வடக்கு, கிழக்கு இணைப்­புக்­கும் கூட்­டாட்­சிக்­கும் எதிர்ப்­பே­யில்லை

தடா­ல­டி­யாக மைத்­திரி குத்­துக்­க­ர­ணம்

785

கூட்­டாட்சி அர­ச­மைப்பு மற்­றும் வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பன நான் உயி­ரோடு இருக்­கும் வரை­யில் நடக்­காது என்று ஒரு­போ­தும் கூற­வில்லை. நான் அவ்­வாறு தெரி­விக்­க­வில்லை என்­பதைப் பொது மேடை­யில் விரை­வில் அறி­விப்­பேன். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­டம் தெரி­வித்­துள்­ளார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் இடை­யில் நேற்­றுச் சந்­திப்பு இடம்­பெற்­றது. சந்­திப்பு ஆரம்­பித்து 15 நிமி­டங்­க­ளின் பின்­னர் வடக்கு மாகாண ஆளு­நர் குரே­வுக்­கும் இதில் பங்­கேற்­றுள்­ளார்.

கூட்டு அரசு தொட­ர­வேண்­டும் என்­பதே கூட்­ட­மைப்­பின் விருப்­பம் என்று சம்­பந்­தன் கூறி­யுள்­ளார். தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னைக்கு கூட்டு அர­சா­லேயே தீர்வு காண முடி­யும் என்று சம்­பந்­தன் அழுத்­தித் தெரி­வித்­துள்­ளார்.

இதன்­போது கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன், கூட்­டாட்சி அர­ச­மைப்பு மற்­றும் வட­கி­ழக்கு இணைப்பு என்­ப­ன­வற்­றுக்கு நான் உயி­ரோடு இருக்­கும் வரை­யில் இட­ம­ளிக்­கப் போவ­தில்லை என்று நீங்­கள் கூறி­ய­தாக செய்­தி­கள் வெளி­வந்­துள்­ளன என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

அதற்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, நானும் அந்­தச் செய்­தி­க­ளைப் பார்த்­தேன். நான் அப்­படி எது­வும் சொல்­ல­வில்லை. அன்று நடந்­தது எங்­கள் கட்சி அமைப்­பா­ளர்­க­ளு­ட­னான கூட்­டம். அந்­தக் கூட்­டத்­தில் பல விட­யங்­கள் ஆரா­யப்­பட்­டன. பேசப்­பட்­டன. அது கலந்­து­ரை­யா­ட­லா­கவே நடந்­தது. அங்கு நான் இப்­ப­டி­யொன்­றைச் சொல்­ல­வில்லை.

இதனை விரை­வில் பொது­மே­டை­யில் அறி­விப்­பேன் இதே­வேளை, கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வியா­ழேந்­தி­ரனை உருவி எடுத்து அவ­ருக்கு பிரதி அமைச்­சுப் பதவி வழங்­கி­யமை தொடர்­பில் கூட்­ட­மைப்­பி­னர் மைத்­தி­ரி­யி­டம் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

தனக்கு இது தொடர்­பில் எது­வும் தெரி­யாது என்­றும், ஆள் ஒரு­வரை தன் முன்­னால் கொண்டு வந்து நிறுத்­தி­னார்­கள் என்­றும், அவ­ருக்கு தான் பத­விப்­பி­ர­மா­ணம் செய்து வைத்­தேன் என்­றும் குறிப்­பிட்ட மைத்­திரி, இந்த நட­வ­டிக்கை பிழை­யா­னது என்­பதை ஒப்­புக் கொள்­வ­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார். என்­றார்.

You might also like