வறுமையுடன் போராட்டம்!!

0 28

பகுதி-23

கரு­ணா­நி­தி­த­ன­து­மொ­ழிப்­பற்­றா­லும், மொழி­யாற்­ற­லா­லும் தமிழ்­மொ­ழிக்­கு­அ­ளப்­ப­ரி­ய­பங்­க­ளிப்­பைச் செய்­துள்­ளார் என்­ப­து­வ­ர­லா­றா­கும். பல­ருக்­கு­மொ­ழிப்­பற்­றி­ருந்­தா­லும், மொழிக்­குப்­பங்­க­ளிப்பு செய்­யு­ம­ள­வ।க்கு மொழி­ய­றிவோ ஆற்­றலோ இருப்­ப­தில்லை. இது இரண்­டை­யும் ஒருங்கே பெற்­ற­தால் தான் அர­சி­யல் அரங்­கி­லும் மிளிர்ந்து அதே­வேளை தன்­னைத் தமிழ் தலை­வ­னாக கரு­ணா­நிதி நிலை­நி­றுத்­தி­ யி­ரு­கி­றார்.

தமிழ்­மொ­ழி­யின் சிறப்­புக் குறித்த
கரு­ணா­நி­தி­யின் சிலா­கிப்பு
ஹிந்தி­யெ­திர்ப்­புப் போராட்­டத்­தில் அவர் தமிழ் மொழி­பற்­றிக் குறிப்­பிட்ட கருத்து, இன்­று­நன்­கு­க­வ­னிக்­கத்­தக்­கது.‘‘ஹிந்தி என்­பது உணவு விடு­தி­யி­லி­ருந்து எடுத்­துச் செல்­லும் உணவு, ஆங்­கி­லம் என்­ப­து­ ஒ­ரு­வர் சொல்ல அதன்­படி சமைக்­கப்­பட்ட உணவு, தமிழ் என்­பது குடும்­பத் தேவையறிந்து,விருப்­ப­ம­றிந்து, ஊட்­ட­ம­ளிக்­கும் தாயி­ட­மி­ருந்து பெறப்­பட்ட உணவு’ ’ என்று குறிப்­பி­டு­கி­றார்.

தனது மூளையே தனக்கு ‘‘டைரி’’ என்­பார் கரு­ணா­நிதி. அந்த அள­வுக்கு ஞாப­க­சக்தி கொண்­ட­வர் அவர். சங்க இலக்­கி­யங்­கள், பழந்­த­மிழ் இலக்­கி­யங்­கள் அத்­த­னை­யும் அவ­ருக்கு அத்­துப்­படி. எப்­போ­தும் அவற்­றி­லி­ருந்து மேற்­கோள்­கள்­காட்­டிப் பேசு­வார்; எழு­து­வார். அவ­ரது தனிப்­பட்ட நூல­கத்­தில் பத்­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட நூல்­க­ளைச் சேக­ரித்து வைத்­தி­ருந்­தார்.

சி.என்.அண்­ணாத்­து­ரை­யின் மறை­வின் முத­லா­வது நினைவு நாளை­முன்­னிட்டு இந்­திய மத்­திய அரசு அவ­ரது ஒளிப்ப­டத்­து ­டன் தபால் முத்­திரை வெளி­யிட்­டது. அப்­போது, அண்­ணாத்­து­ரை­யின் கையெ­ழுத்­தை­யும் அந்­த ஒளிப்ப­டத்­தின் மீது இடம்­பெ­றச் செய்­தார் கரு­ணா­நிதி. ‘‘அப்­போ­து­தான் தமிழ் எழுத்­து­கள் அந்த தபால் தலை­யில் இருக்­கும்’’ என்­றார். கரு­ணா­நிதி தனது இள­மைக்­கா­லத்­தில் தேவைக்­குப் பணம் கிடைக்­காது மிக­வும் கஷ்­ரப்­பட்­டார்.

வாழ்க்­கையை ஓட்­டு­வ­தற்­கு­ப­ண­மில்­லா­து­திண்­டா­டி­னார்.பொது­வு­டமை மீது­தீ­ரா­த­பற்­றுக் கொண்­டி­ருந்­தார். ஆத­னால்­தான் தனது மக­னுக்கு ஸ்ரா லின் என்­று­பெ­யர் வைத்­தார். தனது வறு­மை­பற்றி கரு­ணா­நிதி பல இடங்­க­ளில் தனது கருத்­துக்­க­ளைப்­ப­திவு செய்­தி­ருக்­கி­றார்.

வரு­மா­னம் போதா­மை­யால்
வாழ்க்­கை­யில் சிர­மப்­பட்ட கரு­ணா­நிதி
தன­து­தி­ரு­ம­ணச்­செ­ல­வுக்­காக நாட­கம் நடத்தி, அதி­லி­ருந்து கிடைத்­த­ப­ணத்­தில் தான் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார். இதை­அ­வ­ரே­ப­தி­வு­செய்­து­மி­ருக்­கி­றார்.
‘‘எனது திரு­ம­ணச் செல­வுக்­கா­க­நான் எழு­திய தூக்கு மேடை நாட­கத்தை அண்ணா வின் தலை­மை­யில் திருச்­சி­யில் நடத்­தி­னேன். நானே நடத்­தி­னேன்.
எவ­ரி­ட­மும் நாட­கத்­திற்­காக நன்­கொடை வசூ­லிக்­க­வில்லை. நாட­கத்­தில் செல­வு­போக மீதித் தொகை எண்­ணூறு ரூபாய்.’’ எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

கரு­ணா­நிதி தனது திரு­ம­ணத்­தின் பின்­னர் குடும்­பத்தை நடத்­த­மி­க­வும் சிர­மப்­பட்­டி­ ருக்­கி­றார். தனது நாற்­பது ரூபா சம்­ப­ளத்­தில் தனது மனை­விக்கு ஐந்து ரூபா­தான் அவ­ரால் அனுப்ப முடிந்­தி­ருக்­கி­றது. அதை­யும் அவர் பதிவு செய்­தி­ருக்­கி­றார்.
‘‘குடி­ய­ரசு பத்­தி­ரி­கை­யின் துணை ஆசி­ரி­ய­னாக இரு’’ என்று பெரி­யார் பணித்­த­தோடு மட்­டு­மல்­லா­மல்,அந்த இத­ழில் என்­னைக் கட்­டு­ரை­கள் எழுத அனு­ம­தித்து அதைப் படித்து மகிழ்ந்­தார்.

எனக்கு மாதம் நாற்­பது ரூபாய் சம்­ப­ளம். அதில் பிற்­ப­க­லும் இர­வும் பெரி­யார் வீட்­டில் சாப்­பி­டு­வ­தற்­காக இரு­பது ரூபாய் பிடித்­துக் கொள்­வார்­கள். காலைச் சிற்­றுண்டி, மாலைச் சிற்­றுண்­டிக்­கு­ மா­தம் பத்­து­ ரூ­பாய் ஆகி­வி­டும். இதர செல­வு­கள் ஐந்து ரூபாய். மீதம் ஐந்து ரூபாயை என்னை அண்டி வந்­த­ அ­ருமை மனைவி பத்­மா­வுக்கு மாதந்­தோ­றும் திரு­வா­ரூ­ருக்கு காசுக்­கட்­டளை மூலம் அனுப்பி வந்­தேன்.’
கையில் பணம் இல்­லா­த­தால் கவி­ய­ரசு கண்­ண­தா­ச­னும் கரு­ணா­நி­தி­யும் பட்­டினி கிடந்து பய­ணம் செய்­தமை பற்­றிய குறிப்­புக்­க­ளும் உண்டு,

‘என்­னி­ட­மி­ருந்த மணி பர்ஸை (பணப்­பையை) கண்­ண­தா­ச­னி­டம் கொடுத்து சேலத்­திற்கு இரண்­டு­டிக்­கட் வாங்­கக் சொன்­னேன். டிக்­கட் வாங்­கிக் கொண்டு, கண்­ண­தா­சன் மணிப்­பர்சை என்­னி­டம் திருப்­பிக் கொடுத்­தார்.
என்­னய்யா, பர்ஸ் காலி­யாக இருக்­கி­ற­தே­என்­று­கேட்­டேன். இரண்­டாம் வகுப்பு பய­ணச்­சீட்­டுக்கு உமது பணம் சரி­யாக இருந்­தது என்று கூறி­னார். ஐயையோ உம்­மை­யார் இரண்­டாம் வகுப்­பு­டிக்­கட் வாங்­கச் சொன்­னது? மூன்­றாம் வகுப்­புப் பய­ணச்­சீட்டு போதாதா என்று நான் சலித்­துக் கொண்­டேன்.’ என்­று­க­ரு­ணா­நிதி குறிப்­பி­டு­ கி­றார்.

ஏழை­களை ஏமாற்­றிப் பணம்
தேடு­வோரை தமது கவி­தை­கள்
மூலம் சாடிய கலை­ஞர் கரு­ணா­நிதி
இத­னாலோ என்­னவோ ஏழை­கள் வயிற்­றில் அடித்து, பணத்­தைக் கொள்­ளை­ய­டிப்­பது குறித்து கரு­ணா­நிதி ஆவே­ச­மா­கக் கவி­தை­கள் எழு­தி­யுள்­ளார்.அதில் ஒரு கவிதை வரு­மாறு,

மந்­த­மா­ரு­தத் தாலாட்­டில் உறங்­கு­தற்கு
மாட­மா­ளி­கை­கட்­டி­வாழ்­கின்­ற­பெ­ரி­யீர் !

பணம் பணம் பண­மென்­று­பாட்­டா­ளி­யின்
வியர்­வை­யிலே தினம் தினம் குளி­யல்
நடத்­திக் குவிக்­கின்­றீர் செல்­வத்தை !

பிணம் தின்­னும் கழு­கு­போ­ல­நீ­விர்;
பெருக்­க­வைக்­கின்­றீர் உம­து­வ­யிற்றை !

இருள் சூழ்ந்­த­வாழ்க்­கை­யி­லே­
ஏ­ழை­க­ளைத் தள்­ளி­விட்டு பொருள் தேடி­
அ­லை­கின்­றீர்: போது­மென்­ற­ம­ன­தின்றி!

வாழ்­வில் பெருக்­கல் ஒன்­றையே குறிக்­கோ­ளாய்க் கொண்­டோரே ;
வார்த்­தை­யொன்­று­கேட்­கின்­றேன் பதில் சொல்­வீர்!!

மாணிக்­கப் பொரி­ய­லும் மர­க­தக்
கூட்­டுமா இலை­யி­லிட்டு உண்­கின்­றீர்?
வைரத்­தால் வறு­வல் செய்­து­வை­டூர்­ய­
அ­வி­ய­லு­டன் முத்­துப் பவ­ள­மெ­னும்
மணி­க­ளால் செய்­திட்­ட­அ­ரி­சி­யையா
குத்­தி­உ­லை­யி­லிட்­டுக் குடற்­பை­யை­நி­ரப்­பு­கின்­றீர்?

உண்­ப­து­நாழி; உடுப்­பவை இரண்­டே­யெ­னும்
உண்­மை­த­னை­உ­ணர்ந்­த­பின்­னும்,
வறு­மை­யில் பலர் வாட வள­மி­கு­செல்­வப்
பெரு­மை­யில் சிலர் ஆடல் நீதி­தானோ?

தனக்­கே­எ­லாம் எனும் தனி­யு­ட­மை­த­கர்த்­துத்
தரித்­தி­ரத்­தை­வி­ரட்­டு­வ­தற்­குத் தக்க வழி காண
பகுத்­துண்­டு­பல்­லு­யிர் ஓம்­பும்
பொது­மைக் கொள்­கையை
வகுத்­த­ளித்­து­வை­யத்­தில் இன்­பம் காண்­ப­து­தான் வாழ்­வெ­டுத்­த­ப­ய­னா­கும்…!
என்று கவி பாடி­ய­க­ரு­ணா­நி­தி­பின்­னா­ளில், பல­ஆ­யி­ரம் கோடிக்­கு­ச் சொந்­தக்­கா­ர­ரா­னார். அவ­ர­து­சொத்­து­வி­ப­ரங்­க­ளை­ பி­ற­ தொ­ரு­ப­கு­தி­யில் பார்ப்­போம்.

 

(தொட­ரும்)

You might also like