மூன்றரை வருடங்களாக நடந்தது என்ன?

இன்று நான் இந்த நிகழ்வுக்கு வரு­வ­தற்கு முன்­னர், நான் வரப்­போ­வ­தில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­ட­தாக அறி­யக் கிடைத்­தது. இந்த நிகழ்­வில் கலந்­து­கொள்­ளும்­படி எனக்கு எவ்­வித அழைப்போ, அறி­விப்போ கிடைக்­க­வில்லை. இந்த நாட்­டில் ஏனைய விட­யங்­க­ளும் இவ்­வா­று­தான் இடம்­பெ­று­கின்­றன.

இந்த இலங்கை மன்­றத்­தின் தலை­வரை நான்­தான் நிய­மித்­தேன். இலங்கை மன்­றத்­தில் விசேட நிகழ்­வு­கள் இடம்­பெ­று­கின்­ற­போது அவர் தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு அது­பற்றி எனக்கு தெரி­யப்­ப­டுத்­து­வார்.

அவர், ‘‘நாளைய தினம் சோபித தேர­ரின் நினை­வு­தின நிகழ்வு நடை­பெ­று­கின்­றது. அதில் கலந்­து­கொள்ள நீங்­கள் வரு­கி­றீர்­களா’’ என என்­னி­டம் கேட்­டார். அதற்கு நான் ‘நாளையா? எத்­தனை மணிக்கு?’ என்று கேட்­டேன்.

‘மூன்று மணிக்கு’ என்று கூறி­னார் அத்­தோடு எனது பெய­ரும் அழைப்­பி­த­ழில் இருப்­ப­தா­கக் கூறி­னார். அதற்கு நான் இது­பற்றி எனக்கு எது­வும் தெரி­யாது எனக் கூறி­னேன்.

நான் எனது தனிப்­பட்ட செய­லா­ள­ரி­ட­மும் சோபித தேர­ரின் நினைவு தின விழா­வுக்கு எனக்கு அழைப்பு வந்­ததா எனக் கேட்­டேன். அப்­படி எது­வும் வர­வில்லை எனக் கூறி­னார்.

எனது அலு­வ­ல­கத்­தி­லும் கேட்­டுப் பார்த்­தேன். எனது ஊட­கப் பணிப்­பா­ள­ரி­ட­மும் கேட்­டேன். அதற்கு அவர் ‘இந்த நிகழ்வை ரவி ஜய­வர்­த­னவே முன்­நின்று நடத்­து­கின்­றார்’ என்று கூறி­னார்.

அதன் பின்­னர் நான் ரவியை தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு நாளை அவ்­வா­றா­ன­தொரு நிகழ்வு இருக்­கின்­றதா எனக் கேட்­டேன். அவ்­வா­றா­ன­தொரு நிகழ்வு இருப்­ப­தாக நான் வெளி­யி­லி­ருந்து கேள்­விப்­பட்­டேன் என்­றும், எனக்கு அழைப்பு கிடைக்­க­வில்லை என்­றும் அவ­ரி­டம் கூறி­னேன்.

அதன் பின்­னர் அவர் அது­பற்­றித் தேடிப்­பார்த்­தி­ருப்­பார் என நினைக்­கி ­றேன். சற்று நேரத்­தின் பின்­னர் மீண்­டும் என்னை தொடர்பு கொண்ட அவர், ‘‘சேர் , தவறு நடந்­து­விட்­டது. எவ­ரா­வது உங்­க­ளுக்கு அழைப்பு விடுத்­தி­ருப் பார்­கள் என எல்­லோ­ரும் நினைத்­தி­ருக்­கி­றார்­கள்.

ஆனால் எவ­ரும் உங்­க­ளுக்­கான அழைப்பை கொடுத்­தி­ருக்­க­வில்லை’’ என்­றார்.
தேரர் அவர்­களே, நீங்­கள் உங்­க­ளது உரை­யின்­போது நான் வரப்­போ­வ­தில்லை எனக் கேள்­விப்­பட்டு மனம் வருந்­தி­ய­தா­கக் கூறி­னீர்­கள். அதற்கு கார­ணம், நீங்­கள் கூட இவர் வரு­வார் அப்­படி வந்­தால் கூற வேண்­டி­ய­வற்றை அழுத்­தம் திருத்­த­மாக கூறி­விட வேண்­டும் என்று நினைத்­தி­ருப்­பீர்­கள்.

அப்­படி நினைத்த உங்­க­ளுக்கு நான் வர­வில்லை என்ற செய்தி கிடைத்­த­தும் மன வருத்­தம் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைப் பொறுப்பை நான் ஏற்ற பின்­னர் தான் நிலைமை மோச­ம­டைந்­தது என நீங்­கள் கூறி­னீர்­கள். இந்த நில­மை­கள் எவ்­வாறு மோச­ம­டைந்­தன என்­பது பற்றி மிகத் தெளி­வாக என்­னால் கூற முடி­யும்.

தேரர் அவர்­க­ளுக்கு மட்­டு­மல்ல, என்­னு­டன் கலந்­து­ரை­யா­டவோ விவா­திக்­கவோ, எவ­ரே­னும் முன்­வ­ரு­ வார்­க­ளாக இருந்­தால், அவர்­க­ளி­ட­மும் என்ன நடந்­தது என்­ப­தைப் பற்றி என்­னால் கூற முடி­யும்.

உயர்ந்த சம­யப் பற்­றும் தேசப்­பற்­றும் கொண்­டி­ருந்­த­வர  சோபித தேரர்

சோபித தேரர் அவர்­க­ளு­ட­னான எனது உறவு அவர் கால­மா­வ­தற்கு 25 வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே இருந்து வந்­தது. குறிப்­பாக போர் இடம்­பெற்ற காலத்­தின்­போது தூர பிர­தேச கிரா­மங்­க­ளுக்­குச் சென்று மக்­க­ளின் சுக துக்­கங்­களை விசா­ரித்து, அவர்­க­ளுக்­குத் தேவை­யான உண­வு­களைப் பெற்­றுக்­கொ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அவர் பெரும் சேவையை ஆற்­றி­னார்.

இதற்­காக அவர் திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, அநு­ரா­த­பு­ரம் ஆகிய பிர­தே­சங்­க­ளுக்குச் சென்று வந்­தார். அந்தப் பி­ர­தே­சங்­களை நான் ஒரு­போ­தும் எல்­லைப்­புறக் கிரா­மங்­கள் என்று கூற விரும்­ப­ வில்லை. அப்­பி­ர­தே­சங்­க­ளுக்குத் தேரர் அவர்­கள் சென்று வந்­தார்.

பெரும்­பா­லான சந்­தர்ப்­பங்­க­ளில் நானும் அவற்­றில் பங்­கெ­டுத்­துக்­கொண்­டேன். தேரர் அவர்­க­ளது நிகழ்ச்­சித்­திட்­டங்­க­ளுக்கு நான் உத­வி­யி­ருக்­கி­றேன்.

தேரர் அவர்­கள் என்னை நன்­றாகத் தெரிந்து வைத்­தி­ருந்­தார். தேரர் அவர்­கள் பொலன்­ன­று­வைக்கு செல்­கின்­ற­போது பொலன்­ன­று­வை­யில் உள்ள இசி­பத்­த­னா­ராம விகா­ரை­யி­லேயே இர­வைக் கழிப்­பார்.

தேரர் அவர்­கள் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்­துள்­ளேன். அது என்னை பொது வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்­த­தன் பின்­னர் ஏற்­பட்ட ஒன்­றல்ல. மாது­ளு­வாவே சோபித தேரர் அவர்­கள் மிகச் சிறந்த பண்­பாடும், உயர்ந்த சம­யப் பற்­றும், தேசப்­பற்­றும் மிக்க தேர­ரா­வார்.

சபா­நா­ய­கர் அவர்­களே, நான் இன்று இந்த இடத்துக்கு திடீ­ரென வருகை தந்­த­போ­தும், எனக்கு ஒரு உரை இருக்­கு­மென்று நான் எண்­ணி­னேன். எனவே நான் வரும்­போது நான் இன்­றைய ‘டெயி­லி­மி­ரர்’ பத்­தி­ரி­கையை எடுத்­துக்­கொண்டு வந்­தேன்.

நான் காலை ஐந்து மணிக்­கு­ப் பத்­தி­ரி­கை­களை படிப்­பேன். இன்று ‘டெயிலி மிரர்’ பத்­தி­ரி­கை­யில் மஹ­தீர் முஹ­ம­தின் படத்தை இடது புற­மும், எனது படத்தை வலது புற­மும் பிர­சு­ரித்து, மஹ­தீர் முஹ­மத் ஆட்­சிக்கு வந்து ஐந்து நாள்­க­ளில் செய்த வேலை­கள் என சில விட­யங்­கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன.

எனது படத்­தின் கீழ் மூன்று வரு­டங்­கள்? (Three Years?) என கேள்விக் குறி­யொன்று இடப்­பட்­டி­ருந்­தது. மலே­சி­யா­வில் முதல் ஐந்து நாள்­க­ளில் ஒன்­பது அமைச்­சர்­க­ளைக் கைது செய்­த­தா­க­வும் முன்­னாள் பிர­த­ம­ரும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் வெளி­யே­றிச் செல்ல முடி­யா­த­வாறு விமான நிலை­யம் மூடப்­பட்­ட­தா­க­வும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. முன்­னாள் பிர­த­மர் நஜீப் வெளி­யே­றிச் செல்ல முடி­யாத வகை­யில் சட்­டம் போடப்­பட்­டது உண்மை.

அடுத்­தது 144 வர்த்­த­கர்­கள் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும், ஐம்­பது நீதி­ப­தி­ கள் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும், பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ ருந்­தது. இந்­தப் பத்­தி­ரி­கையைப் பார்த்­து­விட்டு நான் மலே­சி­யா­வில் இருக்­கும் எமது தூது­வ­ரி­டம் இது பற்றி வின­ வி­னேன்.

மலே­சி­யா­வின் மஹ­திர் முஹ­ம­தின் கட்சி சிறிலங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் உற­வு­களைப் பேணி வந்த கட்­சி­யா­கும்.

எனவே, நான் அந்தக் கட்­சி­யில் பணி­ பு­ரி­கின்­ற­வர்­க­ளை­யும் அறி­வேன். நான் அவர்­க­ளில் ஒரு­வ­ரு­ட­னும் காலை­யில் தொடர்பு கொண்டு இதன் உண்­மைத்­தன்­மை­பற்றி வின­வி­னேன்.

அனை­வ­ருமே அந்­தச் செய்தி அப்­பட்­ட­மான பொய் எனக் கூறி­னர். கடந்த சில தினங்­க­ளாக சமூக ஊட­கங்­க­ளில் இந்­தச் செய்தி பெரி­து­ப­டுத்திக் காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

மஹ­தீர் செய்­ததை ஏன் இவ­ரால் செய்ய முடி­யாது எனக் கேட்­கப்­ப­டு­கி­றது. முன்­னாள் பிர­த­மர் நஜீ­பி­டம் ஒரு முழு நாள் விசா­ரணை இடம்­பெற்­றது. எனி­னும் அவர் இன்­னும் கைதுசெய்­யப்­ப­ட­வில்லை. பாருங்­கள், ஐம்­பது நீதி­ப­தி­கள் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக குறிப்­பி­டப் பிட்­டுள்­ளது.

‘டெயிலி மிரர்’ பத்­தி­ரிகை நான் மிக­வும் மதிக்­கின்ற ஒரு பத்­தி­ரிகை என்­றா­லும், இந்­தச் செய்தி எவ்­வ­ளவு பொய்­யா­னது. இதை­ யிட்டு நான் கவ­லை­ய­டை­கி­றேன்.

இது மலே­சி­யா­வுக்­கும் நல்­ல­தல்ல. ஐந்து நாள்­க­ளில் இந்த விட­யங்­களைச் செய்ய முடி­யு­மா­னால் இந்த நாடு ஜன­நா­யக நாடாக இருக்க முடி­யாது. ஐந்து நாள்­க­ளில் இதனைச் செய்ய முடி­யு­மென்­றால் அது சட்­டங்­கள் இல்­லாத நாடாக இருக்க வேண்­டும்.

ஐம்­பது நீதி­ப­தி­க­ளைக் கைது செய்­ய­வும் ஒன்­பது அமைச்­சர்­களைக் கைது செய்­ய­வும், 144 முன்­னணி வர்த்­த­கர்­க­ளைக் கைது செய்­ய­வும் முடி­மென்­றால் அது சட்­ட­மில்­லாத நாடா­கும்.

அர­சின் கடந்த மூன்­றரை வரு­ட­கால சேவை குறித்து விமர்­சித்து  வரு­கின்­ற­னர் எதி­ர­ணி­யி­னர்

நாங்­கள் கடந்த மூன்­றரை வருட காலப்­ப­கு­தி­யில் சில­ரைக் கைது செய்­தி­ருக்­கி­றோம். வழக்­குத் தொடர்ந்து விசா­ரணை செய்து வரு­கின்­றோம். நான் ஏன் இத­னைச் செய்­ய­வில்லை என்று கேட்­கி­றார்­கள். நான் இதற்­குப் பதி­ல­ளிக்க வேண்­டும்.

சங்­கைக் குரிய சோபித தேர­ரின் நோக்­கங்­களை மதிக்­கின்­ற­வன் என்ற வகை­யில், அவ­ரது தத்­து­வங்­க­ளைப் பின்­பற்­று­ப­வன் என்ற வகை­யில், அந்­தத் தத்­து­வங்­கள் கட்­டா­ய­மாக நடைமு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்ற உறு­தி­யான கொள்­கை­யில் இருக்­கின்­ற­வன் என்ற வகை­யி­லும், நான் இதற்­குப் பதி­ல­ளிக்க வேண்­டும்.

சபா­நா­ய­கர் அவர்­களே, 2015 ஜன­வரி மாதம் 08 ஆம் திகதி அரச தலை­வர் தேர்­தலை நடத்தி, ஜன­வரி 09ஆம் திகதி 2.00 மணிக்கு தான் தேர்­தல் ஆணை­யா­ளர் எங்­களை அழைத்து போட்­டி­யிட்ட கட்­சி­க­ளின் பெறு­பே­று­களை வெளி­யிட்­டார் என்­பதை நீங்­கள் அறி­வீர்­கள்.

அந்த நேரத்­தில் மகிந்த ராஜ­பக்­ச­வும் அவ­ரு­டன் இருந்­த­வர்­க­ளும் அனைத்­துப் பொருள்­க­ளை­யும் எடுத்­துக்­கொண்டு செல்­கி­றார்­கள்.

மகிந்த ராஜ­பக்­ச­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்த பாது­காப்பு வாக­னம் ஜனா­தி­ப­திக்­கு­ரி­யது ஆகும். அவ­ருக்­குத் தேவை யான வகை­யில் புதிய வாக­னங்­கள் இருந்­தன.

அவ­ருக்குத் தேவை­யான அனைத்­தை­யும் எடுத்­துச் சென்­றார். ஜனா­தி­பதியின் பாது­காப்­புக்­கென கொண்டு வரப்­பட்­டி­ருந்த நவீன தொழில்­நுட்ப உப­க­ர­ணம் ஜனா­தி­பதி இருக்­கின்ற இடத்­தி­ லி­ருந்து 100 மீற்­றர் தூரத்­தில் உள்ள எந்­த­வொரு வெடி பொரு­ளை­யும் கண்­ட­றி­யக்­கூ­டிய அந்த உப­க­ர­ண­மும், அந்­தக் காரில் தான் இருந்­தது.

இன்­றும் எனக்கு அது கிடை­யாது. புதிய வாக­னங்­க­ளில் இரண்டு வாக­னங்­கள் மட்­டுமே மீத­மாக இருந்­தன. எனது பாது­காப்பு அதி­கா­ரி­கள் ‘சேர், பிர­த­ம­ரின் ஆள்­கள் வந்து இருக்­கி­றார்­கள்.

பிர­த­ம­ருக்கு வாக­னங்­கள் இல்லை என இந்த இரண்டு வாக­னங்­களைக் கேட்­கின்­ற­னர்’ என்­ற­னர். முன்­னர் பத­வி­யி­லி­ ருந்­த­வர் கொண்­டு­சென்ற வாக­னங்­க­ளுக்கு மேல­தி­க­மாக இரண்டு புதிய வாக­னங்­களே எனக்­காக எஞ்­சி­யி­ருந்­தன.

‘இவற்­றைத் தானே பிர­த­மர் கேட்­கின்­றார். பர­வா­யில்லை, அவற்­றைக் கொடுத்­து­வி­டுங்­கள்’ என நான் கூறி­னேன். அந்த இரு புதிய வாக­னங்­களை பிர­த­ம­ருக்கு கொடுத்­து­விட்டு கடந்த இரண்­டரை வரு­டங்­க­ளாக நான் பழைய வாக­னங்­க­ளையே பாவித்து வந்­தேன்.

மகிந்த ராஜ­பக்ச பாவிக்க முடி­யாது என ஒதுக்­கி­யி­ருந்த வாக­னங்­க­ளையே நான் பாவித்­தேன். நிதி­ய­மைச்­சர் என்ற வகை­யில் ரவியே அதற்­குச் சாட்சி. இரண்­டரை வரு­டங்­க­ளின் பின்­னரே எனது பாவ­னைக்கு வாக­னங்­கள் இல்­லா­த­தால் நிதி­ய­மைச்­சி­லி­ருந்து பணம் பெற்று எனக்கு இரண்டு கார்­க­ளைக் கொள்­வ­னவு செய்­தேன்.

தங்­கா­லைக்­குச் செல்ல மகிந்­த­வுக்கு யார் ஹெலி­கொப்­டர் கொடுத்­தார்­கள்? நானா கொடுத்­தேன்? இவற்றுக்குப் பதில் கூற­வேண்­டி­ய­வர்­கள் கூற­வேண்­டும். இன்று நான் இது தொடர்­பாக மலே­சி­யா­வுக்குக் கதைத்துத் தக­ வல்­களை அறிந்­து­கொண்­ட­தன் பின்­னர் விமா ­னப்­ப­டைத் தள­ப­தி­யு­டன் கதைத்­தேன்.

தேர்­தல் பெறு­பே­று­கள் வெளி­யா­ன­தன் பின்­னர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு தங்­கா­லைக்­குச் செல்ல ஹெலி­கொப்­டர் கொடுத்­தீர்­களா? அதற்­கான அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யது யார்? என நான் அவ­ரி­டம் கேட்­டேன்.

இப்­போ­துள்ள விமா­னப் படைத்­த­ள­பதி அப்­போது இரண்­டா­வது நிலை­யில் இருந்­தார். ஜனா­தி­பதி கூறி­ய­தாக அந்த குறித்த நபர் கூறி­ய­தாக அவர் என்­னி­டம் கூறி­னார். என்­னி­டம் அதைப்­பற்றி தொலை­பே­சி­யில் கூட விசா­ரிக்­க­வில்லை.

பொது வேட்­பா­ள­ராக நிறுத்த எவ­ரும் கிடைக்­கா­மை­யா­லேயே என்­னைத் தேர்ந்­தெ­டுத்து நிறுத்­தி­னர்

தேர­ர­வர்­களே, நான் சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­தைக் கையேற்­ற­தா­லேயே அர­சாங்­கம் இல்­லா­மல் போய்­விட்­டது என சிலர் கூறு­கின்­ற­னர்.

அந்­தச் சந்­தர்ப்­பத்­தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு நாடா­ளு­மன்­றத்­தில் 47 ஆச­னங்­கள் மாத்­தி­ரமே காணப்­பட்­டன.

நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும் பான்மை, 142 ஆச­னங்­க­ளைக் கொண்ட ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­ட­மும், 127 ஆச­னங்­க­ளைக் கொண்ட சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­ட­முமே காணப்­பட்­டது.
சபா­நா­ய­கரே 100 நாள் வேலைத்­திட்­டத்தை யார் செய்­தார்­கள் என எனக்­குத் தெரி­யாது. என்­னைப் பொது வேட்­பா­ள­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­த­மைக்­காக நான் மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்.

இன்­றும் நன்­றி­யு­டை­ய­வ­னாக இருக்­கி­றேன். ஆனால் அதற்­கும் தற்­போது சிலர் ‘இவர் இல்லை. வேறு யாரை­யா­வது போட்­டி­யிட வைத்­தி­ருந்­தா­லும் வெற்றி பெற்­றி­ருக்­க­லாம்’ எனக் கூறு­கின்­ற­னர்.

அப்­படி போட்­டி­யிட்­டி­ருக்­க­லாமே? எதற்­காக சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளரை தேர்ந்­தெ­டுத்­தார்­கள். அவ்­வாறு போட்­டி­யிட எவ­ரும் இல்­லாத நிலை­யி­லேயே என்­னைத் தேர்ந்­தெ­டுத்­தார்­கள் என அவர்­க­ளுக்கு நான் கூற விரும்­பு­கி­றேன்.

அதிக அதி­கா­ரங்­க­ளு­டன் ராஜ­பக்ச குடும்­பத் தினர் ஆட்சி செய்­த­போது நாட்­டில் காணப்பட்ட மக்­களே விரும்­பாத ஏகா­தி­பத்­திய ஆட்சி, அதன் தீவி­ரத்­தன்மை, காணா­மல்­போ­தல்­கள், பெரிய லஞ்ச ஊழல் மோசடி போன்­றவை இடம்­பெற்ற வேளை­யி­லேயே நான் தைரி­ய­மாக வெளிப்­பட்­டேன்.

நான் அரச குடும்­பத் தைச் சேர்ந்­த­வன் அல்ல. பெரும் செல்­வந்த குடும்­பத்தைச் சேர்ந்­த­வ­னும் அல்ல. அர­சி­யல் பரம்­ப­ரை­யும் அல்ல. ஆயி­னும் நான் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட்­டேன்.

தற்­போது அத­னைப் பல­ரும் மறந்­து­விட்­ட­னர். பாரா­ளு­மன்­றத்­தின் அதி­கா­ரம் இல்­லா­மல் 100 நாள் வேலைத் திட்­டத்தை எவ்­வாறு செய்ய முடி­யும். யாரா­வது எனக்குப் பதில் கூறுங்­கள்.

நாடா­ளு­மன்­றத்­தில் 47 ஆச­னங்­களை வைத்­துக்­கொண்டு பிர­த­மர் ரணில் விக்­கி­ர­சிங்க 100 நாள் வேலைத்­திட்­டத்தைத் தயா­ரித்­தார். தேர்­தல் ஜன­வரி 8ஆம் திகதி. 9ஆம் திகதி அவர் பத­வி­யேற்­றார். 10ஆம் 11ஆம் திக­தி­ய­ள­வில் 100 நாள் திட்­டத்தைத் தயா­ரித்து புத்­த­க­மாக அச்­சிட்டுக் கொடுத்­தார்­கள்.

19ஆம் திருத்­தச் சட்­ட­மும் அதில் அடங்­கி­யி­ருந்­தது. உலக வர­லாற்­றி­லேயே எந்தப் பாரா­ளு­மன்­றத்­தில் இவ்­வாறு 225 பேர் இருக்­கை­யில் 47 பேரின் தேவைக்­காக அர­ச­மைப்­புத் திருத்­தத்தை மேற்­கொள்ள முடி­யும்? 142 பேர் எதி­ரா­ன­வர்­கள்.

நான் பத­வி­யேற்­ற­வு­ட­னேயே, பிர­த­மர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் பத­வி­யேற்­றார். அடுத்த வாரமே 47 பேரைக் கொண்ட கட்­சியை சேர்ந்­த­வர் பிர­த­ம­ராக இருக்­கின்­றார். நாங்­கள் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­ யைக் கொண்டு வரு­வோம் என எதிர்த் தரப்­பி­னர் கூறி­னார்­கள்.

100 நாள் வேலைத்­திட்­டத்­தி­னால் நாடா­ளு­மன்­றத்தைக் கலைக்க முடி­யாது போனது. இதனைத் தயா­ரித்­த­வர்­கள் யார் எனத் தெரி­யாது. அதுவே மிகப்­பெ­ரிய முட்­டாள்­த­னம்.

உண்­மை­யில் நான் பத­வி­யேற்ற அன்­றைய தினம் இரவே நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்­கக்­கூ­டி­ய­வாறு அந்த திட்­டத்­தைத் தயா­ரிக்க வேண்­டும் என நான் அவர் க­ளுக்குக் கூறிக்­கொள்ள விரும்­பு­கி­றேன். அன்றே பாரா­ளு­மன்­றத்­தைக் கலைத்து தேர்­தலை நடத்­தி­யி­ருக்க வேண்­டும்.

அதன் பின்­னர் அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க அவர்­க­ளின் வரவு செல­வுத் திட்­டப் பிரே­ரணை வெளி­வந்­தது. உங்­க­ளால் 100 நாள் செயற்­றிட்­டத்­தின் வரவு செல­வுத் திட்­டத்தை ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆத­ர­வின்றி நாடா­ளு­மன்­றத்­தில் அங்­கீ­க­ரித்­தி­ருக்க முடி­யுமா?. 19ஆவது திருத்­தத்தை அங்­கீ­க­ரித்­தி­ருக்க முடி­யுமா?.

19ஆவது திருத்­தச்­சட்­டம் நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட்டு மாலை 5 மணிக்கே வாக்­கெ­டுப்பு நடத்­தத் தீர்­மா­னிக் கப்­பட்­டி­ருந்­தது. மாலை 5 மணி­யா­கி­யும், ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்­பி­ட­மி­ ருந்து சரி­யான முடிவு எது­வும் கிடைக்­கப் பெற­வில்லை.

142 பேர் மட்­டுமே மறு­பு­றத்­தில் இருந் த­னர். நான் அந்த இரண்டு நாளும் நாடா­ளு­மன்­றத்­தி­லேயே இருந்­தேன். பொது­மக்­கள் ஐக்­கிய முன்­ன­ணி­யின் உறுப்­பி­னர்­கள் உண­வ­ருந்­தும்­போ­தும் ஓய்­வெ­டுக்­கும்­போ­தும் அவர்­க­ளைச் சந்­தித்­தேன்.

அவர்­க­ளது சிகிச்சை நிலை­யங்­க­ளுக்­குச் சென்­றேன். வீடு­க­ளுக்குக் கூடச் சென்­றேன். சபா­நா­ய­கர் அவர்­களே, அவ்­வா­றெல்­லாம் சென்று உரை­யா­டி­யும் ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்­பின் சம்­ம­தம் கிடைக்­கா­மை­யி­னால், நாம் மாலை 5 மணிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த வாக்­கெ­டுப்பை மாலை 7 மணிக்கு ஒத்தி வைத்­தோம். நீங்­கள் அறிக்­கை­களை வாசித்து பாருங்­கள்.

ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே கூட்டு அரசு நிறு­வப்­பட்­டது

சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைத்­து­வத்தை நான் பொறுப்­பேற்­ற­தா­லேயே இவற்­றை­யெல்­லாம் செய்ய முடிந்­தது. நாம் தயா­ரித்த ஒப்­பந்­தத்­தில் கூட்­ட­ரசு எனத் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இரண்டு பிர­தான கட்­சி­க­ளான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஐக்­கிய தேசிய கட்­சி­யும் இணைந்து நிர்­வ­கிக்­கும் அர­சாங்­க­மா­கும். கட்­சி­யில்­லா­மல் உறுப்­பி­னர்­கள் வரு­வார்­கள். கட்­சி­யி­ருக்­கும் இடத்­தி­லேயே அர­சாங்க தரப்பு உறுப்­பி­னர்­க­ளும் இருக்க வேண்­டும்.

ஏனைய கட்­சி­யி­லுள்­ள­வர்­கள் அப்­படி வரு­வார்­களா?. 19ஆவது திருத்­தச்­சட்­டத்­துக்கு ஆத­ர­வாக நாடா­ளு­மன்­றத்­தின் 225 பேரில் 215 பேரின் வாக்­குளை நாம் பெற்­றோம். ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்­பின் 142 பேரில் சரத் வீர­சே­கர ஆத­ர­ வ­ளிக்­க­வில்லை. ஏனைய 141 வாக்­கு­க­ளை­யும் பெற்­றோம்.

பல ஆண்­டு­க­ளாக சுகா­தார அமைச்­சர் என்ற வகை­யில் நான் போரா­டிக்­கொண்­டி­ருந்த ஒள­டத சட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­தில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றி­னோம். ரவி­யின் வரவு செல­வுத் திட்­டத்தை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆத­ர­வின்றி அங்­கீ­க­ரிக்க முடி­யாது.

100 நாள் திட்­டத்தை 100 நாள்­க­ளுக்­குள் நிறை ­வேற்ற முடி­யாது போனது. 9ஆம் திகதி அரச தலை­வ­ராகப் பத­வி­யேற்ற நானும் தலைமை அமைச்­ச­ராகப் பத­வி­யேற்ற ரணி­லும் இணைந்து ஆகஸ்ட் 15 வரை தேர்­தலை நடத்த முடி­யா­மற் போனது. 8ஆம் மாதம் நாடா­ளு­மன்­றத்தைக் கலைத்­த­தன் பின்­னர் விரை­வில் தேர்­தலை நடத்­து­மா­றும் கோரப்­பட்­டது.

மத்­திய வங்கி சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய பாரா­ளு­மன்றக் குழு­வைக் கலைக்க வேண்­டும் என்­ப­தா­லும், அத­னைச் செய­லி­ழக்­கச் செய்ய வேண்­டும் என்­ப­தா­லுமே பாரா­ளு­ மன்­றத்­தைக் கலைத்­தார்­கள் என­வும் அப்­போது குற்­றஞ் சாட்­டப்­பட்­டது.

இந்­தக்­கா­லப்­ப­கு­தி­யில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­டன் எத்­தனை சட்­டங்­கள் நிறை­வேற்­றப் பட்­டன? வரவு செல­வுத் திட்­டம் நிறை­ வேற்­றப்­பட்­டது? 19ஆவது திருத்­தம் நிறை­வேற்­றப் பட்­டது. மனித உரி­மை­கள் பற்­றிய சர்­வ­தேச அறிக்­கை­யில் இலங்­கை­யில் மனித உரி­மை­கள் ஆணைக்­குழு இன்று சிறந்த உலகத் தரத் து­டன் செயற்­ப­டு­வ­தாக குறிப்­பி­டப் பட்­டி­ருந்­தது.

19ஆம் திருத்­தத்­தி­னூ­டா­கவே அவற்­றை­யெல்­லாம் எம்­மால் நிறை­வேற்ற முடிந்­தது.

சுதந்­தி­ரக்­கட்­சி­யின் தலை­மைப் பொறுப்பை ஏற்­ற­தன் மூலமே பல­வற்றை நிறை­வேற்ற முடிந்­தது

சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைப்­பொ­றுப்பை நான் ஏற்­றி­ருக்­கா­வி­டின் இவற்­றை­யெல்­லாம் நிறை­வேற்ற முடி­யாது போயி­ருக்­கும். அதனை நான் பல­வந்­த­மா­கக் கேட ்டுப் பெற­வில்லை. சிலர் நான் எடுத்­துக்­கொண் டேன் எனக் கூறு­கின்­ற­னர்.

கட்சி உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் மகிந்த ராஜ­பக்ச தலை­மைப்­பொ­றுப்­பைக் கைய­ளிக்க தயார். நீங்­கள் ஏற்­றுக்­கொள்­ளுங்­கள் எனக் கூறி­னார் கள். 47 ஆச­னங்­க­ளைச் கொண்டு எவ்­வாறு அர­சாங்­கத்தை கொண்டு செல்­வது என நான் யோசித்­தேன்.

47 வாக்­கு­களை வைத்­துக் கொண்டு எவ்­வாறு சட்­டங்­களை நிறை­வேற்­ற­லாம்? 19ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­ற ­லாம்? நிதி­ய­மைச்­ச­ரின் வரவு செலவு திட்­டத்தை எவ்­வாறு நிறை­வேற்­ற­லாம்? இவை எத­னை­யும் செய்ய முடி­யாது.

சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் அமைச்­ச­ர­வை­யில் இருப்­ப­தால் நாட்­டுக்­குப் பொருத்­த­மற்ற எத்­தனை விட­யங்­க­ளைத் தவிர்த்­தேன் என்­பதை நான் அறி­வேன். அமைச்­ச­ர­வை­யில் இருந்த ரவிக்­கும் தல­தா­வுக்­கும் ஞாப­க­மி­ருக்­கு­மென நான் கரு­து­கி­றேன்.

நாட்­டி­லுள்ள சகல அரச வங்­கி­க­ளின் பணத்­தை­யும் தனி­யார் வங்­கி­க­ளுக்கு விடு­விக்க அமைச்­ச­ர­வைப் பத்­தி­ர­மொன்று கொண்­டு­வ­ரப்­பட்­டது. நான் அதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­த­தால், 3 மாதங்­கள் வரை அது அமைச்­ச­ர­வை­யி­லேயே தாம­திக்க வைக்­கப்­பட்­டது. நான் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வே­யில்லை.

அந்த யோசனை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருப்­பின், இன்று இலங்கை வங்கி இருந்­தி­ருக்க வாய்ப்பே இல்லை. மக்­கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்­றும் அரச ஈட்டு முத­லீட்டு வங்கி ஆகி­ய­ன­வும் இல்­லாது போயி­ருக்­கும். தனி­யார் வங்­கி­களே காணப்­ப­டும். என்­னால் இது­போன்ற பல விட­யங்­களை குறிப்­பிட முடி­யும்.

1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே நான் சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் இணைந்து கொண்­டேன். 1967ஆம் ஆண்டு டிசம்­பர் மாதத் தில் சாதா­ரண தரம் எழு­தும்­போதே கட்­சி­யோடு இணைந்து கொண்­டேன். அப்­போது எனக்கு 16 வயது. அப்­போது முதல் சுதந்­தி­ரக் கட்­சி­யில் இருந்­த­தால் 2014ஆம் ஆண்டு நவம்­பர் 27ஆம் திகதி பொது வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யிட, ராஜ­பக்ச அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய போது நான் 47 வருட கால அர­சி­யல் வாழ்க்­கை­யைக் கொண்ட முதிர்ச்­சி­யான அர­சி­யல்­வா­தி­யா­கவே இருந்­தேன்.

இந்த மூன்­றரை வரு­ட­கால நிகழ்­வு­களை நீங்­கள் அறி­வீர்­கள். ஆனால் எனது சுயா­தீ­னத்­தன்மை, அறிவு, நேர்மை என்­ப­வற்­றோடு நான் கட்­டி­யெ­ழுப்­பிக்­கொண்ட அர­சி­யல் வாழ்க்கை இல்­லா­விட்­டால் , ஒரு­போ­தும் என்­னைப்­போன்ற ஒரு குடும்­பத்­தில் பிறந்­த­வர் ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வாய்ப்பே இல்லை.

எமது நாட்டை ஆட்­சி­செய்த 6 ஜனா­தி­ப­தி­க­ளுள் ஜனா­தி­பதி பிரே­ம­தாச மாத்­தி­ரமே சாதா­ரண குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர். ஆனால் அவ­ரும் நக­ரப் பிர­தே­சத்­தில் வாழ்ந்த, எனது குடும்­பத்தை விட பொரு­ளா­தார நிலை­யில் சிறப்­பாகக் காணப்­பட்ட குடும்­பத்தை சார்ந்­த­வ­ரா­வார்.

பொது வேட்­பா­ளரை தேர்ந்­தெ­டுத்து அர­சாங்­கத்தை அமைத்து மத்­திய வங்­கியை கொள்­ளை­யி­டு­மாறு சோபித தேரர் கூற­வில்லை. இந்த மூன்­றரை வரு­டங்­களைப் பற்றி நான் நிறைய விட­யங்­களைக் கூற வேண்­டும். ஆனால் கூற விரும்­ப­வில்லை. இது­போல இன்­னு­ மொரு சந்­தர்ப்­பம் கிடைத்­தால் கூறு­வேன்.

இந்த நாட்டை சிறந்­த­வொரு நாடாக மாற்ற, தூய்­மை­யான நிர்­வா­கத்தை ஏற்­ப­டுத்த, நல்­லாட்சி என்ற வாச­கத்தை அதே கருத்­து­டன் செயற்­ப­டுத்த வேண்­டும் என்ற நேர்­மை­யான எண்­ணத்­து­டன் வந்­த­வன் நான்.

ஆரம்­ப­கா­லம் முதலே அர­சி­ய­லில் விசு­வா­ச­மா­க­வும் அர்ப்­ப­ணிப்­பு­ட­னும் செயற் பட்டு வந்­துள்­ளேன்

சுகா­தார அமைச்­ச­ரா­க­வும், விவ­சாய அமைச்­ச­ரா­க­வும், இருந்­த­போது என்­னால் இயன்­ற­ளவு பணத்தை சம்­பா­தித்­தி­ருக்க முடி­யும். அதற்கு முன்­ன­ரும் எத்­தனை அமைச்­சுப் பத­வி­களை வகித்­தேன். ஆனால் என்­னைப் பற்­றிய தவ­றான விட­யங்­கள் தற்­போது பரப்­பப்­ப­டு­வ­த­னால், நான் மிகுந்த கல­லை­ய­டை­கின்­றேன்.

மக்­கள் எதிர்­பார்க்­கும் எந்­த­வொரு வழக்கு விசா­ர­ணை­க­ளும் இடம்­பெ­றா­த­தற்கு நானே கார­ணம் எனக் கூறு­கின்­ற­னர்.
சபா­நா­ய­கர் அவர்­களே, அமைச்­சர் ஏக்­க­நா­யக்க குரு­ணா­க­லை­யில் இருந்­த­போது வாக­னம் வழங்­கப்­பட்­டது தொடர்­பாக விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்­டும் என இந்த அர­சாங்­கத்­தி­டம் நாட்டு மக்­கள் எதிர்­பார்க்­க­வில்லை.

பிரி­யங்­கர ஜய­ரத்­ன­வின் மக­ளுக்கு நிய­ம­னம் வழங்­கப்­பட்­ட­தால் அவரை நீதி­மன்­றத்­திற்கு அழைத்து விசா­ரணை செய்ய வேண்­டும் என எதிர்­பார்க்­க­வில்லை.

அமைச்­சர் பௌசி ஒரு அமைச்­சி­லி­ருந்து மற்­று­மொரு அமைச்­சுக்கு செல்­லும்­போது வாக­னத்­தை­யும் எடுத்­துச் சென்­றார் என்ற விசா­ரணை மேற்­கொள்ள வேண்­டும் என எதிர்­பார்க்­க­வில்லை.

மக்­கள் எதிர்­பார்த்த விட­யங்­கள் எது­வும் நிறை­வே­றா­த­மைக்கு என்ன கார­ணம்? நான் இவற்­றைக் கூறத் தேவை­யில்லை. முடி­யு­மா­யின் நீங்­கள் அந்த மறைந்த விளை­யாட்டு வீரர் தாஜு­தீ­னின் குடும்ப உறுப்­பி­னர்­க­ளை­யும், அந்த முறைப்­பாட்­டிற்­காக செயற்­பட்ட வழக்­க­றி­ஞ­ரை­யும் அழைத்து விசா­ரித்து பாருங்­கள்.

நடந்­த­வற்றை அவர்­கள் கூறு­வார்­கள்.
இத்­த­கைய பல்­வேறு சம்­ப­வங்­களை கூற­லாம். மக்­கள் என்னை அரச தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­த­போது அவர்­கள் கொண்­டி­ருந்த எதிர்­பார்ப்­புக்­க­ளில் ஒரு பகுதி நிறை­வேற்­றப் பட்ட போதி­லும் பெரும்­பா­லா­னவை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

19ஆவது திருத்­தம், ஒள­டத சட்­டம் போன்ற நாட்­டுக்கு பொருத்­த­மான பல விட­யங்­கள் சிறி­லங்கா சதந்­தி­ரக் கட்­சி­யி­னால் நிறை­வேற்­றப்­பட்­டன. இன்று சகல நாடு­க­ளின் தலை­வர்­க­ளு­ட­னும், அர­சாங்­கங்­க­ளு­ட­னும் முன்­னொ­ரு­போ­தும் இல்­லாத வகை­யில் நட்­பு­டன் செயற்­ப­டக்­கூ­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது.

இதற்கு எமது அர்ப்­ப­ணிப்பே கார­ண­மா­கும்.
இதற்­காக நான் பெரு­ம­ள­வில் பாடு­பட்­டேன். அதிக அள­வி­லான அரச தலை­வர்­க­ளைச் சந்­தித்து நட்­பு­ற­வைக் கட்­டி­யெ­ழுப்ப முயற்­சித்­தேன். அத­னால் நாம் பல வெற்­றி­க­ளைப் பெற்­றுள்­ளோம். ஜன­நா­ய­கம் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது.

ஊடக சுதந்­தி­ரம் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­கள் தேவை­யான எல்­லாப் பொய்­க­ளை­யும் கூற­லாம். 3 வரு­டங்­க­ளாக என்ன செய்­தீர்­கள் என்று கூடக் கேட்­க­லாம்.

நாட்டு மக்­கள் எதிர்­பார்க்­கும் விட­யங்­களை நிறை­வேற்ற இன்­றும் நான் தயா­ராக உள்­ளேன்.

அவற்றை நிறை­வேற்­று­வ­தற்கு காணப்­ப­டும் தடை­கள், அவ­தூ­று­கள், நன்­ம­திப்­புக்கு பங்­கம் விளை­வித்­தல் என்­பவை தொடர்­பாக 47 வருட கால அர­சி­யல் வாழ்க்­கை­யில் பெற்­றுக்­கொண்ட அர­சி­யல் முதிர்ச்சி கார­ண­மாக நான் குழப்­ப­ம­டை­யாது காணப்­ப­டு­கின்­றேன்.

இன்று ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­கள் பற்றி பேச ஆரம்­பித்­துள்­ள­னர். நாட்­டிற்கு இத­னை­விட அதிக கொடு­மை­களை இழைக்க முடி­யாது. தேர்­தல் இடம்­பெ­றப்­போ­வது அடுத்த வருட இறு­தி­யி­லா­கும்.

இன்று அரச தலை­வர் வேட்­பா­ளர்­க­ளைப் பெய­ரிட்டு பிர­க­ட­னம் செய்­கின்­ற­னர். இத­னால் நாட்­டின் ஸ்திரத்­தன்மை பாதிக்­கப்­ப­டு­கின்­றது. தேர்­த­லுக்கு இன்­னும் ஒன்­றரை வருட காலம் இருக்­கை­யில் நாட்­டில் தேர்­தல் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளைச் செயற்­ப­ட­வி­டாது, ஊட­கங்­க­ளில் பல்­வே­று­பட்ட விட­யங்­களை வெளி­யி­டு­கின்­ற­னர். இவை தொடர்­பாக நாம் புரிந்­து­ணர்­வு­டன் செயற்­பட வேண்­டும்.

ஆயி­னும் இந்த மூன்­றரை வருட காலங்­க­ளாக இடம்­பெற்­று­வ­ரும் தவ­று­க­ளைச் சரி­செய்ய வேண்­டும். உண்­மை­யான விட­யங்­களை நாட்­டுக்கு வெளிப்­ப­டுத்த வேண்­டும். இந்த நிகழ்­வில் கலந்­து­கொள்ள வாய்ப்­புக் கிடைத்­த­தை­யிட்டு நான் மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்.

நான் இங்கு கூறிய விட­யங்­கள் தொடர்­பாக மேலும் தக­வல்­களை பெற என்­னோடு கலந்­து­ரை­யாட விரும்­பு­வர்­க­ளுக்கு என்­னோடு கலந்­து­ரை­யா­ட­லில் ஈடு­பட சந்­தர்ப்­பம் வழங்க நான் தயா­ராக உள்­ளேன்.

நன்றி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close