வவுனியாவில் புதிய கட்சி உதயம்!!

கடந்த 3 ஆண்­டு­க­ளாக வவு­னி­யா­வில் இயங்­கிய வடக்கு – கிழக்­கு­ வாழ் தமிழ்­மக்­கள் ஒன்­றி­ய­மா­னது நேற்­றி­லி­ருந்து அக­தே­சிய முற்­போக்குக் கழ­கம் எனும் பெய­ரில் அர­சி­யல்­கட்­சி­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு பண்­டா­ரிக்­கு­ளம் பகு­தி­யில் அமைந்­துள்ள முன்­னாள் மாகாண சபை உறுப்­பி­னர் எம்.பி.நட­ராஜின் இல்­லத்­தில் நடை­பெற்­றது.

இதன்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்­துத் தெரி­வித்தகட்­சி­யின் தலை­வர் எம்.பி.நட­ராஜா,

வட­கி­ழக்­கில் வாழ்­கின்ற இந்­தி­ய­வம்­சா­வளி மக்­களை ஒன்­றி­னைத்து அந்த மக்­க­ளின் சமூ­கப் பொரு­ளா­தார, அர­சி­யல், கலா­சார விட­யங்­களை மேம்­ப­டுத்­து­வதே கட்­சி­யின்­மு­தன்மை நோக்­கம்.

தமி­ழி­னம் சார்ந்த பொரு­ளா­தார, கலா­சார விழு­மி­யங்­களை கட்­டி­எ­ழுப்­பு­வ­து­டன் கல்வி, விளை­யாட்டு, வேலை­வாய்பு போன்ற விட­யங்­க­ளில் மேம்­பாட்டை ஏற்­ப­டுத்தி தமிழ் இனத்­தின் தேசிய எழு­சிக்கு வலுச் சேர்­கும் வகை­யில் எமது செயற்­பா­டு­கள் அமை­ய­வுள்­ளன.

நாம் பிரி­வி­னையை விரும்­ப­வில்லை. ஏற்­க­னவே பிரிந்­தி­ருக்­கின்ற எமது இனத்தை ஒன்­றி­னைப்­பதே எமது நோக்­கம். இந்த மக்­கள் வடக்­கு­கி­ழக்கு மக்­க­ளு­டன் முழு­மை­யாக ஒன்­றி­ணை­ய­வில்லை. அல்­லது இங்கு இருக்­கின்­ற­வர்­கள் அவர்­களை உள்­ளீர்த்­துக் கொள்­ள­வில்லை என்ற நிலைப்­பாடு இருக்­கி­றது.

இந்­திய வம்­சா­வளி மக்­களை ஒன்­றி­னைத்து இங்­கு­வாழ்­கின்ற மக்­க­ளு­டன் இணைத்து தமிழ் இனத்­தின் தேசிய எழுச்­சிக்கு வலுச்­சேர்­பதே எமது கொள்­கை­யாக இருக்­கி­றதே தவிர பிரி­வி­னை­யல்ல – என்­றார்.

வடக்கு மாகா­ண­ச­பைத் தேர்­தல் 2013ஆம் ஆண்டு நடத்­தப்­பட்­ட­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுள் ஒன்­றாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்­பில் நட­ராயா போட்­டி­யிட்­டி­ருந்­தார். கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் மீன் சின்­னத்­தில் சுயேச்­சை­யாக போட்­டி­யிட்டு வவு­னியா தெற்கு தமிழ் பிர­தேச சபை­யில் இரண்டு ஆச­னங்­க­ளை­யும் கைப்­பற்­றி­யி­ருந்­த­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பிர­தேச சபை­யில் ஆட்சி அமைப்­ப­தற்கு ஆத­ர­வாக செயற்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like