மே-1 பௌத்தர்களுக்கா தொழிலாளர்களுக்கா?

“உபசம்பதா மங்களய’ என்பது வைகாசி மாத பூரணை அன்று நடைபெறுகின்ற பௌத்தர்களின் முக்கிய சடங்காகும். இதுவே வெசாக் என்று சுட்டப்படுகிறது. இந்தச் சடங்கானது எதிர்வரும் 29.5.2018 அன்றுதான் நடைபெற இருக்கிறது.

29.4.2018இல் வந்த பூரணையானது உபசம்பதாவுக்கு உரிதல்ல. இங்குள்ள பௌத்த அமைப்புக்களும் இதையேதான் சொல்கின்றன. ஆனால் இந்த நாளைக் குறித்த சடங்குக்குரியதாகத் திணித்தமை மாத்திரமன்றி அதை ஒரு நாள், இரண்டு நாள்கள் என்று நின்றுவிடாமல் மூன்று நாளுக்குள்ளும் மீண்டும் திணித்து மே1 வரைக் கொண்டாடி முடித்துள்ளார்கள்.

ஏற்கனவே துறவிகளாக உள்ளவர்களில் ஐந்து பேரையாவது தரம் உயர்த்துவதாகவும் புதிதாகப் பிக்குகளாகச் சேர இருப்பவர்களை வரவேற்பதாகவும் இந்தநாள் அமைகிறது.

இதன் நிமித்தமே அஸ்கிரிய, மல்வத்த ஆகிய இரண்டு பீடங்களும் உபசம்பதா விடயத்தில் வருடா வருடம் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த ‘உபசம்பதா’ என்ற சடங்கு கீர்த்தி சிறி இராஐசிங்கன் காலத்திலிருந்து கிரமமாக ஒழுங்கமைக்கப்பட்டது. இந்த நடைமுறை காரணமாகவே வருடா வருடம் பௌத்த துறவிகளின் தொகை அதிகரித்து வருகிறது.

இந்த முக்கியத்து வம் வாய்ந்த சடங்குக்கு உரிய பூரணை அடுத்த மாதம் தான் எனப் பௌத்த பீடங்கள் தீர்மானித்திருந்தன. ஆனால் அரசோ, மே முதலாம் திகதியை வெசாக் தினமாகவும் மே ஏழாம் திகதியைத் தொழிலாளர் தினமாகவும் மாற்றிய மைத்திருக்கிறது. இந்த மாற்றியமைப்பானது அஸ்கிரிய, மல்வத்த ஆகிய இரண்டு பௌத்த பீடங்களையும் அவமதித்த தாகவும் ஆகிவிட்டது.

இதுபோன்ற பௌத்த முன்னீட்டுக்கு இதுவரை குறித்த பீடங்கள் கங்கணம் கட்டி வந்ததும், அரசுகளை அதன்படி ஆட்டுவித்தமையுமே வரலாறு. இப்போது அந்த நிலமை மாறியிருக்கிறது.

மே முத­லாம் திகதி உல­கம் முழு­வ­தும் தொழி­லா­ளர் தின­மா­கப் பின்­பற்­றப்­ப­டு­வது தெரிந்­ததே. உல­கி­லுள்ள அனைத்து நாடு­க­ளி­லும் அந்த நாள் விடு­முறை நாளா­கும். ஆனால், இலங்கை அரசு மட்­டும் அந்த நாளை ஒரு வேலை நாளாக அல்­லது அர­ச­செ­யற்­பாட்டு நாளாக அறி­வித்­தி­ருந்­தது.
அது­போக, வெசாக்­குக்­காக அந்த நாளை ஒதுக்கி இருந்­தால் கூட அந்த நாள் விடு­முறை நாளாக இருந்­தி­ருக்­கும். 29.4.2018 அன்­றைய நாள் வெசாக் தின­மாக அறி­விக்­கப்­பட்­டது. அதற்­க­டுத்த 29, 30ஆம் திகதி ஆகிய இரண்டு நாள்­க­ளில் அந்த நிகழ்வை நடத்தி முடித்­தி­ருக்க முடி­யும். ஆனால் அதை மூன்­றா­வது நாளும் நீடித்­த­தன் மூலமே மே தினத்­தைக் குழப்ப முடிந்­தது. அத்­து­டன் பௌத்த கோட்­பா­டு­க­ளை­யும் பன்­னாட்டு நடை­மு­றை­க­ளை­யும் இலங்கை அரசு மீறி­யி­ருக்­கி­றது.
தனக்கு ஏற்­ற­வாறு மாற்­றி­ய­மைத்­தி­ருக்­கி­றது அரசு
அரச தலை­வ­ரின் கட்­சி­யும், தலைமை அமைச்­சர் சார்ந்­துள்ள கட்­சி­யும் கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் எதிர்­பார்த்­த­ வெற்றியிலும் பார்க்க வீழ்ச்­சி­யையே சந்­தித்­தி­ருந்­தன. இந்­த­நி­லை­யில் இந்த மே தின மாற்­றம் என்­பது கடு­மை­யான விமர்­ச­னங்­க­ ளை­யும், மக்­கள் எழுச்­சி­யை­யும் ‘நல்­லாட்சி’ என்று சொல்­லப்­ப­டும் அர­சுக்கு எதி­ராக எழச் செய்­தி­ருக்­கி­றது. பௌத்த மதத்­துக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுப்­ப­தா­கக் காட்டி மே தினம் முழு­அ­ள­வில் மேற்­கொள்­ளப்­ப­டாது தடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
தமது உரி­மை­களை உரத்­துக் கூறக்­கூ­டிய தமக்­கான சட்ட பூர்வ அதி­கா­ரம் உள்ள நாளொன்­றைத் தொழி­லா­ளர்­கள் இழந்­தி­ருக்­கி­றார்­கள். பல தொழிற்­சங்­கங்­கள் அர­சின் பிடிக்­குள் அல்­லது அரசு சார்ந்து செயற்­ப­டு­வ­தால் தொழி­லா­ள­ருக்­குப் பாதா­க­மான இந்த முடிவை அந்­தந்­தத் தொழிற்­சங்­கங்­கள் எதிர்க்க வில்லை.  அதே­வேளை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, பண்­டா­ராநாயக்க ஞபா­கார்த்த பன்­னாட்டு மாநாட்டு மண்­ட­பத்­தில், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­ யின் மூத்த தொழிற்­சங்­க­வா­தி­களை நினைவு கூரும் நிகழ்வு ஒன்­றில், மே தினத்­தின் முக்­கி­யத்­து­வம் பற்றி உரை­யாற்­றி­ருப்­பது வேடிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இதி­லி­ருந்து இந்த அரசு தமக்கு ஏற்­ற­வாறு மே தினத்தை வடி­வ­மைத்­தி­ருக்­கி­றது என்­பதே வெளிப்­படை.
முத­லா­ளி­கள் கொண்­டா­டும் தொழி­லா­ளர் தினம்
மே தின­மா­னது 1886 சிக்­காகோ தீர்­மா­னத்­தின் பின் உல­கம் முழு­வ­தும் நடை­மு­றைக்கு வந்­தது. இந்­தத் தினத்தை உல­கத் தொழி­லா­ளர்­கள் போரா­டியே பெற்­றார்­கள். உலக தொழி­லா­ளர் தின­மா­க­வும், உலகத் தொழி­லா­ளர்­கள் தமது உரி­மை­க­ளைப் பெற்ற தின­மா­க­வும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. ஐரோப்­பா­வில் கைத்­தொ­ழில் புரட்சி ஏற்­பட்­ட­தன் பின்­னர் தொழி­லா­ளர் ஓய்­வின்­றிப் பணி­யாற்ற வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டது.
தொழி­லா­ளர்­கள் தங்­கு­மி­டங்­க­ளில் இருந்த மெத்­தை­கள் எப்­போ­தும் சூடா­கவே இருந்­தன. ஒரு தொழி­லாளி நித்­தி­ரை­யில் இருந்து எழும்­போது இன்­னொரு தொழி­லாளி அதில் படுக்­கும் நிலை­யா­லேயே அவை சூடா­கிக் காணப்­பட்­டன. சிக்­காக்கோ தீர்­மா­னத்­தின்­படி ஒரு தொழி­லாளி 8 மணி நேரம் பணி­யாற்­றி­னால் போதும் என­வும் அவர்­க­ளுக்­கான ஊதி­யம் இவ்­வ­ளவு தான் என­வும் எட்­டப்­பட்­டது.
அதன் வழி கடைப்­பி­டிக்­கப்­ப­டும் இந்த மே 1, தொழி­லா­ளர் தமது பிரச்­சி­னை­க­ளை­யும் தேவை­க­ளை­யும் சட்ட பூர்­வ­மாக வெளிப்­ப­டுத்­தும் நாளா­கப் பின்­பற்­றப்­பட்­டது. 19ஆம் நூறுற்­றாண்­டின் பின்­ப­கு­தி­யில் தொழிற்­சங்­கங்­கள் உரு­வாக்­கப்­பட்­ட­தால் இந்­தத் தொழிற்­சங்­கள் ஊடாக சம்­ப­ளக் கோரிக்கை, இழப்­பீ­டு­கள், நஷ்ட ஈடுகள், சட்­ட­ந­ட­வ­டிக்­கை­கள் எனப் பல விட­யங்­கள் நடை­மு­றைக்கு வந்­தன.
தொழி­லா­ளர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைக் கையாள்­வ­தற்­கென தொழில் நீதி­ மன்­றங்­கள் கூட உரு­வாக்­கப்­பட்­டன. இந்த நாள் கடைப்­பி­டிப்­பில் கால்­மார்க்ஸ், ஏங்­கல்ஸ், லெனின் ஆகிய மூவ­ரின் படங்­க­ளும் தொழி­லா­ளர் சின்­ன­மும் முதன்­மைப்­ப­டுத்­தப்­பட்டு ஊர்­வ­லங்­க­ளில் எடுத்­துச் செல்­லப்­பட்­டது. கார­ணம் இந்த மூவ­ரும் தொழி­லா­ளர் உரி­மை­க­ளுக்­கா­கக் குரல் கொடுத்­த­வர்­கள் என்­ப­தால் தான். இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளின் பய­னா­கவே கைத்­தொ­ழில் மய நாடு­க­ளுக்கு இயன்­ற­ள­வில் தொழி­லா­ளர் உரி­மை­க­ளைப் பேண வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டது.
இதன் விளை­வா­கவே ‘ நலன்­புரி அர­சு­கள்’ உரு­வாக்­கப்­பட்­டன.
மேற்­படி கடப்­பா­டு­கள் இலங்­கைத் தொழி­லா­ளர்­கள் விட­யத்­தி­லும் படிப்­ப­டி­யாக உயர்த்­தப்­பட்டு வரு­கின்­ற­போ­தி­லும் தொழி­லா­ளர்­களை அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­ க­ளைப் பேச விடாது தொழில் வழங்­கு­நர்­களே மே தினத்தை ஒழுங்கு செய்­யும் நிலை தொடர்ந்து கொண்­டு­தான் இருக்­கி­றது. இது மே தினம் என்ற உள்­ள­டக்­கத்­துக்கு முரண்­பட்­ட­தா­கும்.
பௌத்­தர்­க­ளுக்கோ, 
அர­சி­யல்­வா­தி­க­ளுக்கோ உரி­ய­தல்ல மே1.

மலை­ய­கத் தொழி­லா­ளர்­கள் சம்­பள உயர்வு கோரி நீண்­ட­கா­லம் போராடி வரு­கின்­ற­னர். அவர்­க­ளுக்­கான நலன்­புரி வேலைத்­திட்­டங்­கள் போது­மான அள­வில் வழங்­கப்­ப­ட­வில்லை. அவர்­க­ளின் இந்த நிலைக்கு அவர்­க­ளைப் பிர­தி­ நி­திப்­ப­டுத்­தும் தொழிற்­சங்­கங்­களே முக்­கிய கார­ண­மா­கும். ஆனால் மே தினத்தை இந்­தத் தொழிற்­சங்­களே முன்­னின்று நடத்­து­கின்­றன. இதன் மூலம் தொழி­லா­ளர்­க­ளின் பிரச்­சி ­னை­கள் தீர்க்­கப்­ப­ட­ போ­வ­தில்லை. தொழி­லா­ளர்­கள் உல­கம் முழு­வ­தும் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்­கான சிறப்பு நாளே மே 1.  அந்த நாளை அவர்களே கொண்டாட வேண்டும். அந்த நாளைக் கொண்­டாட விடாது அவர்­க­ளின் குரல் வளையை நசிப்­பது என்­பது அனைத்து மனித உரிமை மீறல்­களை விட­வும் உச்­ச­மா­னது. அதையே இந்த அர­சும் செய்­தி­ருக்­கி­றது.

வினோத், கண்டி
தொழி­லா­ளர் தினத்தை அவங்­கட இஸ்­ரம்­போல மாத்­தி­ய­மைக்­கி­றது சரி­யில்ல. அதை அந்த நாளி­லை­தான் கொண்­டா­டி­யி­ருக்­க­ணும். அதோட இதத் தொழி­லா­ளிங்­க­தான் கொண்­டா­ட­ணும். மற்­ற­வங்க, கட்­சி­யள் கொண்­டா­டு­றது சரி­யில்­லத்­தானே…? இல்­லாட்டி ஏதா­வது அமைப்­பாச் சேர்ந்து கொண்­டா­ட­லாம். முதல்­லேயே தொழி­லா­ளர் தினத்த இங்க தொழி­லா­ளர்­கள் கொண்­டா­டு­றது குறைவு, இப்ப அந்­தத் தினத்­தி­லை­யும் கொண்­டாட முடி­யாம இருக்கு.

க. அம­ர­சிங்­கம், மகாறம்பைக்குளம்
நிறைய அடி­மட்­டத் தொழி­லார்­க­ளி­ருக்­கிற இந்த நாட்­டில அவைக்­கு­ரிய நலன்­கள், வசதி வாய்ப்­புக்­கள் செய்து கொடுக்­கி­ற­தில்லை. மீன் பிடித் தொழி­லைப் பொறுத்­த­ள­வில பல பிரச்­சி­னை­யள் இருக்­குது. முக்­கி­யமா பிடிக்­கிற மீனு­க­ளச் சரியா விற்க முடி­யி­ற­தில்ல. இடைத்­த­ர­கர்­களா இருக்­கி­ற­வைக்­கும் யாவா­ரி­ய­ளுக்­குமே அதிக லா­பம் கிடைக்­குது. இருக்கிற இடத்­தில இருந்து கொண்டு விலை சொல்­லு­றார்­கள். நாள் முழுக்க வெயி­லி­லும் மழை­யி­லும் கஷ்­டப்­பட்ட நாங்­கள் வெறுங்­கை­யு­ட­னேயே வீட்ட போறம். இத முழு நேரத் தொழி­லாப் பல குடும்­பங்­கள் செய்து வாறம். இதை நம்­பியே எமது குடும்­பங்­கள் இருக்­கின்­றன. ஆனால் எமக்­கு­ரிய பின்­னு­த­வி­களோ, அர­வ­ணைப்போ வழங்­கி­ற­தில்ல. இந்த நாளி­லை­யா­வது இது­க­ளப் பற்­றிக் கதைப்­பாங்­கள் எண்டு பாத்­தால்… மேடைபோட்டு என்னென்னவோ கத்துறாங்கள்?

கு. ராஜி­னி­தேவி, யாழ்ப்பாணம்
தொழி­லா­ளர் தினத்த அந்த நாளில தானே கொண்­டாட வேணும்…? அது­வும் தொழி­லா­ளர்­கள்­தானே கொண்­டா­ட­வே­ணும்…? அர­சி­யல் கட்­சி­களை விட்­டிட்­டுத் தொழி­லா­ளர் அமைப்­புக்­கள் மூல­மாக் கொண்­ட­ட­லாம் தானே…? தொழி­லா­ளர் தினத்த நான் அறிஞ்ச வரை­யில இது வரைக்­கும் தொழி­லா­ளர்­கள் மனப்­பூர்­வ­மாக் கொண்­டா­டி­னதே இல்ல. கூட்­டங்­க­ளுக்­குத் தொழி­லா­ளர்­க­ளத் தெண்­டிச்சு அழைச்­சுக் கொண்­டு­போன காலம் கொஞ்­சம் மாறிற்று. மாறி­ன­தாலை இப்ப இதைக் கொண்­டா­டு­ற­திலை முக்­கால்­வா­சிப்­பேர் தொழி­லா­ளர்­களே இல்ல. அண்­டாடு உழைக்­கிற அடி­மட்ட ஆக்­க­ளுக்கு இதிலை ஈடு­பாடு இல்லை. இதை அப்­பிடி ஆக்­கிப்­போட்­டி­னம்.

ம.பெரி­ய­சாமி, கோவில்புதுக்குளம்
இன்று தொழி­லார்­க­ளின் வேலை நேர­மாக 8 மணித்­தி­யா­லம் உள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது ஆனால், அவ்­வாறு எங்­குமே நடை­மு­றை­யில் இருப்­பது போலத் தெரி­ய­வில்லை. நாம் எல்­லாம் நேரம் காலம் பார்க்­கா­மல் உழைக்­கி­றோம். ஆனால் உழைப்­புக்­கேற்ற வரு­மா­னம் எமக்­குக் கிடைப்­ப­தில்லை. உற்­பத்­திச் செல­வு­கள் அதி­க­ரித்து விட்­டன. அத்­து­டன் பொருள்க­ளின் விலை ஏற்­றம் கார­ண­ மாக அன்­றாட வாழ்க்­கையைக் கொண்டு நடத்­து­வ­தில் மிக­வும் பல கஷ்டங்­க­ளைச் சந்­தித்து வரு­கி­றோம். இங்கு தொழி­லார்­க­ளின் நலன்­களை பற்றி யாருமே சிந்­திப்­ப­தில்லை. முத­லா­ளி­க­ளையே அரசு பாது­காத்து வரு­கி­றது எனவே அனைத்து தொழி­லா­ளர்­க­ளும் தமது உரி­மை­களை பெறு­வ­தற்கு ஒன்று பட­வேண்­டும்

வா.பிர­தீ­பன்,வவுனியா
சாத­ர­ணமா ஒரு நாளைக்கு 10மணித்­தி­யா­லங்­கள் வேலை செய்­யி­றம். ஆனா அதுக்­கேற்ற வரு­மா­னம் இல்ல. அதால நிறை­யக் கஸ்­ரம். விலை­யெல்­லாம் கூடிப்­போட்டு வரு­மா­னம் அப்­பி­டி­யே­தா­னி­ருக்­குது. சில வேலை­ய­ளுக்கு மிசி­னு­கள் வந்­திற்று. முன்ன போல இல்ல. வேலை­ய­ளும் அப்­பிடி இப்­பிடி. இப்­பி­டியே போனா எங்­க­ளுக்கு நடுத்­தெ­ரு­தான். அர­சாங் கங்­கள் எங்­க­ளைப் பற்­றிக் கவ­லைப்­ப­டு­றது போல தெரி­யெல்ல. தொழி­லா­ளர் தின­மெண்டு வாற ஆக்­க­ளும் அப்­பி­டித்­தானே…

ஐ.எல்.எம்.பாறூக் – கல்முனை
தொழி­லா­ளர் வர்க்­கம் குருதி சிந்தி, சிக்­காக்கோ நக­ரில் அறிவித்த மேதி­னம், பன்னாட்டு ரீதி­யாக மே முத­லாம் திக­தியே கடைப்பிடிக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் இலங்­கை­யில் இந்த தொழி­லா­ளர் தினம், மே7ஆம் திக­திக்கு பின்­தள்­ளப்­பட்­டமை இந்தத் தி­னத்­தின் மகி­மையை மழுங்­க­டிக்­கச் செய்­யும் செயல் மட்­டு­மன்றி, சமா­தா­னம், இன நல்­லி­ணக்­கம் பற்றி விதந்­து­ரைக்­கும் கூட்டு அரசு, இது பௌத்த நாடே­தான் எனக் கட்­டி­யம் கூறும் செயல்­பா­டு­மா­கும்.அர­சி­யல்­வா­தி­கள் மேதின மேடை­க­ளில் முழங்­கும் வீராப்­பு­கள் வெறும் வெற்­றுப் பேச்­சு­க­ளே­தான். இவர்­கள் என்­ன­தான் செய்­தார்­கள்? தொழி­லாளர் வர்க்­கம் இவர்­கள் மூலம் கண்ட விமோ­ச­னம்­தான் என்ன? அவர்­கள் தம்­ம­னச்­சாட்­சி­யைத் தொட்­டுக்­கேட்­கட்­டும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close