முள்­ளி­வாய்க்­கா­லின் முழுப் பரி­மா­ணம்

தமிழ் இனப் படு­கொ­லை­யின் உச்­ச­மான முள்­ளி­ வாய்க்­கால் பேர­வ­லத்­தின் நினைவு தினம் நாளை. வழக்­கம் போலவே கடந்த சில நாள்­க­ளாக வீறு­கொண்­டெ­ழுந்த தரப்­பு­கள் முட்­டி­மோதி, முழங்­கிக் கொட்டி பின்­னர் ஒரு­வாறு இணைந்து வந்து நிகழ்வை நடத்தி முடிப்­ப­தற்கு ஒப்­புக்­கொண்­டு­விட்­டன.

முள்­ளி­வாய்க்­கால் படு­கொ­லை­கள் நிகழ்ந்து முடிந்து ஒன்­பது வருட காலத்­தில், ஒப்­பீட்­ட­ள­வில் ஓர­ள­விற்கு பரந்­து­பட்ட ஒழுங்­க­மைப்­பு­டன் இந்த ஆண்டு நிகழ்­வு­கள் நடப்­ப­தற்­கான அறி­கு­றி­கள் தெரி­கின்­றன. அத­னால் வழக்­க­மான சில நூறு பேர் என்ற நிலை­யைத் தாண்டி இந்­தத் தடவை கணி­ச­மான எண்­ணிக்­கை­யில் மக்­கள் பங்­கேற்­பும் நினை­வி­டத்­தில் இருக்­கும் என்று எதிர்­பார்க்­க­லாம்.

முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினம் என்­பது, இறு­திப் போரில் கொடூ­ர­மா­கக் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் நினை­வு­களை ஏந்தி அவர்­க­ளுக்­காக அஞ்­ச­லிக்­கும் ஒரு நிகழ்வு மட்­டு­மல்ல. அதற்கு பல அர­சி­யல் பரி­மா­ணங்­கள் உள்­ளன என்­பது உணர்ந்­து­கொள்­ளப்­ப­ட­வேண்­டும்.

1. ஈழத் தமி­ழன் தன் உரி­மைக்­காக, விடு­த­லைக்­காக வீரத்­து­ட­னும் தீரத்­து­ட­னும் விடா­மல் போரா­டி­னான் என்­ப­தன் அடை­யாள இடம் அது.

2.இலங்கை பிரிட்­ட­னின் பிடி­யில் இருந்து விடு­விக்­கப்­பட்டு 70 ஆண்­டு­க­ளுக்கு மேலா­கி­ய­போ­தும், தமி­ழர்­க­ளின் அர­சி­யல் உரி­மை­கள் இந்த நாட்­டில் இன்­ன­மும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை; இன, மத, மொழி ரீதி­யில் தமி­ழர்­கள் சமத்­து­வ­மாக நடத்­தப்­ப­ட­வில்லை என்­பதை உல­கத்­திற்கு வெளி­காட்­டும் ஆகப் பிந்­திய அமை­வி­ட­மாக முள்­ளி­வாய்க்­கால் மாறி­யி­ருக்­கி­றது. அற­வ­ழி­யி­லும், ஆயு­த­மேந்­திய வன்­முறை ரீதி­யி­லும் நீண்ட போராட்­டங்­களை நடத்­திய பின்­ன­ரும், தமி­ழர்­க­ளின் கோரிக்­கை­யில் நியா­யம் இருப்­ப­தாக உலக நாடு­கள் பல­வும் ஏற்­றுக்­கொண்ட பின்­ன­ரும் பிரச்­சி­னைக்­குத் தீர்வு கிட்­ட­வில்லை என்­பதை பறை­சாற்­றும் இடம் அது.

3. இறு­திப் போரி­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி, நியா­யம் இன்­னும் கிடைக்­க­வில்லை என்று உரத்­துச் சொல்­கின்ற இடம் அது.

4. போர்க்­குற்ற விசா­ர­ணை­கள் நடத்­தப்­ப­டா­மல், உண்­மை­கள் கண்­ட­றி­யப்­ப­டா­மல், குற்­ற­வா­ளி­கள் சுதந்­தி­ர­ மா­கச் சமூ­கத்­தில் உலாவ அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள அநீதி தொடர்­கின்­றது என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டும் இடம் அது.

5. பேச்சு, தீர்வு என்­கிற வார்த்­தை­க­ளின் கீழே சிங்­கள பௌத்த அர­சு­கள் தமி­ழர்­களை மட்­டு­மல்ல, உலக நாடு­க­ளை­யும் ஏமாற்­றிக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பதை எடுத்­துக்­காட்­டும் இடம். அதைப் புரிந்­து­கொண்ட பின்­ன­ரும் உலக நாடு­க­ளும், ஐக்­கிய நாடு­கள் சபை போன்ற பன்­னாட்டு அமைப்­பு­க­ளும் அநீ­தி­யின் பக்­கம் நின்று அத­னையே தொடர்ந்­தும் ஆத­ரிக்­கின்­றன என்­பதை இடித்­து­ரைக்­கும் இடம் அது.

6. எல்­லாத் தவ­று­க­ளை­யும் தொடர்­வ­தன் மூலம், மீண்­டும் போர் ஒன்று ஏற்­ப­டா­மல் இருப்­ப­தற்­கான சூழலை கொழும்பு உரு­வாக்­கத் தவ­றி­யி­ருக்­கின்­றது என்­பதை முழு உல­குக்­கும் அறி­விக்­கும் இடம் அது.

வெறு­மனே அழுது அரற்றி ஆற்­றுப்­ப­டுத்­தி­விட்­டுப் போகக்­கூ­டிய இட­மல்ல முள்­ளி­வாய்க்­கால். அங்கு செல்­லும் ஒவ்­வொ­ரு­வ­ரும் விடு­த­லைத் தீயை நெஞ்­சி­னில் இருத்­தித் திரும்ப வேண்­டிய இடம் அது. தலை­முறை தலை­மு­றை­யாக ஊடு­க­டத்­தப்­ப­ட­வேண்­டிய செய்­தி­க­ளின் தண­லி­டம் அந்த மணல் தரை.

இத்­த­னை­யை­யும் ஊடு­க­டத்­தும் பேரொ­ளி­யாக முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் ஏற்­றப்­ப­டும் சுடர் பிர­கா­சிக்­க­ வேண்­டும். தமி­ழன் இனி­யும் இனி­யும் தளர்ந்­து­வி­ட­மாட்­டான் உரி­மையை வென்­றெ­டுக்­கா­மல், என்­பதை அந்­தச் சுடர் வான்­முட்­டிச் சொல்­ல­வேண்­டும். அதுவே இன்­றைய தேவை­யும் நாளைய தேவை­யும்­ கூட.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close