வீழ்கிறதா வெனிசுலா?

தென்­ன­மெ­ரிக்க நாடான வெனி­சுலா கடு­மை­யான அர­சி­யல், பொரு­ளா­தார நெருக்­க­டி­யில் சிக்­கி­யி­ருக்­கி­றது. அர­சுக்கு எதி­ரான போராட்­டங்­கள் உச்­ச­ம­டைந்­தி­ருக்­கின்­றன. இரா­ணு­வப் புரட்சி மூலம் ஆட்சி மாற்­றம் ஏற்­ப­டுமா? நாட்டு மக்­கள் அர­சுக்கு எதி­ரா­கக் கல­கத்­தைத் தொட­ரு­வார்­களா? அமெ­ரிக்கா இதில் தலை­யி­டுமா? என்­றெல்­லாம் ஆயி­ரம் கேள்­வி­கள் எழுந்­தி­ருக்­கின்­றன. இட­து­சா­ரி­க­ளால் ஆதர்­ச­மா­கப் பார்க்­கப்­பட்ட நாடு இன்று ஆதங்­க­மா­கப் பார்க்­கப்­ப­டும் நிலைக்கு வந்­தது ஏன்? இந்­தக் கேள்­விக்­கான பதி­லில் பிற நாடு­க­ளுக்­கு­மான பாட­மும் இருக்­கி­றது.

வெனி­சு­லா­வுக்­குப் பிரச்­சி­னை­கள் தொடங்­கி­யது 2010ஆம் ஆண்­டில். ஹியுகோ சாவேஸ் அப்­போது வெனி­சு­லா­வின் அதி­ப­ராக இருந்­தார். இட­து­சா­ரி­யான அவர் நாட்­டின் மிகப் பெரிய இயற்­கைச் செல்­வ­மான பெட்­றோ­லிய எண்­ணெய் வளத்தை நாட்­டு­ட­மை­யாக்­கி­னார். எண்­ணெய் ஏற்­று­மதி மூலம் கிடைத்த தொகை­யில் நாட்டு மக்­க­ளுக்­குத் தேவை­யான அடிப்­ப­டைக் கட்­ட­மைப்பு வச­தி­க­ளை­யும் கல்வி, சுகா­தா­ரம் ஆகி­ய­வற்­றை­யும் செய்ய முற்­பட்­டார். இதில் அவ­ருக்­குக் கியூபா உள்­ளிட்ட நாடு­கள் முன்­மா­தி­ரி­யா­கத் திகழ்ந்­தன.

நல்ல நோக்­கம் – மோச­மான விளைவு
நாட்­டு­ட­மை­யாக்­கும் இந்­தக் கொள்­கையை விவ­சா­யத்­தின் ஒரு பகுதி உட்­ப­டப் பல துறை­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளில் சாவேஸ் இறங்­கி­னார். பொருள்­க­ளுக்கு விலைக் கட்­டுப்­பாட்­டைக் கொண்­டு­வந்­தார். நல்ல நோக்­கத்­து­டன் அவர் கொண்­டு­வந்த இந்த நட­வ­டிக்­கை­கள் பல சிக்­கல்­க­ளை­யும் உரு­வாக்­கின. இலா­பம் குறை­வது மட்­டு­மல்ல, உற்­பத்­திச் செல­வுக்­குக்­கூ­டக் கட்­டுப்­ப­டி­யா­காது என்ற நிலை­யில் பல தனி­யார் உற்­பத்­தி­யா­ளர்­கள் தொழி­லை­விட்டு வெளி­யே­றி­னர். இத­னால் உற்­பத்தி இழப்பு, வேலை­யி­ழப்பு ஏற்­பட்­டது. உள்­நாட்­டில் தயா­ரான பொருள்­களை அதிக விலைக்கு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்ய நேரிட்­டது. அர­சால் எல்­லாத் துறை­க­ளி­லும் தலை­யிட்­டுக் கட்­ட­ளை­யிட முடிந்­ததே தவிர உற்­பத்­தி­யைப் பெருக்க முடி­ய­வில்லை. அர­சின் கொள்­கை­க­ளால் அஞ்­சிய வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் நாட்­டை­விட்டு வெளி­யே­றத் தொடங்­கி­னர். அவர்­க­ளு­டன் உள்­நாட்­டுப் பணக்­கா­ரர்­க­ளும் முத­லு­டன் வெளி­யே­றி­னர்.

தனி­யா­ரி­ட­மி­ருந்து அரச துறைக்­குப் பல நிறு­வ­னங்­கள் வந்­தன. எனி­னும், இலஞ்­ச­மும் ஊழ­லும், வேண்­டி­ய­வர்­க­ளுக்­குச் சலுகை அளிக்­கும் போக்­கும் தலை­தூக்­கின. உற்­பத்தி குறைந்­தது. பொருள்­கள் கள்­ளச்­சந்­தை­யில் அதிக விலைக்­குக் கிடைத்­தன. மக்­க­ளுக்கு அர­சின் மீது நம்­பிக்கை குறை­யத் தொடங்­கி­யது. விவ­சா­யம் உட்­பட எல்­லாத் துறை­க­ளி­லும் உற்­பத்­திக் குறைவு ஏற்­பட்­டது. மருந்து மாத்­திரை உள்­ளிட்­ட­வற்­றுக்­குக்­கூ­டத் தட்­டுப்­பா­டு­கள் வர­லா­யின.

திண்­டா­டும் மக்­கள்
2011ஆம் ஆண்­டில் வெனி­சு­லா­வின் அரச எண்­ணெய் நிறு­வ­னத்­தின் மீது அமெ­ரிக்க அரசு தடை விதித்­தது. 2015ஆம் ஆண்டு முதல் பன்­னாட்­டுச் சந்­தை­யில் கச்சா பெட்­றோ­லிய எண்­ணெய் விலை சரி­யத் தொடங்­கி­யது. ஏற்­று­மதி வரு­மா­னத்­தில் 96சத­வீ­தம் வெனி­சு­லா­வுக்கு எண்­ணெய் மூலமே கிடைத்து வந்­தது. அது கணி­ச­மா­கக் குறைந்­தது. வரு­மா­ன­மும் இலா­ப­மும் குறைந்­தா­லும் அரசு தன்­னு­டைய செல­வைக் குறைத்­துக் கொள்­ள­வில்லை. ஊதி­யம், படி­க­ளும் அப்­ப­டியே தொடர்ந்­தன. நாட்­டின் நிர்­வா­கத்­தில் ஜன­நா­ய­கத் தன்­மை­யும் படிப்­ப­டி­யா­கக் குறைந்­தது. அதி­ப­ரைக் கேள்வி கேட்­ப­வர்­கள் ஒடுக்­கப்­பட்­ட­னர். தேசத்­து­ரோ­கி­கள், அமெ­ரிக்க முக­வர்­கள்; என்று முத்­திரை குத்­தப்­பட்­ட­னர். ஊடு­ரு­வல் வியா­பா­ரி­க­ளால்­தான் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­துக்­குப் பின்­ன­டைவே தவிர வேறு ஒன்­று­மில்லை என்று ஆட்­சி­யா­ளர்­கள் வாதிட்­ட­னர். இன்­றைக்கு வெனி­சு­லா­வில் விலை­வாசி உயர்வு அச்­சப்­ப­டத்­தக்க வகை­யில் உயர்ந்­துள்­ளது. பால், இறைச்சி, கோழி, கோப்பி, அரிசி, எண்­ணெய், வெண்­ணெய், றொட்டி தயா­ரிப்­ப­தற்­கான மாவு, மருந்­து­கள், சுகா­தா­ரத்­துக்கு அவ­சி­ய­மான கிரு­மி­நா­சி­னி ­கள் போன்­ற­வற்­றுக்­குக்­கூ­டக் கடும் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. அர­சின் நஜ­வா­ர­ணக் கடை­கள் மட்­டு­மல்ல, பொதுச் சந்தை வாசல்­க­ளி­லும்­கூட மக்­கள் மிக நீண்ட வரி­சை­க­ளில் நிற்­கின்­ற­னர்.

வறுமை வாட்­டு­கி­றது
வெனி­சு­லா­வில் 90சத­வி­கி­தம் பேர் வறு­மை­யில் ஆழ்ந்­து­விட்­ட­னர். நாட்­டின் நிலைமை சரி­யில்­லா­த­தால் இது­வரை 23 இலட்­சம் பேர் வெளி­நா­டு­க­ளுக்கு அக­தி­க­ளா­கச் சென்­று­விட்­ட­னர். 50சத­வி­கி­தம் மக்­க­ளுக்கு அடிப்­படை உண­வு­கூ­டக் கிடைக்­க­வில்லை. 2017ஆம் ஆண்­டில் சுகா­தா­ரத் துறை வெளி­யிட்ட அறிக்­கை­யின்­படி 75சத­வீத மக்­கள் சரி­யான உண­வின்­றித் தங்­க­ளு­டைய எடை­யில் சரா­ச­ரி­யாக 8 கிலோ இழந்­துள்­ள­னர். குரு­திச் சோகை உள்­ளிட்ட நோய்­கள் பெண்­கள், குழந்­தை­க­ளைப் பீடித்­துள்­ளன. நடுத்­தர வர்க்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் தினந்­தோ­றும் குப்­பைக் கூடை­க­ளைக்­கூ­டக் கிள­றித் தின்­ப­ தற்கோ, விற்­ப­தற்கோ ஏதா­வது தேறு­கி­றதா என்று பார்க்­கி­றார்­கள். குழந்­தை­க­ளின் நிலைமை இன்­னும் மோசம். நாட்­டில் உள்ள 21 பெரிய அரச மருத்­து­வ­ம­னை­க­ளில் அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­க­ளில் சேர்க்­கப்­ப­டு­வோ­ரில் சரி­பாதி, சிறு குழந்­தை­கள்­தான். மருத்­து­வ­ம­னை­க­ளின் நிலை­மை­யும் பரி­தா­பம்­தான். குற்­றச் செயல்­க­ளி­லும் வெனி­சுலா இப்­போது முத­லி­டத்­தில் இருக்­கி­றது. இலட்­சம் பேருக்கு 56.3 பேர் கொலை செய்­யப்­ப­டு­கின்­ற­னர். உள்­ளூ­ரில் இப்­போது நாய், பூனை, கழுதை, குதிரை ஆகி­ய­வற்­றைப் பார்க்க முடி­வ­தில்லை.

இரவு நேரங்­க­ளில் இவற்­றைக் கொன்று தின்­கி­றார்­கள். பக­லில் குப்­பைக் கூளங்­க­ளுக்கு நடுவே துர்­நாற்­ற­ம­டிக்­கும் இவற்­றின் உட­லு­றுப்­பு­கள் அழு­கிக்­கி­டக்­கின்­றன. நாட்­டின் நிலை­மை­யால் 19 வானூர்தி நிறு­வ­னங்­கள் வெனி­சு­லா­வுக்­கான சேவையை நிறுத்­தி­விட்­டன.

அதி­க­ரித்­தி­ருக்­கும் ஊழல்
2015ஆம் ஆண்­டில் வெனி­சு­லா­வின் மொத்த உற்­பத்தி மதிப்பு 5.7சத­வீ­தத்­தால் குறைந்­தது. 2016ஆம் ஆண்­டில் அது மேலும் 18.6சத­வீ­தத்­தால் குறைந்­தது. பண­வீக்க விகி­தம் பின்­வ­ரு­மாறு உயர்ந்­தது. 2014ஆம் ஆண்­டில் – 69சத­வீ­தம், 2015ஆம் ஆண்­டில் – 181சத­வீ­தம், 2016ஆம் ஆண்­டில்- 800சத­வீ­தம், 2017ஆம் ஆண்­டில் – 4ஆயி­ரம் சத­வீ­தம், 2019ஆம் ஆண்­டில் – 26இலட்­சத்து 88ஆயி­ரம் சத­வீ­தம். இடி அமீன் ஆட்­சி­யில் உகாண்­டா­வில்­கூட இப்­படி இருந்­த­தில்லை. இந்­தப் பண­வீக்க விகி­தத்­தைப் படிப்­ப­வர்­கள் அச்­சுப் பிழையா அல்­லது கற்­ப­னையா என்று வியக்­கும் அள­வுக்­குப் பண­வீக்க விகி­தம் வெனி­சு­லா­வில் அதி­க­ரித்­து­வ­ரு­கி­றது. இப்­ப­டி­யொரு நாட்­டில் நிலைமை முற்­றி­னால் அங்கே மக்­கள் புரட்சி செய்­வது இயல்­பு­தானே.

இட­து­சா­ரி­கள் செல்­வாக்­குள்ள நாடாக இருந்­தா­லும் இரா­ணு­வம் தலை­யிட்­டி­ருக்­குமே என்று கேட்­க­லாம். இங்­கு­தான் இன்­னொரு அவ­ல­மும் நிகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றது. அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை விநி­யோ­கிக்­கும் பொறுப்பு அங்கு இரா­ணு­வம் மூலம்­தான் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இரா­ணுவ அதி­கா­ரி­களே இலஞ்­சம் வாங்­கிக்­கொண்­டு­தான் பொருள்­க­ளைக் கொடுப்­ப­தாக முறைப்­பா­டு­கள் எழுந்­தி­ருக்­கின்­றன. எனவே, கூட்­டத்­தில் கல­வ­ரம் வரா­மல் பார்த்­துக்­கொள்­கி­றார்­கள். அந்த நாட்­டின் செலா­வ­ணி­யான பொலி­வ­ருக்கு அறவே மதிப்­பில்லை என்­ப­தால் பொருள்­க­ளா­கத்­தான் இலஞ்­சம் கொடுக்­கப்­ப­டு­கி­றது. இன்­றைக்கு ஊழ­லில் ஊறித்­தி­ளைக்­கும் முதல் 20 நாடு­க­ளில் ஒன்­றாக வெனி­சுலா இருப்­பது வேதனை!

சோவி­யத் ஒன்­றி­யம் சித­றுண்ட பிறகு அதைச் சார்ந்­தி­ருந்த கியூபா, அல்­பே­னியா ஆகிய நாடு­க­ளில்­கூட நிலைமை இத்­தனை மோச­ம­டை­ய­வில்லை என்­கி­றார்­கள். கச்சா பெட்­றோ­லி­யத்­தின் விலைச் சரி­வால் வெனி­சுலா மட்­டு­மில்லை, ரஷ்­யா­வின் பொரு­ளா­தா­ர­மும் பாதிப்­ப­டைந்­தது. ஆனால், அந்த நாடு பிற துறை­க­ளி­லும் உற்­பத்தி, விற்­பனை ஆகி­ய­வற்­றின் மூலம் வரு­மா­னத்­தைப் பெறு­வ­தால் இழப்பு அதி­க­மா­கத் தெரி­ய­வில்லை. அடுத்த கட்­ட­மாக வெனி­சுலா மீது பொரு­ளா­தா­ரத் தடை நட­வ­டிக்­கை­களை எடுக்­கப் போவ­தாக அமெ­ரிக்கா அச்­சு­றுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது. அந்த எச்­ச­ரிக்கை உண்­மை­யா­னால் வெனி­சு­லா­வால் எழுந்து நிற்­கக்­கூட முடி­யாது. சாவே­ஸின் தேச­மான வெனி­சுலா இந்த நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து மீளுமா? என்­பதை உல­கம் பதை­ப­தைப்­பு­டன் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

You might also like