ரணி­லு­ட­னான இணக்­கப்­பாடு என்ன?

500

மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரிப்­பது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுத்­தா­யிற்று. அதே­போன்று ஜே.வி.பியும் அத்­த­கைய முடிவை எடுத்­து­விட்­டது. எனவே இந்த இரு தரப்­பு­க­ளி­ன­தும் ஆத­ர­வு­டன் மகிந்த ராஜ­பக்ச தோற்­க­டிக்­கப்­பட்­டால், அது மறை­மு­க­மாக ரணி­லுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவே முடி­யும். இத்­த­கை­ய­தொரு நிலை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ரணி­லி­டம் இருந்து எதைப் பெற்­றுக்­கொள்­ளப் போகி­றது என்­ப­தில் அது கவ­னம் செலுத்­தி­யி­ருக்­கி­றதா?

கொழும்­பில் ஓரிரு நாள்­க­ளுக்கு முன்­னர் நடந்த தேசிய தீபா­வளி நிகழ்­வில் உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளில் இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­களை எடுத்­தி­ருக்க வேண்­டிய ரணில் அத­னைச் செய்­ய­வில்லை என்று முழுப் பழி­யை­யும் அவர் மீது தூக்­கிப் போட்­டார். அது முற்­றி­லும் உண்மை என்­றில்­லா­விட்­டா­லும் மைத்­தி­ரி­யின் கூற்­றில் உண்மை இல்­லா­ம­லும் போக­வில்லை.

நாடா­ளு­மன்­றத்தை அர­ச­மைப்­புச் சபை­யாக மாற்­றிய கையோடு, ராஜ­பக்­சாக்­கள் தோல்­வி­யால் துவண்­டி­ருந்த சம­யத்­தில் புதிய அர­ச­மைப்­புக்­கான பணி­க­ளைத் துரி­த­மாக நகர்த்தி அந்­தப் பணியை முடித்­தி­ருக்­க­வேண்­டி­ய­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே. அதைச் செய்­யா­மல் வழி­ந­டத்­தல் குழு­வில் மகிந்த தரப்­பி­னர் இழுத்த இழுப்­புக்­கெல்­லாம் ஆடி, ஆடி மூன்­றரை ஆண்­டு­க­ளா­கப் புதிய அர­ச­மைப்பு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­ப­டா­மல் இருப்­ப­தற்கு ரணி­லும் பாத்­தி­ர­வாளி என்­ப­தில் மாற்­றுக் கருத்து இருக்­க­மு­டி­யாது.
அதே­போன்று பல சம­யங்­க­ளில் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளை­யும் ரணில் நிறை­வேற்­ற­வில்லை. ரணி­லுக்­கும் மைத்­தி­ரிக்­கும் இடை­யில் உற­வு­கள் மோச­மாகி, மைத்­தி­ரி­யின் ஆத­ர­வு­டன் ரணில் மீதான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­திற்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போ­து­கூட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் வலி­யு­றுத்­தப்­பட்ட 10 கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­த­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. ஆனால், அதன் பின்­னர் அந்­தக் கோரிக்­கை­க­ளில் ஒன்­றைக்­கூட அவர் நிறை­வேற்­ற­வில்லை.

அப்­ப­டிப்­பட்ட நிலை­யில் மகிந்­தவை எதிர்ப்­ப­தன் மூலம் ரணிலை ஆத­ரிப்­ப­தால் தமிழ் மக்­க­ளுக்­குக் கிடைக்­கப் போகும் நன்மை என்ன என்­ப­தைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தெளி­வு­ப­டுத்த வேண்­டும். ஒரு­வேளை மீண்­டும் தலைமை அமைச்­ச­ரா­கும் வாய்ப்பு ரணி­லுக்­குக் கிட்­டி­னால் அப்­போது தமிழ் மக்­க­ளுக்கு அவர் என்ன செய்­வார் என்­ப­தை­யா­வது ரணில் தமிழ் மக்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்த வேண்­டும்.

மகிந்­த­வைத் தோற்­க­டிப்­ப­தன் ஊடா­கத் ரணி­லைத் தலைமை அமைச்­ச­ரா­கத் தொடர்ந்­தும் பத­வி­யில் இருத்தி வைத்­தி­ருப்­ப­தன் மூலம் புதிய அர­ச­மைப்­புப் பணி­யைத் தொடர்­வது முற்­றி­லும் சாத்­தி­ய­மற்­ற­தா­கி­வி­டும். இந்த நிலை­யில் ரணி­லுக்கு ஊடாக எத்­த­கைய தீர்­வைத் தமிழ் மக்­க­ளுக்­குப் பெற்­றுத் தரு­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வந்­தி­ருக்­கி­றது என்­ப­தைப் பகி­ரங்­கப்­ப­டுத்த அந்­தக் கட்சி கட­மைப்­பட்­டுள்­ளது.

இது­வ­ரை­யில் அத்­த­கைய எந்­தச் செயல்­மு­றை­யி­லும் கூட்­ட­மைப்பு ஈடு­ப­ட­வில்­லை­யா­யின் உட­ன­டி­யாக ரணி­லு­டன் பேசி அந்த முடி­வு­களை மக்­க­ளுக்­குப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வது அவ­சி­யம். ரணி­லின் அர­சைத் தொட­ரச் செய்­வ­தன் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு முக்­கிய நன்மை ஏதும் கிட்­டாது என்­றால் பின்­னர் எதற்­கா­கத் தமிழ் மக்­கள் ரணிலை ஆத­ரிக்­க­வேண்­டும் என்­கிற கேள்வி எழு­வ­தும் தவிர்க்க முடி­யா­ததே.

You might also like