விஜய்யின் பிறந்த நாளில் -ரசிகர்கள் கொண்டாட்டம்!!

நடிகர் விஜய்யின் 45 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #HBDEminentVijay என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இது மிக வைரலாகியுள்ளது.

 

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ‘பிகில்’ என்று பெயரிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அத்துடன் அவருடைய ரசிகர்களும் பல நலத்திட்ட உதவிகளை செய்து விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

புதுச்சேரியில் விஜய் ரசிகர்கள் சேர்ந்து தனியார் பேருந்தில் பயணிகள் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அந்த பேருந்தில் விஜய் ஸ்டிக்கர்கள் முழுவதுமாக ஒட்டப்பட்டுள்ளது.

You might also like