side Add

வீட்டுக் காணிக்குள் புகுந்த 7 அடி நீளமான முதலை!!

வீட்டுக் காணிக்குள் இன்று அதிகாலை புகுந்த முதலையை, வீட்டின் உரிமையாளர் கிராம மக்களின் உதவியுடன் பிடித்துக் கட்டி வைத்துள்ளார்.

மன்னார் தரவன் கோட்டை கிராமத்தில் உள்ள வீட்டுக் காணிக்குள் முதலை புகுந்துள்ளது.

முதலை சுமார் 7 அடி நீளம் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டைச் சுற்றி குளம் மற்றும் நீர்த்தேக்கம் எவையும் இல்லதா நிலையில்,குறித்த முதலை காட்டில் இருந்து நீரையும், ஆடு,நாய்,கோழி போன்றவற்றை வேட்டையாடும் நோக்கில் காட்டில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதலை தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

You might also like