வடக்கு அமைச்­ச­ரவை விவ­கா­ரம் இன்­றைய அமர்­வும் குழம்­ப­லாம்!

வடக்கு மாகாண அமைச்­ச­ரவை விவ­கா­ரத்­தால், மாகாண சபை­யின் இன்­றைய அமர்­வி­லும் குழப்­பம் ஏற்­ப­டக்­கூ­டும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

வடக்கு அமைச்­ச­ரவை தொடர்­பில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரி­னால் அவ­சர கோரிக்கை ஒன்று அவைத் தலை­வ­ருக்­குச் சமர்ப்பிக்­கப்­பட்­டுள்­ளது. அவ­சர கோரிக்கை இன்­றைய அமர்­வில் எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்­பான விவா­தத்­தால் மாகாண சபை­யில் குழப்­பம் வரக் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

வடக்கு அமைச்­ச­ரவை தொடர்­பில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் இடைக்­கால கட்­டளை பிறப்­பித்த பின்­னர் நடை­பெற்ற மூன்று மாகாண சபை அமர்­வு­க­ளி­லும் இந்த விட­யம் எதி­ரொ­லித்­தி­ருந்­தது. இன்­றைய அமர்­வி­லும் அது தொட­ரும் என்று கூறப்­ப­டு­கின்­றது.

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் யார் என்று தெரி­யாத நிலை­யில், மாகா­ண­ச­பை­யில் அமைச்­சர்­க­ளுக்­கான ஆச­னம் எப்­படி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மாகா­ண­ச­பைக்கு அமைச்­சர்­கள் பொறுப்­பும், வகை­யும் கூற­வேண்­டிய நிலை­யில் தொடர்ந்­தும் மாகா­ண­ச­பையை அர்த்­த­மற்ற வகை­யில் நடத்­திச் செல்ல முடி­யாது. இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வர் முன்­வைத்­துள்ள அவ­சர கோரிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அமைச்­ச­ரவை தொடர்­பில் எழுந்­துள்ள நெருக்­க­டி­யைத் தணிக்­கும் வகை­யில் வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் யோசனை முன்­வைத்­தி­ருந்­தார். கடந்த அமர்­வில், வடக்கு அமைச்­ச­ர­வைப் பிரச்­சினை தீரும் வரை­யில் மாகா­ண­ச­பையை ஒத்­தி­வைக்­கு­மாறு கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதன்­போது அவைத் தலை­வர், தனது யோசனை தொடர்­பில் முத­ல­மைச்­ச­ரி­ட­மி­ருந்து சாத­க­மான பதில் கிடைக்­கப்­பெற்று பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­லாம் என்று கூறி­யி­ருந்­தார். ஆனால், அவைத் தலை­வ­ரின் யோச­னையை முத­ல­மைச்­சர் நிரா­க­ரித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close