வட்டாரத்துக்கு ஒரு வீடு – பிரதேச சபையின் கோரிக்கை நிராகரிப்பு!!

உள்ளுராட்ச்சி சபைகளால் வீட்டுத்திட்ட்ங்கள் வழங்க முடியாது. மாறாக தொடர்மாடி குடியிருப்பை உருவாக்கி அதனை வாடகைக்குக் கொடுக்க முடியும் என்று உள்ளுராட்ச்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் நல்லூர் பிரதேச சபையினருக்கு அறிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் நிதியில் இருந்து சபையின் 12 வட்டாரத்துக்கும் வட்டாரத்துக்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் வீட்டுத்திட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

சபையின் தீர்மானம் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளுராட்ச்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கபட்டது.

அதற்கான பதில் கடிதம் அனுப்பியுள்ள ஆணையாளர், பிரதேச சபைகள் தமக்குச் சொந்தமான காணியில் குடியிருப்புகளை உருவாக்கி, மக்களுக்கு வாடகைக்கு கொடுக்க முடியும். இது தவிர இலவசமாக வழங்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like