முள்ளிவாய்க்கால் சம்பவங்களை உலகத்துக்கு மறைக்க முயலும் -சிங்கள பேரினவாதம்- வடக்கு முதல்வர்!!

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் க.வி.விக்னேஸ்வரன் வாரத்­துக்­கொரு கேள்வி,பதில் என்ற தலைப்­பில் வாரா­வா­ரம் கேள்வி–பதில் வடிவில் வெளி­யிட்­டு­வ­ரும் கருத்­துக்­கள் வரி­சை­யில் கடந்த 28.05.2018ஆம் திக­தி­யி­டப்­பட்டு வெளி­யிட்­டுள்ள கருத்­துக்­கள் இங்கு தரப்­ப­டு­கின்­றன.

என்­மேல் கரி­ச­னை­யு­டைய ஒரு­வர்
பின்­வ­ரும் கேள்­வியை அனுப்­பி­யுள்­ளார்.

கேள்வி – ஐயா! உங்­க­ளைப் பற்றி தெற்­கில் மிகக் கேவ­ல­மா­கக் கதைக்­கப்­ப­டு­கி­றது. பிர­பா­க­ரனின் தலை­யில் கோடா­ரி­யால் வெட்­டி­யது போல், உங்­கள் தலை­யி­லும் வெட்ட வேண்­டும் என்று கூறி உங்­கள் தலை வெட்டப்பட்டிருப்பது போன்ற ஒளிப்படங்களை வலைத்­த­ளங்­க­ளில் படங்­க­ளாக அனுப்­பு­கின்­றார்­கள். உங்­கள் உயி­ருக்கு ஆபத்து வருமோ என்று பயப்­ப­டு­கின்­றோம். நீங்­கள் உங்­க­ளுக்­கான மேல­திக பாது­காப்­பைக் கோரிப் பெற முடி­யாதா?

பதில்– உங்­கள் அன்­புக்­கும் கரி­ச­னைக்­கும் என் மன­மார்ந்த நன்­றி­கள்! எமது முள்­ளி­வாய்க்­கால் நிகழ்வு, இவ்­வா­றான ஆத்­தி­ரத்தை சில சிங்­க­ள­வர் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதன் அர்த்­தம் என்­ன­வென்­றால், ‘‘உங்­க­ளின் அர­சி­யல் பிரச்­ச­னை­களை வெளிப்­ப­டுத்­தா­தீர்­கள்! வெளிப்­ப­டுத்­தி­னால் அடிப்­போம், கொல்­லு­வோம், நாட்டை விட்­டுத் துரத்­து­வோம்.’’ என்­பதே. சிங்­கள மக்­க­ளின் இவ்­வா­றான எதிர்­ம­றைக் கருத்­துக்­க­ளும், வன் நட­வ­டிக்­கை­க­ளும் முன்­ன­ரும் வெளி­வந்­துள்­ளன. ‘சிங்­க­ளம் மட்­டும்’ சட்­டம் கொண்­டு­வந்­த­போது எம்மை அச்­சு­றுத்தி மெள­னம் காக்­க­வைக்­கப் பார்த்­தார்­கள். காலி­மு­கத்­தி­ட­லில் சத்­தி­யாக்­கி­ர­கம் இருந்த என் நண்­பர் மௌசூர் மௌலா­னா­வை­யும் வேறு சில­ரை­யும் பேரை ஏரிக்­குள் (BAIRA LAKE) அப்­ப­டியே தூக்கி வீசி­னார்­கள். 58ஆம் ஆண்­டுக் கல­வ­ரம், 77ஆம் ஆண்­டுக் கல­வ­ரம், 83ஆம் ஆண்­டுக் கல­வ­ரம் என்று தமிழ் மக்­கள் மீது வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. பிள்­ளை­யைக் கிள்­ளி­விட்டு தொட்­டிலை ஆட்­டு­வது போல், எமது முக்­கிய தேசிய அர­சி­ யல் கட்­சி­கள், தமது ஆத­ர­வா­ளர்­கள் மூல­மாக எங்­க­ளுக்­குச் செய்­வ­தெல்­லாம் செய்து விட்டு துக்­கம் விசா­ரிக்க வந்­தார்­கள். இது இலங்கை அர­சி­ய­லில் சர்வசாதா­ர­ணம்.

தமி­ழர்­களை அதி­கம்­பேச அனு­ம­திக்­கக்­கூ­டாது என்ற
நிலைப்­பாடு பேணும் சிங்­கள அர­சி­யல் தலை­மைத்­து­வங்­கள்
இவற்­றி­னால் சிங்­கள அர­சி­யல் தலை­மைத்­து­வம் எதைக் கூறு­கின்­றது? ‘தமி­ழர்­களை நாம் கட்டி ஆண்டு கொண்­டி­ரு­கின்­றோம், அவர்­களை அதி­கம் பேச விடக்­கூ­டாது. விட்­டால் எமது உண்­மைச் சொரூ­ பம் உல­கத்துக்குத் தெரிந்­து­வி­டும். ஆகவே அதி­கம் பேசு­ப­வ­னுக்கு உயிர் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­து­வோம், வெள்­ளை­வா­னில் கொண்டு சென்று உரிய தண்­டனை வழங்­கு­வோம். பன்னாட்டுச் சமூகம் கேள்வி கேட்­டால் நாங்­கள் உதா­ரண புரு­ஷர்­கள்; பிழையே செய்­ய­மாட்­டோம் என்­போம்.

சென்ற முள்ளி­ வாய்க் கால் போரில்­கூட, ஒரு­கை­யில் மனித உரிமை சாச­னம், மறு­கை­யில் துப்­பாக்கி வைத்­துக்­கொண்டே போரா­டி­னோம். அப்­பாவி ஒரு­வர்­தா­னும் கொல்­லப்­ப­ட­வில்லை. ~(Zero Casualties) பூஜ்ய அப்­பாவி சாவுகள் என்று கூறு­வோம். இந்­தத் தமி­ழர்­கள் அனை­வ­ரும் தீவி­ர­வா­தி­கள்; பிரி­வி­னை ­வாதி­கள்; வன்­மு­றை­வா­தி­கள் என்­றெல்­லாம் உல­கிற்கு எடுத்­துக் காட்­டு­வோம்’ என்­ற­வா­று­தான் கூறி­வந்­துள்­ள­னர்.
நாங்­க­ளும் அவற்­றைக் கண்டு கேட்­டுப் பயந்து விட்­டோம். எனவே ஒன்­றில் இலங்­கையை விட்டு வெளி­யேறி எமது மன உளைச்­சல்­களை வெளி­யி­லி­ருந்து வெளிப்­ப­டுத்­திக்­கொண்டு வரு­கின்­றோம்.

அங்­கி­ருந்து உள்­ளூர்­வா­சி­க­ளுக்­குப் பணம் தந்து உத­வு­கின்­றோம். அல்­லது உள்­ளூ­ரில் இருக்­கும் எம்­ம­வரோ மக்­க­ளி­டம் ஒரு முகம், அர­சுக்கு இன்­னொரு முகம் காட்­டு­கின்­றார்­கள். எமது அடிப்­படை அர­சி­யல் கோரிக்­கை­களை தேர்­தல் விஞ்­ஞா­ப­ னங்­க­ ளில் உள்­ள­டக்­கு­கின்­றோம். ஆனால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­தும் அர­சுக்கு வேறொரு முகம் காட்­டு­கின்­றோம். ‘நீங்­கள் எதைத் தந்­தா­லும் நாம் பெற்­றுக் கொள்­வோம்’ என்ற தொனிப்­பட அவர்­க­ளு­டன் பேசு­கின்­றோம். ‘நாங்­கள் ‘தா’ ‘தா’ என்று கேட்­போம்.

ஆனால் நீங்­கள் தரு­வ­தைத் தாருங்­கள்’ என்­கின்­றோம். அதற்­குப் பிரதி உப­கா­ர­மாக அரசும் தனது உத­ விக் கரங்­களை நீட்­டு­கின்­றது. தனிப்­பட்ட உத­வி­க­ளைப் பெற்­று­விட்டு உண்­மை­யான, எமக்­குத் தேவை­ யான அர­சி­யலைப் பேசாது வந்து விடு­கின்­றோம்.

இதைப் பார்த்­த­தும் சிங்­கள மக்­கள் என்ன நினைக்­கின்­றார்­கள்? ‘பாருங்­கள்! இவர்­கள் எவ்­வ­ளவு நல்­ல­வர்­கள்? நாம் சொல்­வது போல் கேட்டு நடக்­கின்­றார்­கள்’ என்று கூறு­கின்­றார்­கள். எங்­க­ளைக் கொழும்­பில் தற்­போ­தைக்கு இருக்க விடு­கின்­றார்­கள். ஆனால் தப்­பித் தவறி எமது அபி­லா­சை­களை, எமது அர­சி­யல் எதிர்­பார்ப்­புக்­களை வெளி­யிட்­டோ­மா­னால், நாங்­கள் அவர்­க­ளுக்­குக் கொடூ­ர­மா­ன­வர்­கள், தீவி­ர­வா­தி­கள்; பிரி­வி­னை­வாதி­கள்; தீய­வர் என்­றெல்­லாம் ஆகி­வி­டு­வோம். இவ்­வா­றான மிரட்­டு ­தல்­க­ளைத்­தான் நீங்­கள் குறிப்­பிட்டி ­ருக்­கின்­றீர்­கள். உண்மை நிலை அறி­யா­மல் அவர்­கள் பிதற்­று­ கின்­றார்­கள். அதைப்­பார்த்து நீங்­கள் பத­று­கின்­றீர்­கள்.

இதி­லி­ருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்­டும். எமது கோரிக்­கை­களை, மனக்­கி­டக்­கை­களை வெளிப்­ப­டை­யாக சிங்­கள மக்­க­ளுக்கு எடுத்­துக் கூறா­மல், எமக்­குள் ஒன்று கூறி அவர்­க­ளுக்கு இன்­னொன்று கூறி வந்­த­தாற்­றான் நியா­ய­மான உரி­மை­கள் கோரும் ஒரு­வர்­கூட அவர்­க­ளுக்கு நாட்­டின் துரோகி ஆகின்­றார்; தீவி­ர­வாதி ஆகின்­றார். நாங்­கள் முத­லில் இருந்தே எமது கொள்­கை­க­ளுக்கு விசு­வா­ச­மாக நடந்து கொண்­டி­ருந்­தோ­மா­னால், உண்­மை­யாக உரி­மை­கள் கோரு­ப­வரை சிங்­கள மக்­கள் இந்­த­ அள­வுக்கு வெறுத்­தி­ருக்க மாட்­டார்­கள். சிங்­கள மக்­கள் சீற்­ற­ம­டைய நாங்­கள்­தான் கார­ணம். எங்­கள் பயமே கார­ணம். இனி உங்­கள் கேள்­விக்கு வரு­வோம்.

உயிர் ஆபத்­துக் குறித்து அஞ்­சு­வது மட­மைத்­த­னம்

உயி­ருக்கு ஆபத்து வரும் என்று அஞ்­சு­கி­றீர்­கள். உயி­ருக்கு ஆபத்து எப்­பொ­ழு­தும், எவருக்­கும் இருந்து கொண்டே இருக்­கின்­றது. வெள்­ளத்­தில் பாதிப்­புற்­ற­வர்­கள் எத்­தனை பேர்? விபத்­துக்­க­ளி­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எத்­தனை பேர்? இடி மின்­ன­லி­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எத்­தனை பேர்? துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மைய இடி மின்­ன­லால் பெரிய கண்­ணாடி ஒன்று வெடித்து விழுந்­தது என்று எனக்கு நேற்­றுக் காட்­டி­னார்­கள். ஆகவே உரிய நேரம் வரும்­போது பல­தும் நடை­பெ­று­கின்­றன. உயிர் கூட தானா­கவே பிரிந்து செல்­லும்.

அதற்­காக சொல்ல வேண்­டி­யதை விடுத்து, சிங்­கள வருக்கு ஏற்ற சொகு­சான கருத்­துக்­க­ளைக் கூறிக்­கொண்டு இருந்­தோ­மா­னால், நாம் தப்­பு­வோம் என்று நினைப்­பது தவறு. கட்­டா­யம் அவன் கொல்ல இருப்­ப­வன் கொல்­லத்­தான் போகின்­றான்.

சொல்ல வேண்­டி­ய­தைச் சொல்லி விட்டுச் சாவது மேலா அல்­லது சொகுசு வார்த்­தை­க­ளைக் கூறி­விட்டு வெள்­ளம் தலைக்­கே­றும்­போது, அதை மாற்றி உண்­மையை உரைக்­கும்­போது நாம் உயிர்ப்­ப­லி­யா­வது மேலா? எமக்­கென்று கட­மை­கள் உண்டு. அவற்றை நாம் சரி­யா­கச் செய்­வோம். உயி­ரைக் காலன் வந்து எடுக்­கும் நேரம் எடுத்­துச் செல்­லட்­டும். எந்த ஒரு அஹிம்சா மூர்த்­தி­கூட கொல்­லப்­பட வேண்­டும் என்று நிய­தி­யி­ருந்­தால், அவ­ரது சாவு அவ்­வாறே நடக்­கும். மகாத்­மா­காந்தி இதற்­கொரு உதா­ர­ணம்.

பாது­காப்­பைக் கோரிப் பெறு­மாறு கேட்­டுள்­ளீர்­கள். தற்­போ­தும் எனக்­குச் சட்­டப்­படி பாது­காப்பு தரப்­பட்டே வரு­கின்­றது. தேவை­யெ­னில் உங்­கள் கோரிக்­கை­யைப் பரி­சீ­லிக்­க­லாம். ஆனால் உங்­கள் கேள்­வியை மைய­மாக வைத்து இன்­னுஞ் சில கருத்­துக்­களை வெளி­யிட விரும்­பு­கின்­றேன்.

முள்­ளி­வாய்க்­கா­லில் நான் கூறி­ய­வற்­றி­னா­லும், அவ்­வா­றான ஒரு நிகழ்ச்சி நடந்­த­தா­லும் ஏன் சில சிங்­கள மக்­கள் வெகுண்­டெ­ழுந்­துள்­ளார்­கள்? பல­கா­ர­ணங்­களை நான் கூறு­வேன்.

கருத்­துச் சுதந்­தி­ரம் கட்­டுப்­பட்­டி­ருந்த ராஜ­பக்ச யுகம் கழிந்து எம்­மைக் கட்­டி­வைக்க இய­லாத நிலை­யில் இன்றை கூட்டு அரசு
1.முன்னைய இரா­ஜ­பக்ச அர­சு வெளிப்­ப­டை­யாக எம்­மைக் கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருந்­தது. வாய் திறந்­தால் வன்­முறை அல்­லது சிறை­வா­சம் என்­றி­ருந்­தது. ஜன­நா­யக நாடு­க­ளின் ஒத்­து­ழைப்­பால் உரு­வா­கிய இந்த அரசு, எம்மை முன்­போல் கட்டி வைக்க முடி­யாத நிலை­யில் இருக்­கின்­றது. எனக்­கெ­தி­ராக முகப்­ப­தி­வில் எழு­திய ஒரு­வ­ரைப்­பற்றி எமது அலு­வ­லர்­கள் ஆராய்ந்து பார்த்­தார்­கள். காலி­யில் வசிக்­கும் அவர் மகிந்த இரா­ஜ­பக்­ச­வின் நெருங்­கிய ஆத­ர­வா­ளர் என்­பது தெரி­ய­வந்­தது. அப்­ப­டி­யா­யின், என்­மீது கோபம் கொள்­வோர் யாரெ­னில், முன்­னர் எம்மை வாய்­பேசாதவர்­க­ளாக ஆக்கி வைத்­தி­ருந்­தோரே அவர்­கள் என்று அடை­யா­ளம் காண­ லாம். போரை முடி­வுக்­குக் கொண்டு வந்­த­வர்­கள் தான் அவர்­கள். முள்­ளி­வாய்க்­கா­லில் நடந்­த­வற்றை உல­கம் அறி­யக்­கூ­டாது என்று கூத்­தா­டு­ப­வர்­கள். உல­கம் உண்­மையை எந்­த­வி­தப்­பட்­டும் அறிந்து விடக்­கூ­டாது. ஆகவே கொலை மிரட்­ட­ லா­லா­வது எம்­மைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும், வாய­டைக்­கச் செய்ய வேண்­டும் என்­ப­தில் கண்­ணும் கருத்­து­மாய் உள்­ள­னர்.

2.இன்­றைய நிலை வேறு முன்­னர் இருந்த நிலை வேறு. உல­கம் உண்­மையை உண­ராது முன்­னர் இருந்­தது. அப்­பா­வி­கள் கொல்­லப்­பட்­டமை, இனப்­ப­டு­கொலை போன்ற உண்­மை­கள் தற்­போது சிங்­கள மக்­க­ளால் உண­ரப்­பட்­டுள்­ளன. பன்னாட்டுச் சமூகத்தாலும் உண­ரப்­பட்­டுள்­ளன. ஜெனீவா இது­வ­ரை­யில் கொடுத்த காலக்­கேடு விரை­வில் முடி­வுக்கு வரப்­போ­கின்­றது. அமெ­ரிக்­கத் தூது­வர் அதுல் கேசப் தாம் செய்­வ­தாக ஜெனி­வா­வில் வாக்­கு­றுதி அளித்­த­வற்றை இலங்கை கண்­டிப்­பா­கச் செய்து முடிக்க வேண்­டும் என்று கூறி­யுள்­ளார். இலங்கை அர­சு செய்­வ­த­றி­யாது தடு­மா­று­கின்­றது. இந்த நேரத்­தில் இவ்­வா­றான ஒரு நிகழ்வு தம்­மைப் பாதிக்­கும் என்று நினைத்து எம்மை அடக்க முயன்­றி­ருக்­கக்­கூ­டும்.

நல்­ல­வர்கள்போன்று தம்மை காட்­டிக்­கொள்ள விளை­யும்
அர­சும், இரா­ணு­வத்­த­ரப்பும்
3.இரா­ணு­வம் ஒரு புறம், அரசு மறு­பு­ற­மு­மாக தமி­ழர்­க­ளுக்கு நன்­மை­கள் பெற்­றுத் தரப்­போ­கின்­றோம் என்று கூறி வரு­கின்­றன. தமி­ழர்­க­ளின் அடிப்­படை உரி­மை­க­ளைக் கொடுப்­போம் என்று எவ­ரும் கூற­வில்லை. சிங்­க­ள­வர் கூறு­வது போல் ‘போணிக்கா’ (பொம்­மை­கள்) வாங்­கித் தரு­வ­தாக வாக்­க­ளிக்­கின்­றார்­க­ளே­யொ­ழிய 70 வருட பிரச்­ச­னை­யைத் தீர்ப்­ப­தா­கக் கூற­வில்லை. அந்­தப் பிரச்­ச­னை­களை நினைவு படுத்­தி­னால்­தான் கொலை மிரட்­டல்­கள் வரு­கின்­றன. ஆக­வே­தான் எந்த ஒரு சிங்­கள அர­சு பெரிய நெருக்­கடி இருந்­தா­லொ­ழிய எமது அடிப்­ப­டைப் பிரச்­ச­னை­க­ளைத் தீர்க்க முன்­வ­ராது என்று கூறி வரு­கின்­றேன்.

4.நான் ‘அடிப்­படை’ என்று கூறும் போது, எமது தனித்­து­வத்­தைப் பாது­காப்­ப­தையே கூறி வரு­கின்­றேன். வடக்கு–கிழக்கு இணைப்பு வேண்­டும் என்று கூறும்போது, அங்கு தமிழ் மொழியே இது­கா­றும் கோலோச்சி வந்­தது. அது தொடர இணைப்பு அவ­சி­யம். எம்மை இரண்­டாந்­த­ரப் பிர­ஜை­க­ளாக இது­வரை நடத்தி வந்த அர­சு, எமது தனித்­து­வத்தை மதித்து சுயாட்சி வழங்க வேண்­டும் என்­பது இரண்­டா­வது அடிப்­ப­டைக் கோரிக்கை. தாய­கம் என்­பது அத­னுள் அடங்­கும். மூன்­றா­வ­தாக ஒற்­றை­யாட்­சிக்­குக் கீழ் சிங்­கள மேலா­திக்­கம் தொட­ரும் என்­ப­தால், கூட்டாட்சி அடிப்­ப­டை­ யி­லான அர­சமைப்புக் கோரப்­ப­டு­கின்­றது.

வர­லாற்­றைத் திரி­வு­ப­டுத்­திக் கூறி சிங்­கள மக்­களை நம்­ப­வைத்து வந்த, நம்­ப­வைத்­து­வ­ரும் சிங்­கள அர­சி­யல்­வா­திகள்

5.சிங்­கள மக்­கள் மத்­தி­யில் பல பிழை­யான செய்­தி­கள் சென்ற 70 வரு­டங்­க­ளாக பரப்­பப்­பட்டு வந்­துள்­ளன. இந்த நாடு தொன்று தொட்டு சிங்­க­ள­வர் வாழ்ந்து வந்த நாடு. சோழர் காலத்­தில் கி.பி பத்­தாம் நூற்­றாண்­டில்­தான் தமிழர்கள் வந்­தார்­கள். அவர்­கள் கள்­ளத் தோணி­கள். அவர்­களை இந்­தி­யா­விற்கு அடித்­துத் துரத்த வேண்­டும். அண்­மை­யில் வந்­த­வர்­கள் தமக்­கென ஒரு நாட்­டைக் கேட்­பது எவ்­வ­ளவு அயோக்­கி­யத்­த­னம். இந்த உல­கத்­தில் எமக்­கென இருப்­பது இந்த ஒரு நாடே. அதை­யும் தமி­ழர் பங்கு போடப் பார்க்­கின்­றார்­கள். விட­மாட்­டோம் என்­கின்­றார்­கள் அப்­பா­விச் சிங்­க­ள­வர்­கள்.

உண்­மையை அவர்­க­ளுக்கு எடுத்­து­ரைக்க எவ­ரும் இல்லை. இலங்­கை­யின் மூத்த குடி­கள் தமி­ழரே. சிங்­கள மொழி கி.பி 6ஆம் 7ஆம் நூற்­றாண்­டு­க­ளிலே தான் வழக்­கத்­திற்கு வந்­தது. அதற்கு முன்­னர் வாழ்ந்­த­வர்­க­ளைச் சிங்­க­ள­வர் என்று அழைக்க முடி­யாது. துட்­ட­கை­முனு கூட சிங்­க­ள­வ­னாக இருந்­தி­ருக்க முடி­யாது. (DNA) மரபணுப் பரி­சீ­ல­னை­கள் இன்­றைய சிங்­க­ள­வர் ஆதித் திரா­வி­டரே என்று கூறு­கின்­றன. தமி­ழர் பற்­றிய உண்­மையை அறிந்து கொண்­டால் சிங்­கள மக்­க­ளின் ஆர்ப்­பாட்­டங்­கள் குறை­யக் கூடும். அல்­லது ஏமாற்­றத்­தில் இன்­ன­மும் உக்­கி­ர­ம­டை­யக்­கூ­டும்.

எம்­மைக் கொல்ல எத்­த­னிப்­ப­வர்­கள் காட்டு மிராண்­டி­கள் போல் நடந்து கொள்­ளா­மல், தமது தலை­வர்­களை எம்­மு­டன் பேச அனுப்ப வேண்­டும். நாம் எமது அடிப்­ப­டை­களை அவர்­க­ளுக்கு விளங்க வைப்­போம். புரிந்­து­ணர்வு அற்ற இன்­றைய நிலையே இவ்­வா­றான பதட்­டங்­க­ளுக்கு இட­ம­ளித்­துள்­ளது.

க.வி.விக்­னேஸ்­வ­ரன்
முத­ல­மைச்­சர்
வட­மா­கா­ணம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close