை இடத்தை வகிக்­கின்­றது. ஏற்­று­ம­தி­கள் வீழ்ச்­சி­ய­டைந்த நிலை­யில் அடி­மட்­டத்­துக்­குச் சென்று விட்­டன. இந்த நிலை­யில் வன்­மு­றை­கள் நாட்­டின் அமை­தி­யைக் குலைத்­து­ வ­ரு­கின்­றன.

நாடு அபி­வி­ருத்­திப் பாதை­யில் முன்­னோக்­கிச் செல்ல வேண்­டு­மா­னால் முத­லில் இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண வேண்­டும். சகல இனத்­த­வர்­க­ளும் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தற்­கு­ரி­ய­சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும். பயங்­க­ர­வா­தச் செயல்­கள் மீண்­டும் ஏற்­ப­டாது. பார்த்­துக்­கொள்ள வேண்­டும். தவ­றின் நாடு முன்­னோக்­கிச் செல்­வ­தென்­பது கன­வா­கவே முடிந்­து­வி­டும்.

You might also like