விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற வாகனத்தை துரத்திப் பிடித்த இளைஞர்கள்!!

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற வாகனத்தை பிரதேச இளைஞர்கள் துரத்திப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

வவுனியா- மன்னார் பிரதான வீதியில் இன்று காலை விபத்து நடந்துள்ளது.

வவுனியா நகரிலிருந்து இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற வான், வேப்பங்குளம் பகுதியில் பின்புறமாகப் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

எனினும் வானின் சாரதி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். இதனை அவதானித்த மக்கள், வானைப் பின் தொடர்ந்து சென்று மடக்கிக் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

வான் மற்றும் மோட்டார் சைக்கிளை வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் எடுத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like