ஸஹ்­ரா­னின் பயிற்சி முகாம் – காத்­தான்­கு­டி­யில் கண்­டு­பி­டிப்பு!!

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் பிர­தான முகா­மா­க­வும், நாட்­டில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளின் பிர­தான பயிற்சி நிலை­ய­மா­க­வும் மட்­டக்­க­ளப்பு காத்­தான்­கு­டி­யில் செயற்­பட்டு வந்த இடத்தை தாம் நேற்று அதி­காலை சுற்­றி வ­ளைத்து சோதனை நடத்­தி­யுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­விக்­கின்­ற­னர்.

மட்­டக்­க­ளப்பு – காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மண்­மனை, ஒல்­லிக்­கு­ளம் பகு­தி­யி­லேயே இந்த முகாம் இயங்கி வந்­துள்­ளது. இந்த அமைப்­பைச் சேர்ந்­த­வர் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் அப்­துல் ரவூப் என்­ப­வரை கைது செய்து அவ­ரி­டம் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்த முகாம் தொடர்­பில் தெரி­ய­வந்­த­தாக காத்­தான்­குடி பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

சாய்ந்­த­ம­ரு­தில் தற்­கொலை தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்த தற்­கொ­லை­தா­ரி­யான ரில்­வான் 2017ஆம் ஆண்டு பயிற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்த போது குண்­டு­வெ­டித்து கைவி­ரல்­க­ளை­யும், கண் ஒன்­றை­யும் இழந்­த­தாக ஆரம்ப கட்ட விசா­ர­ணை­யின் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக பொலி­ஸார் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

இங்­கி­ருந்தே தற்­கொலை தாக்­கு­த­லுக்­கான பயிற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­லாம் என­வும், குண்­டு­கள் இங்­கி­ருந்தே அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என­வும் பாது­காப்பு தரப்­பி­னர் சந்­தே­கம் வெளி­யிட்­டுள்­ள­னர். முகா­மில் இருந்து குண்­டு­களை அடைத்து கொண்டு செல்ல பயன்­ப­டுத்­து­வ­தற்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த பிளாஸ்­டிக் குழாய்­க­ளும் தயார் செய்­யப்­பட்ட நிலை­யில் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இது போன்ற குழாய்­களே கடந்த 21ஆம் திகதி கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­துக்கு அரு­கில் குண்­டு­க­ளு­டன் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் இங்­கி­ருந்­து­தான் அங்கு கொண்­டு­செல்­லப்­பட்­டதா என்­பது தொடர்­பில் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் பாது­காப்பு தரப்­பி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

முகா­முக்கு நூறு மீற்­றர் தூரத்­திற்­குள் யாரும் நுழை­யும் போது அதனை கண்­டு­கொள்­வ­தற்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ள­து­டன், முகா­மில் இருந்து இர­க­சி­ய­மான முறை­யில் வெளி­யே­றும் வழி­யும் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

இது தொடர்­பான விசா­ர­ணை­களை காத்­தான்­குடி பொலி­ஸார், விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னர், புல­னாய்­வுத்­து­றை­யி­னர் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

You might also like