யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மற்­றொரு மகு­டம்!!

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மூளை நரம்­பி­யல் சிகிச்சை நிபு­ண­ராக மருத்­துவ கலா­நிதி ஆதித்­தன் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இவ­ரது சேவை­யா­னது வடக்கு – கிழக்கு மாகாண மக்­க­ளுக்கு கிடைத்த ஒரு பெரும் வரப்­பி­ர­சா­த­மாக அமைந்­துள்­ளது.

இது­வரை கால­மும் இந்­தச் சேவை­யா­னது இந்­தப் பிர­தேச மக்­க­ளுக்கு மறுக்­கப்­பட்டே வந்­தது. அத­னால் இந்­தப் பிர­தேச மக்­கள் பல சிர­மங்­க­ளின் மத்­தி­யி­லும் பல லட்­சம் ரூபா செலவு செய்து கொழும்பு, அநு­ரா­த­பு­ரம் போன்ற நக­ரங்­க­ளுக்­குச் சென்று மூளை நரம்­பி­யல் அறு­வைச் சிகிச்­சையை மேற்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்டு வந்­தது.

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சாலை நோயா­ளர்­களை இந்­தச் சிகிச்­சை­யைப் பெறு­வ­தற்கு அநு­ரா­த­பு­ரம் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­தது. இந்த நிலை காலா­கா­ல­மாக நீடித்து வந்­த­தன் நிமித்­தம் மருத்­து­வ­ம­னை­யின் பணிப்­பா­ளர்­கள் சத்­தி­ய­மூர்த்தி மேற்­கொண்ட துரித நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக போதனா வைத்­தி­ய­சா­லைக்­குக் குறிப்­பிட்ட வைத்­திய நிபு­ணர் நிய­மிக்­கப்­பட்­ட­தன் பய­னாக இன்று மூளை நரம்­பி­யல் அறு­வைச் சிகிச்­சை­கள் அனைத்­தும் தாம­த­மின்றி நிறை­வேற்­றப்­பட்டு வரு­வ­தை­யிட்டு மக்­கள் பெரும் மகிழ்ச்சி அடை­வ­து­டன் மருத்­துவ கலா­நிதி ஆதித்­த­னுக்­குத் தமது நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றார்­கள்.

வே.ம.இந்­தி­ர­நா­தன், நல்­லூர் வடக்கு

You might also like