முல்லைத்தீவில் 737 மோட்டார் குண்டுகள் உட்பட பெருமளவான ஆயுதங்கள் மீட்பு

முல்­லைத்­தீவு இளங்­கோ­பு­ரம் காட்­டுப் பகு­தி­யில் 60 மில்­லி­மீற்­றர் மோட்­டார் குண்­டு­கள்- 737 உட்­பட ஒரு தொகுதி வெடி­பொ­ருள்­கள் நேற்று மீட்­கப்­பட்­டன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

தமக்­குக் கிடைத்த இர­க­சிய தக­வ­லை­ய­டுத்து பொலி­ஸா­ரும் அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரும் இணைந்து வெடி­பொ­ருள்­களை மீட்­கும் நட­வ­டிக்­கை­யில் நேற்றுப் பிற்­ப­கல் ஈடு­பட்­ட­னர் என்று புதுக்­கு­டி­யி­ருப்புப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

60 மில்­லி­மீற்­றர் மோட்­டார் குண்­டு­கள்- 737, கைக்­குண்­டு­கள் 2, கன­ரக துப்­பாக்கி ரவை­கள், ஆர்.பி.ஜி குண்­டு­கள், ஆர்.பி.ஜி. செலுத்­தி­கள் என்­பன மீட்­கப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இதே­வேளை கைப்­பற்­றப்­பட்ட வெடி­பொ­ருள்­க­ளைச் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மீட்டு அத­னைச் செய­லி­ழக்க வைக்­கும் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.

போருக்குப் பின்­னர் தொடர்ச்­சி­யாக ஆயு­தங்­கள் மீட்­கப்­பட்டு வரும் நிலை­யில் நீண்­ட­கா­லத்­தின் பின்­னர் பெருந்­தொ­கை­யான ஆயு­தங்­கள் நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளன.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close