வெளிநாட்டில் உள்ளோரின் விவரத்தை திரட்டும் -உள்நாட்டலுவல்கள் அமைச்சு!!

0 28

வெளி­நாட்­டில் வசிக்­கும் உற­வி­னர்­க­ளின் பெயர் விவ­ரங்­களை யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள பிர­தேச செய­லங்­க­ளில் ஊடா­கச் சேக­ரிக்­கு­மாறு உள்­நாட்டு அலு­வல்­கள் அமைச்சு பணித்­துள்­ளது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

இது தொடர்­பான கடி­தங்­கள் பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள பிர­தேச செய­லர்­கள் பிரி­வில் வசிக்­கும் குடும்­பங்­க­ளில் வெளி­நாட்­டில் உள்­ள­வர்­க­ளின் விவ­ரங்­களே கோரப்­பட்­டுள்­ளன.

பொலிஸ் மா அதி­ப­ரின் வேண்டு ஷகோ­ளுக்கு அமை­வாக உள்­நாட்டு அலு­வல்­கள் அமைச்சு இந்த கடி­தத்தை மாவட்ட செய­ல­கத்­தின் ஊடாக பிர­தேச செய­லங்­கங்­க­ளுக்கு அனுப்­பி­யுள்­ளது.

வெளி­நாட்­டில் வசிக்­கும் அல்­லது வேலை நிமித்­தம் சென்­றுள்­ளோ­ரின் பெயர் விவ­ரங்­கள், அடை­யாள அட்டை உள்­ளிட்ட முழு­மை­யான தக­வல்­களை கிராம அலு­வ­லர் ஊடாக பெற்­றுத் தர வேண்­டும் என்று கோரப்­பட்­டுள்­ளது.

இந்த விவ­ரங்­கள் ஏன் சேக­ரிக்­கப்­ப­டு­கின்­றன என்­பது தொடர்­பில் பூரண விளக்­கங்­கள் குறிப்­பி­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்­பில் பிர­தேச செய­லர்­கள் சிலரை தொடர்பு கொண்டு கேட்­ட­போது-
வழ­மை­யாக வெளி­நாட்­டில் வேலைக்­காக சென்­றோ­ரின் விவ­ரங்­கள் வெளி­நாடு வேலை வாய்ப்பு பணி­ய­கத்­தால் எம்­மி­டம் கேட்­கப்­ப­டும்.

வெளி­நாட்­டில் வேலை புரி­வோ­ரின் பிள்­ளை­க­ளின் கற்­றல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உப­க­ர­ணங்­கள் வழங்­கு­வ­தற்­கா­க­வும் இந்த விவ­ரங்­கள் கேட்­கப்­ப­டும். ஆனால் உள்­நாட்டு அலு­வல் அமைச்சு தர­வு­களை ஏன் கேட் கின்­றார்­கள் என்­பது தொடர்­பில் எமக்கு தெளி­வில்லை என்று தெரி­வித்­த­னர்.

அதே­வேளை காணா­மல் ஆக்­கப்­பட்ட பலர் வெளி­நா­டு­க­ளில் தப்பி இருக்­கின்­ற­னர் என்ற கருத்து தென்­னி­லங்­கை­யில் முன்­வைக்­கப்­பட்­டும் நிலை­யில் இவ்­வாறு விவ­ரங்­கள் சேக­ரிக்­கப்­ப­டு­வது மக்­கள் மத்­தி­யில் பல சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளது.

You might also like