வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம்- வாகனங்கள் உட்செல்லத் தடை!!

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இன்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாகனங்கள் உட் செல்ல படையினர் தடைவித்தித்துள்ளனர்.

இன்று நாட்டில் பல பாகங்களில் குண்டுகள் வெடிக்கலாம் என்று சமூக ஊடகங்களில் வெளியான தகவலையடுத்து நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வவுனியா நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பழைய பேருந்து நிலையப்பகுதி மக்களின் நடமாட்டமின்றி வெறிச் சோடிக்காணப்படுகின்றது.

You might also like