மொட்­டாந் தலைக்­கும் முழங்­கா­லுக்­கும் – முடிச்­சுப் போடும் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி!!

நாயொன்று தனது, உட­லில் எந்த இடத்­தில் கல்­லெ­றி­பட்டு வலித்­தா­லும், தனது பின்­னங்­கால்­க­ளி­லொன்­றையே நொண்­டி­ய­படி அங்­கும் இங்­கும் அலை­யு­மாம்.

அது­போன்று, அர­சி­ய­ல­ரங்­கில் செயற்­பட்டு, மக்­க­ளது ஆத­ரவை இழந்து, அவர்­க­ளால் அர­சி­ய­லில் இருந்து தூக்கி வீசப்­பட்ட முன்­னாள் அர­சி­யல் பி।ர­ப­லங்­கள் சிவனே என்று ஒரு பக்­கம் ஒதுங்­கிக் கொள்­ளா­மல், யதார்த்­தப் புரிந்­து­ணர்­வின்றி தம்­மைத் தற்­போ­தும் அர­சி­யல் பிர­ப­லங்­க­ளா­கக் கருதி கோமா­ளித்­த­ன­மான அர­சி­யல் செயற்­பா­டு­க­ளில்– அர­சி­ய­லில் அதி­கா­ரத்­து­டன் செயற்­ப­டும் தலை­வர்­க­ளுக்­குக் கடி­தம் வரை­வது, அர­சி­யல் நிலமை குறித்து விமர்­சித்து அறிக்கை விடு­வ­தென்று –கோமா­ளித்­த­ன­மான அர­சி­யல் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வ­தைக்­கா­ணக், கேட்க முடி­கி­றது.

அந்த வகை­யில் எமது இலங்கை  அர­சி­ய­ல­ரங்­கில் செயற்­பட்டு மக்­க­ளால் புறக்­க­ணிக்­கப்­பட்ட ஒரு சில முன்­னாள் தமிழ் அர­சி­யல் பிர­ப­லங்­கள் போன்றே, தமிழ் நாட்­டி­லும் ஒரு­சில தமிழ் அர­சி­யல் பிர­ப­லங்­கள் இன்­றும் கூடத் தம்மை மக்­க­ளது அபி­மா­னம் பெற்­ற­வர்­க­ளென எண்­ணிக் கொண்டு செயற்­ப­டு­வ­தைக் கண்டு அழு­வதா சிரிப்­பதா என்று எண்­ணத் தோன்­று­கி­றது.

அண்­மை­யில் தமிழ்­நாட்­டில் தூத்­துக்­கு­டி­யில் இடம்­பெற்ற ஸ்டெர்­லைட் ஆலை­யைச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு எதி­ரான போராட்­டம் வன்­மு­றை­யாக மாறி­ய­தும், பொலி­சா­ரின் துப்­பாக்­கிப் பி।ர­யோ­கத்­தில் பல பொது­மக்­கள் கொல்­லப்­பட்ட சம்­ப­வ­மும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

குறித்த வன்­மு­றைச் செயற்­பா­டு­க­ளின் பின்­ன­ணி­யில் விடு­த­லைப் புலி­க­ளின் பங்­கும் கணி­ச­மான அளவு இருந்­தி­ருக்­க­லாம் என தமி­ழ­கத்­தின் அர­சி­யல் கோமா­ளி­யான விமர்­சித்­துள்­ளார்.

இது மொட்­டந்­த­லைக்­கும் முழங்­கா­லுக்­கும் முடிச்­சுப் போடும் வகை­யி­லான கருத்து வௌிப்­பாடு என்­ப­தைச் சக­ல­ரு­ம­றி­வர். மக்­க­ளால் புறக்­க­ணிக்­கப்­பட்ட இத்­த­கைய அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தத்­த­மது அர­சி­யல் வெறு­மை­நிலை கார­ண­மாக அடிக்­கடி ஏற்­ப­டும் ஒரு­வித மனோ வியாதி நிலையே இது­வென எண்­ணத்­தோன்­று­கி­றது.
ப.உருத்­தி­ரன்
கோப்­பாய்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close