மைத்­தி­ரி­யு­டன் சந்­திப்பு நடக்­க­வில்லை

அரச தலை­வ­ரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில் நேற்­றுக் காலை புத்­தாண்டு நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. அதன்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கும், அரச தலை­வ­ருக்­கும் இடையே பேச்சு நடக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­ போ­தும் நேற்று அவ்­வா­றான சந்­திப்பு நடை­பெ­ற­வில்லை.

புத்­தாண்டு நிகழ்­வில் கலந்­து­கொண்ட பின்­னர் அவர்­கள் அரச தலை­வ­ரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வர் என்­றும், அதி­கா­ரப் பகிர்வு ஆவ­ணம் தொடர்­பாக ஆரா­யும் கூட்­டத்தை ஏற்­பாடு செய்­வது தொடர்­கவே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் அரச தலை­வ­ரி­டம் பேச இருந்­த­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

புத்­தாண்டு நிகழ்­வில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோர் கலந்து கொண்­டி­ருந்­த­னர். எனி­னும் அரச தலை­வ­ரு­ட­னான தனிப்­பட்ட சந்­திப்பு நேற்று நடக்­க­வில்லை. நிகழ்­வில் கலந்­து­கொண்ட இரா.சம்­பந்­தன் சிறிது நேரத்­தி­லேயே அங்­கி­ருந்து புறப்­பட்­டு­விட்­டார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

You might also like