வடமராட்சி வாள்வெட்டு- வெளியானது கானொளி!!

வட­ம­ராட்சி இமை­யா­ண­னில் வர்த்­தக நிலை­யத்­துக்­குச் சென்ற இனந்­தெ­ரி­யா­தோர் நடத்­திய வாள்­வெட்­டில் இளை­ஞர் காய­ம­டைந்­தார். கடை­யின் கண்­ணா­டி­கள் அடித்து நொருக்­கப்­பட்­டன.

இந்­தச் சம்­ப­வம் இமை­யா­ணன் குஞ்­சர்­க­ டைப் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றது.மூன்று மோட்­டார் சைக்­கிள்­க­ளில் முகங்­களை கறுப்­பு­நி­றத் துணி­யால் மறைத்­துக்­கொண்டு வந்த ஆறு பேர் அடங்­கிய குழு­வி­னரே வர்த்­தக நிலை­யத்­தில் நின்­றி­ருந்­த­வர் மீது வாளால் வெட்­டி­னர் என்­றும் பின்­னர் கண்­ணா­டியை உடைத்து நொருக்கி விட்டு தப்­பிச் சென்­று­விட்­ட­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

பொருள்­க­ளைக் கொள்­வ­னவு செய்­யச் சென்­றி­ருந்த அதே இடத்­தைச் சேர்ந்த த.சைமன் (வயது 33) என்­ப­வரே கையில் காய­ம­டைந்து பருத்­தித்­துறை ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக் காக யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. நெல்­லி­ய­டிப் பொலி­ஸார் விசா­ரணைகளை மேற்­கொண்­டுள்­ள­னர்.

வாள்­க­ளு­டன் வந்­த­வர்­கள் 18வய­துக்­குக் குறைந்­தர்­க­ளா­கக் காணப்­பட்­ட­னர் என்று கடை உரி­மை­யா­ளர் தெரி­வித்­தார்.

இது தொடர்பான கானொளி ஒன்று வெளியாகியுள்ளது.

 

You might also like