மோடிக்கு குடை பிடித்த ஜனாதிபதிகள்!!

கிர்கிஸ்தான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற அந்த நாட்டு ஜனாதிபதி குடை பிடித்து வரவேற்று அழைத்துச் சென்றுள்ளார்.

ஏற்கனவே, இலங்கை வந்த இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடைபிடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றுள்ளார்.

அவரை கிர்கிஸ்தான் ஜனாதிபதி சூரோன்பே ஜீன்பெகோவ் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது திடீரென மழை தூற, இந்திய பிரதமர் மோடிக்கு குடைபிடித்து அழைத்துச் சென்றுள்ளார்.

You might also like