முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் வாரம் ஆரம்­பம்!!

தமி­ழர்­கள் வாழ்­வில் மறக்­க­மு­டி­யாத வடுவை ஏற்­ப­டுத்­திய, முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் வாரம் நேற்று ஆரம்­ப­மா­கி­யது. பத்­தா­வது ஆண்டு நினை  வேந்­தல் வாரத்­தின் முத­லா­வது சுடர் நேற்று ஏற்­றப்­பட்­டது.

2009ஆம் ஆண்டு இறு­திப் போரின்­போது வன்­னிப்பெரு­நி­லப் பரப்­பில் வாழ்ந்த லட்­சோப மக்­கள் குறு­கிய வெளிக்­குள், வெளித்­தொ­டர்­பு­கள் எது­வும் அற்ற நிலை­யில் முடக்­கப்­பட்­ட­னர்.

இரா­ணு­வத்­தி­ன­ரின் குண்­டு­வீச்­சுத் தாக்­கு­தல்­க­ளால் மருத்­து­வ­ம­னை­கள், பாட­சா­லை­க­ளில் தங்­கி­யி­ருந்த மக்­கள் உயி­ரி­ழந்­த­னர். பல ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் குறு­கிய நாள்­க­ளில், கொன்று குவிக்­கப்­பட்­ட­னர். குரு­தி­யால் முள்­ளி­வாய்க்­கால் மண் குளித்­தது. இந்­தக் கொடூ­ரத்­தின் நினைவு நாள்­களை முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் வார­மாக தமிழ் மக்­கள் நினை­வு­கூர்ந்து வரு­கின்­ற­னர்.

பத்­தா­வது ஆண்டு முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் வாரத்­தின் முதல் நாளான நேற்று, கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆல­யம் முன்­பாக ஈகச் சுடர் ஏற்­றப்­பட்டு நினை­வு­கூ­ரப்­பட்­டது.

வடக்கு மாகாண சபை­யின் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் உறுப்­பி­னர்­க­ளான எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், ஆ.புவ­னேஸ்­வ­ரன், சபா.குக­தாஸ் ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.

You might also like