வாள்களுடன் புகுந்த குழு -வீடுகள் மீது தாக்குதல்!!

நள்ளிரவில் வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர், வீடுகள் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்தவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது.

குழுவினர் வீட்டில் இருந்தவர்களையும் வாள்களைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like