வாக்குப் பதிவும் மக்களின் மனப்பதிவும்!!

0 99

கடந்த 10.02.2018 அன்று நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் முடி­வு­கள் வெளி­வந்­துள்ள நிலை­யில் எமது தமி­ழர்­க­ளின் சார்­பா­கப் போட்­டி­யிட்ட கட்­சி­கள் இனி­வ­ரும் காலங்­க­ளில் என்ன செய்­யப் போகின்­றன? ஒவ்­வொரு தமி­ழ­ரும் தமது வாக்­க­ளிப்­பின் மூலம் முடிவை வழங்­கி­விட்­டுள்­ள­னர்.

வழ­மை­போல் பல­வித வாக்­கு­று­தி­களை மேடை­க­ளில் முழங்­கிய கட்­சிக்­கா­ரர்­கள் தமது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றியே தீர வேண்­டும். பல இழப்­புக்­க­ளைச் சந்­தித்த இனம், அந்த இனத்­துக்கு நன்மை செய்ய என மக்­க­ளால் நிய­மிக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­கள் சுய­லா­பம் கருதி, சுய­லா­பத்­துக்கு எனத் தமது பத­வி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வார்­க­ளா­யின், மக்­கள் தீர்ப்பு எழு­து­வார்­கள்.

எல்லா நாடு­க­ளி­லும் மக்­க­ளின் தீர்ப்­புத்­தான் அதிக வலி­மை­ மிக்­க­தொரு ஆயு­த­மா­கத் திகழ்­கின்­றது. நடை­பெற்று முடிந்த தேர்­தல் முடி­வு­கள் யாவும் இன்­றுள்ள ஒவ்­வொரு தமி­ழ­ரின் மன­நி­லையை படம்­பி­டித்­துக்­காட்­டு­வ­தா­கவே உள்­ளன. சில அர­சி­யல் தலை­வர்­கள் தமது சுயத்­தைக் கரு­தாது, நேர­கா­லம் பாராது மக்­க­ளுக்­காக எனக் கட­மை­யாற்­றிய உண்மை நிலை­யை­யும் இந்­தத் தேர்­தல் முடி­வு­கள் பறை­சாற்­றி­யுள்­ளன.

தனித்து எந்­த­வொரு கட்­சி­யும்
ஆட்சி அமைக்க இய­லாத நிலை

ஒரு கட்­சி­தான் எல்­லாத் தொகு­தி­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ளது என்று சொல்ல முடி­யாத அள­வுக்­குப் பல கட்­சி­க­ளும் இணைந்தே வெற்றி பெற்­றுள்­ளன. தொகு­தி­வா­ரி­யா­கப் பார்க்­கும்­போது எதிர் எதி­ரா­ன­வர்­கள் கூட்­டுச் சேர்ந்தே ஆட்சி அமைக்க வேண்­டிய கட்­டா­ய­நிலை ஏற்­பட்­டு்ள்­ளது.

உண்­மை­யாகத் தமிழ் மக்­களை நேசிக்­கும் ஒவ்­வொரு தமி­ழ­ரை­யும் நேசிக்­கும் மக்­க­ளுக்­காக மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளா­கச் செயற்­ப­டும் கட்­சித் தலை­மை­கள், தலை­வர்­கள் நிச்­ச­ய­மா­கத் தமது சுய­ந­லத்தை வெறுத்து ஒன்­றாக இணைந்தே ஆட்சி அமைப்­பார்­கள். மாறாகத் தமது சுய­ந­ல­மான செயற்­பா­டு­கள் தொட­ரு­மா­யின் தமது அர­சி­யல் வாழ்­வில் இருந்து, அர­சி­யல் தலை­மைத்­து­வத்­தி­லி­ருந்து ஓரங்­கட்­டப்­ப­டு­வார்­கள்; தூக்­கி­யெ­றி­ய­வும் ப­டு­வார்­கள்.

மக்­கள் விழிப்­ப­டைந்­து­விட்­ட­னர். இனி எவ­ரா­லும் ஏமாற்­று­வித்­தை­கள்– பசப்பு வார்த்­தை­கள் பேசிக் காலங்­க­டத்த முடி­யாது. தேர்­தல் நடை­பெ­றும் நாளுக்கு முன்­ப­தாக எத்­த­னையோ விளம்­ப­ரங்­கள், எத்­த­னையோ துண்­டுப்­பி­ர­சு­ரங்­கள், பல இடங்­க­ளில் மேடை போட்டு வீரா­வே­சப் பேச்­சுக்­கள், இன்­னிசை நிகழ்­வு­கள், வீதி­கள் தோறும் வீட்டு மதில்­கள் தோறும் துண்­டுப்­பி­ர­சு­ரங்­கள் ஒட்­டப்­ப­டு­தல், வீடு­கள் தோறும் சென்று வாக்­குப் போடும்­படி வற்­பு­றுத்­தல்­கள் எல்­லா­வற்­றுக்­கு­மான முடி­வு­களை மக்­கள் வழங்­கி­யுள்­ள­னர்.

வடக்கு, கிழக்­கில் அர­சி­யல்
சுய­லாப நோக்­கு­டன் செயற்­பட்ட வேட்­பா­ளர்­கள்

ஒவ்­வொரு கட்­சிக்­கா­ர­ரும் ஒரு­வரை ஒரு­வர் குறை­கூ­று­தல், குற்­றப்­ப­டுத் து­த­லும்­தான் தத்­த­மது திறமை எனக் கோடிட்­டுக் காட்­டி­னர். அதற்­குப் பதி­லாக மக்­க­ளும் வாக்­குச்­சீட்­டில் வாக்­க­ளிப்பு நேரத்­தில் புள்­ளடி போட்­டுக் காட்­டி­னர். தமது அர­சி­யல் சுய­லா­பத்­துக்­கெனப் பல தத்­து­வப் பாடல்­க­ளை­யும் தம­து­ரி­மை­யாக்­கிக் கொண்­ட­னர்.

அந்­தப் பாடல்­க­ளில் சொல்­லப்­பட்ட நற்­க­ருத்­துக்­களை அப்­ப­டியே மக்­க­ளுக்­குச் செய்­யும் கட்­சி­தான் எதுவோ? இல்லை கட்­சித் தலை­வர்­தான் எவரோ? பத்­தி­ரி­கைள் தோறும் தத்­த­மது வாய்­ஜா­லம்– வாய்­வீ­ரம் காட்டி தமது தேர்­தல் முடி­வு­க­ளைத் தாமே தேடிப் பெற்­றுக் கொண்ட கட்­சி­க­ளுக்கு நன்றி.மக்­க­ளால் மக்­க­ளுக்­கென, மக்­க­ளின் நல­னுக்­கென நன்­ன­டத்­தை­யு­டன் பொது­நல உள்­ளம் கொண்ட பிர­தி­நி­தியே தெரிவு செய்­யப்­ப­டு­வர். இதுவே தேர்­த­லின் முடி­வு­க­ளின் தீர்­மா­னம் விஞ்­ஞா­ப­னம்.

தமிழ் மக்­க­ளது துய­ரங்­கள் குறித்து
எவ­ருமே அக்­கறை காட்­ட­வில்லை

மக்­க­ளுக்­கென என்­னால் செய்ய முடிந்­த­தைச் செய்­வேன் எனும் தனது திறமை– மக்­கள் படும் துயர், அவற்­றுக்­கான சரி­யான, பொருத்­த­மான முடி­வு­கள் எடுக்­கும் திறன் இவற்­றையே பரப்­புப்­ப­டுத்­தல் வேண்­டும். மாறாக ஒவ்­வொ­ரு­வ­ரும் தத்­த­மது குறை­களை எடுத்­துக் கூறி மக்­கள் மன­தில் வேத­னை­க­ளை­யும் உங்­க­ளைப் பற்­றிய தப்­ப­பிப்­பி­ரா­யத்­தை­யும் வளர்த்­து­விட்­டீர்­கள். ஒரு­வர் மீது உள்ள மனக்­க­சப்பு, ஒரு கட்­சிக்­கா­ரர் மீது உள்ள மனக்­க­சப்பு முழுத் தமி­ழி­னத்­தை­யுமே அழி­வுக்கு உள்­ளாக்­கி­வி­டும். எதிர்­கா­லச் சந்­ததி சீர­ழி­கின்­றது. படித்த இளை­ஞர், யுவ­தி­கள் வேலை­யின்றித் தத்­த­ளிக்­கின்­ற­னர்.

வாழ்க்­கைச் செலவு உயர்ந்து, வரு­மான வீதம் குறைந்து, கடன் தொல்­லை­யில் திண்­டா­டும் குடும்­பங்­கள் குடும்­பச் சுமையைச் சுமக்க முடி­யாது தற்­கொ­லைக்­குச் செல்­லும் குடும்­பத் தலை­மை­கள் இப்­படி இன்­னும் பல நிகழ்­வு­கள் அன்­றா­டம் எமது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் நடை­பெற்று வரும் நிலை­யில் தான் நடை­பெற்ற தேர்­த­லுக்கு மக்­கள் தமது தீர்ப்பை வழங்­கி­விட்­டுள்­ள­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி இணைந்தே ஆட்சி அமைக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலைக்கு இசை­வாக இரு கட்­சி­க­ளும் ஒன்­றி­ணை­யுமா? என்­ப­தற்கு இரு கட்­சி­க­ளும் முடிவு எடுத்­தாக வேண்­டும்.

மக்­கள் வழங்­கிய தீர்ப்பை ஏற்று மக்­க­ளின் மனங்­களை வெல்­லத்­தக்­க­தொரு ஆட்­சித் தலை­மையே இன்று தமிழ் மக்­க­ளுக்­குத் தேவை. காலத்­தின் கட்­டா­ய­மும் அதுவே. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் முடி­வு­களே இத்­த­கைய சிக்­கல் மிக்­க­தாக அமைந்­து­விட்ட நிலை­யில் மாகாண சபைத் தேர்­தல் முடி­வு­கள் எப்­படி அமை­யும் எனச் சொல்­லா­மலே விளங்­கும் அல்­லவா? இனி­வ­ரும் தேர்­த­லுக்­கும் தீர்ப்பு எழுத மக்­கள் தயா­ரா­கவே உள்­ள­னர்.

ஏனெ­னில் மக்­கள் மனங்­களை வெல்­லத்­தக்க கதா­நா­ய­கன் வரும் வரை­யில் தீர்ப்­பு­க­ளும் தொட­ரும். வாக்­குப் பதி­வின் போதான மக்­க­ளின் மனப்­ப­திவு தான் மக்­கள் தீர்ப்பு என­லாம்.

You might also like