வெளிப்­ப­டை­யான கலந்­து­ரை­யா­டல் அவ­சி­யம்!!

ஈழத் தமிழ் இனத்­தின் மிகப் பெரும் அழி­வின், அவ­லத்­தின் அடை­யா­ள­மான மே 18 நெருங்­கு­கி­றது. அதை­யொட்­டிய ஆர­வா­ரங்­கள் அதி­க­மாகி இருக்­கின்­றன. வழக்­க­மா­க­வே இது­போன்ற பர­ப­ரப்­பு­கள் இந்­தக் காலப் பகு­தி­யில் ஏற்­ப­டு­வது இயல்­பு­தான்.

என்­றா­லும் இந்­தத் தடவை மே 18 நிகழ்வை அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் ஒன்­றி­ணைத்து மேற்­கொள்­வ­தற்­கான முயற்­சி­கள் எடுக்­கப்­ப­டு­வது போன்ற தோற்­றப்­பாடு இருக்­கி­றது. எனி­னும் தான் தோன்­றித்­த­ன­மான, தன்­னிச்­சை­யான, உரிய தரப்­பு­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல் இல்­லாத போக்கு ஒன்­றும் அதில் தெரி­கி­றது.

அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் ஒன்­றி­ணைப்­ப­தற்­கான முயற்சி என்று கூறிக்­கொண்டு பிரச்­சி­னை­களை வளர்த்­தெ­டுக்­கும் வகை­யி­லா­ன­தாக இந்த முயற்­சி­கள் அமைந்­து­வி­டக்­கூ­டாது. அதற்கு வெளிப்­ப­டை­யான விரி­வான கலந்­து­ரை­யா­டல் நடத்­தப்­ப­டு­வது அவ­சி­யம்.

கடந்த 3 வரு­டங்­க­ளாக முள்­ளி­வாய்க்­கா­லில் நினை­வேந்­தல் நிகழ்வு நடந்து வரு­கின்­றது. முதன்­மை­யான பெரு­மெ­டுப்­பி­லான நிகழ்வு வடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் நடந்து வரு­கின்­றது. இந்த நிகழ்வு காலை­யில் இடம்­பெ­றும். அதன் பின்­னர் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் ஏற்­பாட்­டில் முள்­ளி­வாய்க்­கால் கடற்­க­ரை­யில் ஒரு நிகழ்­வும், மாலை­யில் அங்­குள்ள தேவா­ல­யம் ஒன்­றில் ஒரு நிகழ்­வும் நடை­பெ­று­வது வழமை.

எனி­னும் காலை­யில் நடக்­கும் மாகாண சபை­யின் நிகழ்­வி­லேயே பெரும் எண்­ணிக்­கை­யான மக்­க­ளும் கலந்­து­கொண்டு வந்­த­னர்.
மாகாண சபை­யின் நிகழ்­வில் அனே­க­மாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், மாகாண சபை உறுப்­பி­னர்­கள் மற்­றும் நகர, பிர­தேச சபை­யி­னர் கலந்­து­கொண்டு வந்­த­னர். சீராக நடந்­து­வந்த இந்த நிகழ்­வில் கடந்த ஆண்டு திட்­ட­மிட்ட வகை­யில் சில குழப்­பங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­தன் உரை­யாற்ற முற்­பட்­ட­போது ஒரு சிலர் அவர் பேசக்­கூ­டாது என்று எதிர்ப்­புக் குரல் எழுப்பி நிகழ்­வைக் குழப்ப முயன்­ற­னர். ஆனால் அது பின்­னர் அடக்­கப்­பட்டு நிகழ்வு நடந்­தே­றி­யது. எனி­னும் அதன் பின்­னர் முத­ல­மைச்­ச­ரு­டன் இணைந்து ஒரு செய்­தி­யா­ளர் சந்­திப்பை அந்த இடத்­தில் நடத்­த­லாம் என்­றும் சம்­பந்­தர் அழைப்பு விடுத்­த­போது முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் அதனை நிரா­க­ரித்­து­விட்டு அங்­கி­ருந்து புறப்­பட்­டி­ருந்­தார்.

இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யில் இந்த ஆண்டு யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் , அனைத்து அர­சி­யல் தரப்­பி­ன­ரும் ஒன்­றி­ணைந்து முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை நடத்­த­வேண்­டும் என்று ஒரு கோரிக்­கையை விடுத்­த­னர். அந்த முயற்­சி­யின் மீது முத­லில் எதிர்ப்­புத் தெரி­வித்த தமிழ்க் காங்­கி­ரஸ் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மா­ரும் அவ­ரைச் சார்ந்­த­வர்­க­ளும், இப்­போது இணங்கி வரு­வ­தற்­குத் தயார் என்று தெரி­வித்­துள்­ள­னர்.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் ஒரு­பெ­ரும் நிகழ்­வாக நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது காலத் தேவை­யும் தமிழ் அர­சி­ய­லின் தேவை­யும்­கூட. அதில் மாற்­றுக் கருத்து இருக்க முடி­யாது. அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஒன்­றி­ணைந்து நினை­வேந்­தலை நடத்­து­வது வர­வேற்­கத்­தக்­க­து­தான் என்­றா­லும், அத்­த­கைய ஒரு முடிவு அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் உள்­ள­டக்­கி­ய­தா­க­வும் முக்­கி­ய­மாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் நேர­டிப் பிர­தி­நி­தி­க­ளுக்கு (அர­சி­யல்­வா­தி­கள் பொது அமைப்­பு­க­ளில் உள்­ள­வர்­க­ளைத் தவிர்த்து) சரி அரை­வா­சிப் பிர­தி­நி­தித்­து­வம் கொடுத்­த­தா­க­வும், வெளிப்­ப­டை­யா­ன­தா­க­வும் அமை­ய­வேண்­டி­யது முக்­கி­யம்

ஆனால், தற்­போ­தைய முயற்­சி­கள் அப்­படி நடப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. அனைத்­துத் தரப்­பு­க­ளை­யும் உள்­ள­டக்­கிய கலந்­து­ரை­யா­டல் ஒன்ற நடத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­பா­கவே, நிகழ்­வு­கள் யாழ். மறை­மா­வட்ட நீதி சமா­தான ஆணைக்­கு­ழு­வின் சார்­பில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளின் ஏற்­பாட்­டில் நடத்­தப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அர­சி­யல் உரை­களை அனு­ம­திக்க முடி­யாது அல்­லது 2 நிமிட நேரத்­திற்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
இத்­த­கைய முடி­வு­களை எவர் எடுத்­தது? எப்­போது எடுத்­தது? எந்­தக் கலந்­து­ரை­யா­டல்­க­ளின் அடிப்­ப­டை­யில் எடுத்­தது? அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணை­யக் கேட்­ப­வர்­கள் , எப்­படி இப்­ப­டி­யான தான்­தோன்­றித்­த­ன­மான முடி­வு­க­ளை­யும், தீர்­மா­னங்­க­ளை­யும் அனைத்­துத் தரப்­பி­ன­ரு­ட­னும் கலந்­து­ரை­யா­டா­மல் அறி­விக்க முடி­யும்? அதற்­கான அதி­கா­ரம் எவரால் இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.

முள்­ளி­வாய்க்­கால் தமிழ்த் தேசிய மீள் எழுச்­சி­யின் மைய­மாக இருக்­க­வேண்­டும் என்று பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் தமது முதல் அழைப்­பில் தெரி­வித்­தி­ருந்­தார்­கள். முள்­ளி­வாய்க்­கா­லில் அர­சி­யல் பேசக் கூ­டாது என்­பது அதற்கு முற்­றி­லும் முர­ணா­ன­தாக இருக்­கின்­றதே! வெறும் அஞ்­சலி நிகழ்வை நடத்­து­வ­தாக இருந்­தால் அதனை ஆல­யங்­க­ளி­லேயே நடத்­தி­விட்­டுப் போக­லாமே? எதற்­காக முள்­ளி­வாய்க்­கா­லுக்­குச் செல்­ல­வேண்­டும்?

இது­போன்ற குழப்­ப­க­ர­மான அறி­விப்­பு­க­ளை­யும், தன்­னிச்­சை­யான செயற்­பா­டு­க­ளை­யும் உட­ன­டி­யாக நிறுத்­தி­விட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் நேர­டி­யான பிர­தி­நி­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய அனைத்­துத்­த­ரப்­புக் கூட்­டத்தை உட­ன­டி­யாக மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் நடத்தி இந்த நிகழ்­வு­களை நடத்­து­வ­தற்­கான ஒரு சுயா­தீ­ன­மான குழுவை உரு­வாக்­க­வேண்­டும்.

அதை­வி­டுத்து அர­சி­யல்­வா­தி­க­ளி­டம் இருந்து நிகழ்வு நடத்­தும் அதி­கா­ரத்தை மற்­றொரு தரப்­புப் பிடுங்­கிக்­கொள்­வ­தாக தற்­போ­தைய முயற்­சி­கள் அமை­யக்­கூ­டாது. அத்­தோடு இது ஒரு மதத்­தி­னர் மட்­டும் சம்­பந்­தப்­ப­டும் நிகழ்­வும் அல்ல என்­ப­தால் அனைத்து மதப் பிர­தி­நி­தி­க­ளும் அந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் உள்­வாங்­கப்­ப­ட­வும் வேண்­டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close