முல்லைத்தீவில் நடந்த சோகம்!!

முல்­லைத்­தீவு, ஐயன்­கு­ளத்­தில் மணல் ஏற்­றிச் சென்ற உழவு இயந்­தி­ரம் கட்­டுப்­பாட்டை இழந்து வீதி­யோர மரத்­து­டன் மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தில் அதில் பய­ணித்த ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். 3 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். இந்த விபத்து நேற்­றுக் காலை நடந்­துள்­ளது.

பழைய முறு­கண்­டி­யைச் சேர்ந்த பு.நிசாந்­தன் (வயது-27) என்ற ஒரு பிள்­ளை­யின் தந்­தையே உயி­ரி­ழந்­துள்­ளார்.

ஐயன்­கு­ளத்­தில் இருந்து முழங்­கா­வில் நோக்­கிச் சென்­ற­போதே இந்த விபத்து நடந்­துள்­ளது. வீட்டு வேலை ஒன்­றுக்­கா­கச் சித்­தி­ரைப் புத்­தாண்டை முன்­னிட்டு நாள்­பணி மேற்­கொள்­வ­தற்­காக உழ­வி­யந்­தி­ரத்­தில் சென்­றுள்­ள­னர். உழ­வி­யந்­தி­ரத்தை செலுத்­திச் சென்­ற­வர் 17 வய­து­டை­ய­வர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

துணுக்­காய் நக­ரின் மத்­தி­யில் மருத்­து­வ­ம­னைக்கு அண்­மை­யில் வேகக் கட்­டுப்­பாட்டை இழந்த உழ­வி­யந்­தி­ரம் வீதி­யோர மரத்­து­டன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது. அதில் உழ­வி­யந்­தி­ரப் பெட்­டி­யில் இருந்து பய­ணித்த ந.நவ­நீ­தன் (வயது-29), செ.விஜ­ய­ரட்­ணம் (வயது-38), சி.சுலக்­சன் (வயது-27), பு.நிசாந்­த­னர் (வயது-27) ஆகி­யோர் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

அவர்­கள் உட­ன­டி­யாக மல்­லாவி மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போ­தும் நிசாந்­தன் உயி­ரி­ழந்­தார். காய­ம­டைந்­த­வர்­க­ளில் சுலன்­சன் மற்­றும் நவ­நீ­தன் ஆகி­யோர் மேல­திக சிகிச்­சைக்­காக வவு­னியா மருத்­து­வ­னைக்கு மாற்­றப்­பட்­ட­னர்.

உழ­வி­யந்­தி­ரத்­தைச் செலுத்தி சென்­ற­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் நீதி­வா­னி­டம் முற்­ப­டுத்­தப்­பட்டு 7 நாள்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். உழ­வி­யந்­தி­ரத்­தின் உரி­மை­யா­ளரை நீதி­மன்­றில் முற்­ப­டு­மா­றும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

You might also like