யுனைட்ரெட் அணி துடுப்பாட்டத்தில் சாதனை!!

கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச்சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட துடுப்பாட்ட அணிகளுக்கு இடையிலான மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரில், யுனைட்ரெட் விளையாட்டுக்கழக அணி ஓர் இலக்கினால் வெற்றி பெற்றது.

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் யுனைட்ரெட் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து உதயதாரகை விளையாட்டுக்கழக அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய உதயதாரகை விளையட்டுக் கழக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 43.5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழத்து 166 ஓட்டங்களைப் பெற்றறனர்.

167 ஓட்டங்களைப் இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யுனைட்ரெட் விளையாட்டுக் கழக அணியினர் 31.4 பந்துப்பரிமாற்றங்களில் நிறைவில் 9 இலக்குகளையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றனர்.

You might also like