வவுணதீவு சம்பவம்- முழுமையான விவரம்!!

மட்­டக்­க­ளப்பு, வவு­ண­தீ­வில் கடமை யில் இருந்த பொலிஸ் உத்­தி­ யோ­கத்தர்­கள் இரு­வர் நேற்று அதி­காலை இனந்­தெ­ரி­யா­தோ­ரால் சுட்­டுக் கொல்­லப்­பட்­டுள்­ள­னர்.

வலை­யி­ற­வுப் பாலத்­துக்கு அருகே உள்ள சோத­னைச் சாவ­டி­யில் கட­மை­யில் இருந்­த­போதே அவர்­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளின் கைத்­துப்­பாக்­கி­கள் காணா­மல் போயுள்­ளன.

வவு­ண­தீவு, பொலிஸ் நிலை­யத்­தில் கட­மை­யாற்­றும் அம்­பாறை, பெரி­ய­நீ­லா­வ­ணை­யைச் சேர்ந்த கணேஸ் டினேஸ் (வயது-28), காலி, உடு­க­ம­வைச் சேர்ந்த நிரோ­சன் இந்­திக பிர­சன்ன (வயது-35) ஆகி­யோரே உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இந்த சோத­னைச் சாவடி வவு­ண­தீவு பொலிஸ் நிலை­யத்­தில் இருந்து சுமார் 500 மீற்­றர் தூரத்­தில் அமைந்­துள்­ளது. உயி­ரி­ழந்த இரு­வ­ரும் புதி­தா­கப் பொலிஸ் சேவை­யில் இணைந்­த­வர்­கள் என்று கூறப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளது கைகள் இரண்­டும் கட்­டப்­பட்ட நிலை­யில் உள்­ளது.

மட்­டக்­க­ளப்பு நீதி­வான் நீதி­மன்ற நீதி­பதி றிஸ்வி சம்­பவ இடத்­துக்­குச் சென்று விசா­ர­ணை­களை மேற்­கொண்­டார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பா­கக் கிழக்­குப் பிராந்­தி­யப் பொலிஸ் மா அதி­பர் கபில ஜய­சே­கர தலை­மை­யி­லான விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. மட்­டக்­க­ளப்பு மாவட்ட குற்­றத் தட­ய­வி­யல் பிரிவு மற்­றும் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர், புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரும் விசா­ர­ணை­க­ளை­யும் மேற்­கொண்­டுள்­ள­னர்.

உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் உடல்­கள் உடற்­கூற்­றுச் சோத­னைக்­காக மட்­டக்­க­ளப்­புப் போதனா மருத்­து­வ­ம­னை­யில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சிறப்­புக் குழு
இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக விசா­ர­ணை­கள் மேற்­கொள்­வ­தற்கு குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் சிறப்­புக் குழு ஒன்று மட்­டக்­க­ளப்­புக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

பொலிஸ் மா அதி­ப­ரின் பணிப்­பு­ரை­யின் கீழ் குற்­றப் புல­னாய்­வுத் திணைக்­க­ளத்­தின் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ஒரு­வ­ரின் தலை­மை­யி­லான குழு ஒன்றே மட்­டக்­க­ளப்­புக்கு அனுப்­பட்­டுள்­ளது என்று பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் ருவான் குண­சே­கர தெரி­வித்­துள்­ளார்.

இதே­வேளை பொலிஸ்மா அதி­பர் சம்­பவ இடத்­துக்கு நேற்று மாலை நேரில் சென்று ஆராய்ந்­துள்­ளார்.

You might also like